வாசகர் சந்தேகம்:
ஓரு மனிதனின் இரண்டாம் இதயம் புத்தகம். இதயத்தை இயக்கும் இதயம் (புத்தகம்). சுருங்கியும் விரிந்தும் உடல் முழுவதும் ரத்தத்தைக் கடத்துவது இதயத்தின் வேலை. ஆனால் தமிழ்ப் பதிப்புச் சூழலில் சில புத்தகங்கள் சுருங்கிக் கூட இல்லை. கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டே வருகின்றன.
பாதையோரம் மரம் நட்டுச் சென்ற முன்னோர்களின் பாதையில் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. பாதையில் கருவேலம் முள்ளை வெட்டிப் போட்டா செல்வது?
க.நா.சு, எஸ்.எஸ்.மாரிசாமி என பல முன்னோடிகள் அரிய நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளனர்.
இந்த நூல்களில் பெரும்பாலானவை தற்போது சுருக்கப்பட்டதாகவே கிடைக்கின்றன. பெரிய நூலாக இருந்தால் வாசகன் படிக்கமாட்டான் என்பதற்காக, எழுத்தாளரே சுருக்கி எழுதிய படைப்புகள் உண்டு. ஆனால் முழுமையாக மொழிபெயர்த்ததைச் சுருக்கிப் போடுவது, எந்த ஊர் நியாயம்? இது ஒருபுறம் என்றால், சுற்றுச்சூழல் தொடர்பாக வரும் பல புதிய நூல்கள் சுருக்கியே வந்துள்ளன. இது ஏன் என்றே தெரியவில்லை? இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன என்பதைக் குறியீடாகக் காட்டுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஏழு கடல் தாண்டிச் செல்லும் சிந்துபாத் போல, ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க, தமிழ் வாசகன் பல புத்தகங்களை வாங்கக் கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறான். இது சரியா? ஏன் இந்த ஏமாற்று?
செய்தி : தினமணி :
0 comments:
Post a Comment
Kindly post a comment.