Tuesday, October 6, 2015

2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பால்மைரா வெற்றி வளைவு தகர்ப்பு

பால்மைரா வளைவு ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தகர்ப்பு

First Published : 06 October 2015 01:13 AM IST
சிரியாவின் புராதன நகரான பால்மைராவில் புகழ்பெற்ற வெற்றி வளைவை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வெடி வைத்துத் தகர்த்ததாக அந்த நாட்டின்

 இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

 பால்மைரா நகரிலுள்ள வெற்றி வளைவை ஐ.எஸ்.பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை வெடி வைத்துத் தகர்த்ததாக, அந்தப் பகுதியிலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

 அந்த புராதனச் சின்னத்தில் பல வாரங்களுக்கு முன்னரே பயங்கரவாதிகள் வெடி குண்டுகளைப் பொருத்தியிருந்தனர்.

 அந்த வெற்றி வளைவு, பால்மைரா நகரின் அடையாளமாகத் திகழ்ந்து வந்தது.

 பால்மைராவை முற்றிலுமாக அழிக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக வெற்றி வளைவு தகர்க்கப்பட்டுள்ளது.

 பால்மைரா நகரின் வட்டரங்கம், அணிவகுக்கும் தூண்கள் ஆகியவையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.

 ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பால்மைரா நகரம் வீழ்ந்ததிலிருந்தே, தொடர்ந்து இதுபோன்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

 அந்த நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு சர்வதேச நாடுகள் வழி காண வேண்டும் என்றார் மாமூன் அப்தெல்கரீம்.

 பயங்கரவாதிகளால் வெற்றி வளைவு ஞாயிற்றுக்கிழமை தகர்க்கப்பட்டதை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மானும், உள்ளூர் தொல்லியல் ஆர்வலர் முகமது ஹசன் அல்-ஹோம்ஸியும் உறுதி செய்தனர்.

 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெற்றி வளைவு, அழகிய தூண்கள் அணிவகுக்கும் புராதன வீதியில் அமைந்துள்ளது.

 யுனெஸ்கோவால் பால்மைரா நகரம் கடந்த 1980-ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள், அந்த நகருக்குள் கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நுழைந்தனர்.

 அதனைத் தொடர்ந்து, அந்தப் புராதன நகரின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

 அதனை மெய்ப்பிக்கும் வகையில், பால்மைரா அருங்காட்சியகத்தின் முன் இருந்த புகழ்பெற்ற ஏதெனா சிங்கச் சிலையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஜூன் மாதம் தகர்த்தனர்.

 அதனைத் தொடர்ந்து, அந்த நகரின் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பால்ஷமின், பெல் கோயில்கள், புராதனக் கல்லறைக் கோபுரங்கள் ஆகியவை ஐ.எஸ். பயங்கரவாதிகளால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன.

 தற்போது, பால்மைராவின் அடையாளமாகத் திகழ்ந்து வந்த வெற்றி வளைவும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.