Tuesday, October 6, 2015

பெருமாள் முருகனின் மாதொருபாகன்' நாவலுக்கு இலக்கிய விருது

சர்ச்சைக்குரிய "மாதொருபாகன்' நாவலுக்கு இலக்கிய விருது

First Published : 06 October 2015 12:49 AM IST
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய, பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய "மாதொருபாகன்' நாவல், 2015-ஆம் ஆண்டுக்கான "சமன்வய் பாஷா சம்மான்' விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

 இந்த விருதை அடுத்த மாதம் (நவம்பர்) 28-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பெருமாள் முருகன் பெற்றுக்கொள்கிறார்.

 9 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், கவிதை - கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ள பெருமாள் முருகனின் சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2010-ஆம் ஆண்டு அவரது நாவலான "மாதொருபாகன்' வெளியானது. அதில் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தி அவர் எழுதியுள்ளதாக சில சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து, தனது இலக்கியப் பணியை நிறுத்திக் கொள்வதாக பெருமாள் முருகன் அறிவித்தார். அந்தசமயத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். 
இந்நிலையில், சர்ச்சைக்குரிய "மாதொருபாகன்' நாவல் இந்த ஆண்டுக்கான சமன்வய் பாஷா சம்மான் விருதுக்குத் தேர்வாகியுள்ளது.

 இதுகுறித்து பெருமாள் முருகன் வெளியிட்ட அறிக்கையில், "மாதொருபாகன்' நாவலுக்கு விருது வழங்கப்பட்டிருப்பது, நீண்ட நெடிய சிறப்புமிக்க தமிழ் மொழிக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி ;-தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.