சென்னையில் நடைபெறவிருக்கும் தென்னிந்திய புத்தகக் கண்காட்சியில் பதிப்பாளர்களுக்கு அரங்குகளை ஒதுக்க கணினி மூலம் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 760 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 37-ஆவது ஆண்டாக ஜனவரி 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் பதிப்பகங்களுக்கான அரங்கு ஒதுக்கீடு வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற்றது.
முப்பத்தாறு ஆண்டுகளாக இருந்துவந்த நடைமுறையை மாற்றி முதல் முறையாக கணினி மூலம் அரங்குகளுக்கான குலுக்கல் நடைபெற்றது.
இதில் 500 பதிப்பாளர்கள் பங்கேற்றனர். ஒதுக்கப்பட்ட அரங்குகள் குறித்த vவிவரங்கள் http:www.bapasi.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி : தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.