Sunday, October 25, 2015

கடவுளும் வாணியும் ஒன்றெனல்.-வ.உ.சிதம்பரம் பிள்ளை பாடல்கள்



 வ.உ.சி. பாடல்கள் :
கடவுளும் வாணியும் ஒன்றெனல் 
கல்வியறி  வாய்நிற்குங்  காரணத்தால்  வெண்கமலச்
செல்வியெனப்  பேர்கொள்ளுஞ் ஐற்பரந்தான் – கல்வி
யடைதற்கு நற்றுயா மஃதடைந்த பின்ன
ரடைவதற்கு நற்பொருளா மஃது.
வாணியைத் தொழுவோர் அடையும் பலன்கள்
கல்வியறி  வாய்நின்று  கல்வியெலா  மீகின்ற
செல்வியடி  யுள்வைத்துச் சிந்திப்போர் -கல்வி
யறிவுற்று நன்றார்றி யாதிநிலை சார்ந்து
செறிவுற்று  வாழ்வர் தினம்..
நன்றி
வ.உசி பாடல்கள்
திவான்
வெளியீடு
வ.உ.சி.இலக்கியப் பேரவை
1/1, மதுரை ரோடு
திருனெல்வேலி சந்திப்பு
627 001
தாரணா சரஸ்வதி மந்திரம்:
ஓம் நமோ ப்ரம்னே தாரணம்மே அஸ்து
அநிரா கரணம் தாரெயிதா பூ யாசம்
கர்ண யொஹ் மாச் யோடுவம்
மாமாம் ஷியா ஓம்.
பாலா சரஸ்வதி தியான மந்திரம்:
மாலா ஷ்ரிணி புஸ்தக பாஸ ஹஸ்தாம்
பாலாம்பிகாம் ஸ்ரீ லலிதாம் குமாரீம்
குமார காமேஷ்வர கேளீலோலாம்
நமாமி கெளரீம் நவ வர்ஷ தேஸ்யாம்
ஜெபமாலை, ஓமக்கரண்டி, புத்தகம், பாசம் இவைகளை கொண்டவளும்,
, ஒன்பது வயது நிரம்பிய, கொடி போன்ற உடலாளும்,
இள வயது தேவியாகவும் விளங்கி காமேஸ்வரரிடம் பக்தி கொண்டவளும்
, பொன்னிற மேனி கொண்ட அன்னை பாலா சரஸ்வதியை நமஸ்கரிக்கின்றேன்.
ஓம் சரஸ்வத்யை நம:

0 comments:

Post a Comment

Kindly post a comment.