Sunday, October 25, 2015

சில இலக்கிய நூல்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் – வ.உ.சிதம்பரம் பிள்ளை =1915

1

”வாக்குண்டாம்  நல்ல  மனமுண்டாம்  மாமலரான்
நோக்குண்டாம்”   என்றுதிக்கும்  நுற்சுவையஃ  தாக்கிய  ஓர்
ஒளவை  பொதுமறையை  ஆக்கியநம்  வள்ளுவரின்
தெளவையென  நாட்டும்  தரத்து.

நானான்  மணிக்கடிகை  நன்காய்ந்து  கொண்டேனஃ
தானான்  அடைந்த உயர்  ஆனந்தம் -தேனார்
உணவால்  மகார்மொழியால்  ஒண்டொடியால்  ஏர்சால்
மணமலரால்  பெற்றிலன்காண்  மற்று.

முன்னெறிகள்  என்று மொழியப்  படுகின்ற
பன்னெறிக  ளுள்ளும்  படருங்கால்  – நன்னெறியென்
றொன்றுகண்டேன்  அஃதுள்  உவந்துசென்றேன்  நான்மணியின்
நன்றுகண்டேன்  சில்லிடத்து  நான்.

நல்வழியக்  காத்திருக்க  நம்மோர்  அதுவிடுத்திங்
கல்வழியில் சென்றலைகின் றாரந்தோ  – தொல்வழியை
விட்டுப்  புதுவழியை  மேவுவதால்  தாழ்ப்பஞருவ்
பட்டுழல்வ  தொன்றே  பயன்.

 நல்வழியக்  காத்திருக்க  நம்மோர்  அதுவிடுத்திங்
கல்வழியில் சென்றலைகின் றாரந்தோ  – தொல்வழியை
விட்டுப்  புதுவழியை  மேவுவதால்  தாழ்ப்பஞருவ்
பட்டுழல்வ  தொன்றே  பயன்.

நன்றிக்குரியோர்.
வ.உ.சி.பாடல்கள் 1915 / 1999-நவம்பர்
பதிப்பாசிரியர், வரலாற்று ஆய்வாளர்
செ.திவான் எம்.ஏ., எம்.ஃபில்

வெளியீடு
வ.உ.சி.இலக்கியப் பேரவை
1 / 1 மதுரை ரோடு
திருநெல்வேலி சந்திப்பு.,627 007

இரண்டாம் பதிப்பு இலவசப் பதிப்பாக
 பாரதிக்குப்பின்,
84 ஆண்டுகள்  கழிந்து
 நெல்லைவாழ்  செ.திவான் முயற்சியில்
 வெளியிடப்பட்டுள்ளது. 
தற்போது
16 ஆண்டுகளுக்குப்பின்
இணையத்தில்  பதிவாக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.