Tuesday, August 21, 2012

உலகநாடுகளில் விபத்துக்களின் தலந்கரம், இந்தியா! & சாராயத்தில் தள்ளாடும் தமிழக வீதிகள்......



20-08-2012 திங்கள் பிற்பகல் ஒருமணி. கலைஞர் தொலைக்காட்சியில் மக்கள் குரல் நிகழ்ச்சியில் பாடம் மாத இதழின் ஆசிரியர் அ.நாராயணனுடன் ஓர் நேர்காணல்  நிகழ்ச்சி. ஒளிபரப்பானது. சாலைப் பாதுகாப்பு என்பது எடுத்துக் கொண்ட பொருள்.

அந்நிகழ்வில் பங்கேற்றோர் தெரிவித்த கருத்துக்களையும், அ.நாராயணன் அளித்த பதில்களையும் தொகுத்தளிப்பதே இந்த வலைப்பதிவின் நோக்கம்.

சாலை விபத்துக்குத் தலையாய காரணம் தனிமனிதத் தவறுகள்தான் என்று கலந்துரையாடலைத் துவக்கினார், அ.நாராயணன்.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் கருத்துக்களைக் கூறத் துவங்கினர்.கலைஞர்  தொலைக்காட்சி எண்ணைத் தொடர்பு கொண்டவர்களிடம், கொடுத்துள்ள தலைப்பில் என்ன பேசப்போகின்றனர் என்று வினவப்படுகின்றது. தலைப்போடு தொடர்புடைய விதத்தில் பேசுபவர்களை  மட்டுமே அனுமதிக்கின்றனர்.

அத்தகையோருக்கும் நேர்காணும் சிறப்பு அழைப்பாளருக்கும் பாலமாகத் திகழ்ந்து செயல்படுவது சன் தொலக்காட்சியில் பணிபுரியும் சகோதரி. அவர் தன் கடமையைச் சிறப்புறவே செய்தார் என்பது பாராட்டுக்குரியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்ட  தொலைக்காட்சி நேயர்கள் விபத்துக்கான காரணங்களாகக் கூறியவற்றை முதலிலே காண்போம்.

டூ வீலர் விபத்துக்களே அதிகம். போலீசார் கண்டிப்புடன் இருக்கும்பொழுது கவசம் அணிவதும், இல்லாத நேரங்களில் அணியாமற் பயணிப்பதே பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணம், என்றார், ஒரு நேயர்.

நகரத்தில் சாலைகள் சரிவர கிடையாது. சேறும் சகதியும் தான். மேலும் ஆட்டோ / ஷேர் ஆட்டோக்காரர்களின் தொல்லைகள் வேறு. என்றார் மற்றொருவர்.

பழனியிலிருந்து ஒருவர், தமிழகத்தில் பல இடங்களில் தனியார் / அரசுத் துறை பஸ்களுக்குள் வசூலில் போட்டோ போட்டி. குறித்த நேரத்துக்குள் சென்று திரும்பவேண்டியதில் கடுமையான கட்டுப்பாடு. படிக்கட்டுக்களில் பயணிப்போரால் ஏற்படும் இடையூறு.களையும் காரணம் காட்டினார்.

பென்னர் என்பவர் கன்னியாகுமரியிலிருந்து பேசினார். குமரி-திருவனந்தபுரம் சாலையில் மட்டும் இற்ந்தோர் எண்ணிக்கை இந்த ஆண்டு 2025 பேர் என்று குறிப்பிட்டது அதிர்ச்சியைத் தந்தது. சாலைகள் குண்டும் குழிகளுமாக இருத்தலே காரணம் என்பது அவரது கருத்து.

கோவையிலிருந்து பேசிய ஓர் பெண்மணி, முன்பெல்லாம் லாரிகள் இரவு 7 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணி வரைதான் சாலைகளில் ஓடும். இப்பொழுது பகலிலும் ஓடுகின்றன. மினி லாரிகள் அதைவிட மோசம். டிராபிக் போலீசாரும் கண்டு கொள்வதில்லை. ஆட்டோக்களும் எக்கச்சக்கமானவர்களை ஏற்றிக்கொள்கின்றன. எனவே லாரி-ஆட்டோ/மினிலாரி மோதி ஏற்படும் விபத்துக்கள் மூலம் பலர் இறக்க நேரிடுகின்றது.என்று கணீர்க் குரலில் பேசி, பேட்டி எடுக்கும் பெண்மணியின் பாராட்டையும் பெற்றார்.

பிறிதொருவர், சென்னையில் மதுக்கடைகள் முன்பு ஒரே டூ வீலர் மயம்தான். அதில் 90% -க்கும் மேல் குடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுகின்றனர். அவர்களை, அருகில் உள்ள டிராபிக் போலீசாரோ, நகர்வலம் வரும் காவலர் வண்டிகளில் உள்ளோரோ அல்லது அப்பகுதியைக் கண்காணிக்கும் உயர் அதிகாரிகளோ கைது செய்வதில்லையே ஏன் என்று வினா எழுப்பினார். ( பதில் இல்லை )

மேலும், போக்குவரத்துத் துறையில் பஸ்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர் காலை 3-4 மணிக்கே வீட்டினின்றும் புறப்பட்டுப் பணிமனைக்கு வந்து வேலையைத் துவக்குகின்றனர். 8 மணி நேர வேலை தொடரும். அடுத்த ஷிஃப்ட்ட்டுகுரியவர்கள் வரவில்லை என்றால், இவர்களையே திரும்பவும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துகின்றது நிர்வாகம். ( நீண்ட தூரப் பஸ்களில் பலமுறை அல்லல்பட்ட அனுபவம் உண்டு ) ஓட்டும் வண்டிகளில் உள்ள குறைபாடுகளும் சரிப்படுத்தப் படுவதில்லை. ( போதுமான மெக்கானிக்குகள் டெப்ப்போக்களில் கிடையாது. ) தொடர்ந்து பணியில் ஈடுபடுவதால் ஏற்படும் சோர்வும், களைப்பும் டிரைவர் கண்டக்டர்களைப் பாதிப்பதால் விபத்துக்கள் நேரிடுவது சகஜமாகின்றது. ( சென்னையில் இரவும் பகலும் எல்லா முக்கிய இடங்களுக்கும் செல்ல பஸ்கள் உண்டு )

 எனவே, நாளொன்றுக்கு 6 மணிநேரவேலை என்றாக்ககிட வேண்டும். அப்படியென்றால், 4 ஷிஃப்டுகள் வரும். அதற்கேற்ற சம்பளம் கொடுத்தால் போதும். மேலும் சிலருக்கு வேலை கிடைக்கும். டிரைவர், கண்டக்டர்களும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் நேரமும் அதிகரிக்கும். அடுத்தநாள் நன்கு சுறுசுறுப்பாக வேலக்கும் வருவர். என்பதும் அவரது கருத்தாக அமைந்தது. (காவல் துறைக்கும் இதே முறையை அமுல் படுத்தலாம் )

பெரம்பலூரிலிருந்து பேசிய ஜெகதீஸ்வரன், பூரண மது விலக்கை அமுல்படுத்தினால் விபத்துக்கள் குறையும் என்றார்.

யாதவர் குல மக்கள் மன்றத் தலைவர் முழுக்கருத்தையும் சொல்வதற்குள் ”லைன்” கட் ஆகிவிட்டது. இது போன்று இன்னும் சிலருக்கும் ஏற்பட்டது.

மேலும் பேசிய ஓரிருவர் கூறிய கருத்துக்களும் இவற்றுள் அடங்கிப் போய்விட்டதால், தனியாகக் குறிப்பிடவில்லை.

பாடம் ஆசிரியர், அ.நாராயணன் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:-

அதிவேகம், குடித்துவிட்டு ஓட்டுதல், அலட்சியமாக ஓட்டுதல் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. மது அருந்துவது தனிப்பட்ட உரிமை என்றாலும், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சமூக விரோதச் செயலாகும்.

தேசீய சாலை ஆராய்ச்சி நிறுவனம், வாகன ஓட்டிகளில் மூன்றில் ஒருவர் குடிகாரர் என்று கணக்கெடுத்துள்ளது. இந்தியாவில், ஆண்டொன்றிற்கு 1,50,000 பேர் விபத்தில் இறக்கின்றனர். உலகத்தில் உள்ள நாடுகளில் விபத்தின் தலைநகரம் இந்தியா. கடந்த 5 ஆண்டுகளில் 67000 பேர் தமிழகத்தில் விபத்தால் இறந்துள்ளனர். 3.5 லட்சம் பேர் விபத்தால் காயமடைந்துள்ளனர். மொத்தத்தில் தமிழகத்தில் இறந்தோரின் எண்ணிக்கை முள்ளிவாய்க்காலில் இறந்தோரைவிட அதிகம்.25% ரோடு மேடு பள்ளம் காணம். லைட், ஹெவி லைசென்ஸுகள் தாறுமாறாக வழங்கப் படுவதும் ஒரு காரணம். கனரக வாகனங்களின் நடமாட்டமும் அதிகம்.

குடி போதையினால் 60%, அதிவேகத்தினால் 30% விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஏற்படு விபத்துக்கள் வாகன ஓட்டிகளோடு மட்டும் போய்விடுவதில்லை. சாலையில் செல்லும் அப்பாவிகளையும் பாதிக்கின்றது. சாலக் கட்டமைப்புக் குறைபாடுகளால் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை. ஓட்டப்படும் வாகனத்தின் எரிபொருள் செலவு அதிகமாகும். டயர்களின் தேய்மானம் அதிகமாகும் அவ்வளவுதான்; என்றும் குறிப்பிட்டார்.சாலகளில் உள்ள குண்டு குழிகள் ஸ்பீடு பிரேக்கர்களுக்குச் சமமானவைதான். எப்படி ஆடு, மாடு, மனித நடமாட்டம், இதர வாகனங்களின் ஓட்டம் ஆகியவற்றைக் கவனமாகப் பார்த்து ஓட்டுகின்றோமோ அதே கவனத்துடன் வாகனத்தைச் செலுத்தினால், குண்டு குழிகளால் விபத்து ஏற்படாது என்பதும் அவரது கருத்தாக இருந்தது.

தமிழகத்தில் 2005-ல் தினமும் இறந்தோர் எண்ணிக்கை 24. தற்போது 2012-ல் தினமும் இறப்போர் எண்ணிக்கை 44. இறந்து விட்டால் கூடப் பரவாயில்லை. இன்ஸூரன்ஸ் காப்பீடு, பணியாற்றுமிடத்திலிருந்து பெறும் சலுகைகள் கிடைக்கும். ஆனால், கை / கால் / முதுக்கெலும்பு முறிவு முதலியவை ஏற்பட்டால் நடைப்பிணந்தான். அவருக்கும் தொல்லை. அவரது குடும்பத்தினருக்கும் இடர்ப்பாடு. வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள ஹார்ன்கள் எச்சரிக்கை ஒலிக்காக மட்டும்தான். பிறருக்கு எரிச்சலூட்டுவதற்காக அல்ல.

அமெரிக்கா போன்ற நாடுகளில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிடப் பல கட்டுப்பாடுகள் உள்ளன.ப்ராஸஸ் செய்திட ஓராண்டுக் காலம் கூட ஆகும். தேர்வெல்லாம் கூட எழுத வேண்டும். லைசென்ஸ் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. வாகனங்களை ஓட்டும்பொழுது செய்யும் தவறுகள் ஒவ்வொன்றிற்கும் புள்ளிகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும். குறிப்பிட்ட புள்ளிகளுக்குமேல் சென்றுவிட்டால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுவிடுவது வழக்கம்.

ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் ”பார்” உள்ளே மது அருந்தச் செல்வோரின் “கார்” சாவிகளை நுழைவிடத்திலேயே வாங்கி வைத்துக் கொள்வர். குடித்தபின் வெளியே வருவோரை அவரவர் வீடுகளில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்தியாவில் போதுமான சாலை விதிகளும் இல்லை. இருப்பனவற்றையும் முறையாகக் கடைப்பிடிப்பதும் இல்லை. நடப்பதற்குப் பிளாட்பாரங்களும் இல்லை. வண்டி ஓட்டுபவர்கள் அடுத்தவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வதும் இல்லை. ஓட்டும்போது  வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டு விட்டால்,சாலைகளின் ஓரத்திற்குக் கொண்டு சென்றுதான் பழுது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கூடக் கிடையாது.( நடு ரோட்டிலேயே கடைவிரித்துவிடுவார்கள்.)

பள்ளிக்கூடத்திலும் , கல்லூரிகளிலும் சாலைவிதிகள் கற்றுத் தரப்படல் வேண்டும் வீட்டிற்குள் இருக்கும்பொழுது உள்ள நிதானமும், கனிவும், சாலைகளில் வண்டி ஓட்டும்பொழுது இருப்பதில்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட வெறித்தனமான தகறாறுகளில் ஈடுபடுகின்றனர். படகுக் கார்களில் தம் குழந்தைகளைக் கொண்டுபோய்ப் பள்லிக்கூடங்களின் வாயிலிற் கொண்டு போய் விடுவது கெள்ரவமாகிவிட்டது. பஸ்ஸில் பயணிப்பது கேவலமாகக் கருதப் படுகின்றது. கார்களின் காட்டுத் தர்பாரைக் கட்டுப் படுத்திட வேண்டும். ( பெட்ரோலுக்கு ரேஷன் கொண்டு வரப்பட வேண்டும் ) கந்து வட்டிக்கேனும் ம்டூ வீலரோ / காரோ வாங்கிப் பயன்படுத்தும் மோகம் வந்துவிட்டது. அனைத்திற்கும் காரணம், சந்தைப் பொருளாரம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நுகர்வுக் கலாச்சாரங்கள்தான்.

அவரவர் மனச்சாட்சிப்படி, இருக்கும் (குறைந்த பட்ச) சாலை விதிகளையாவது கடைப் பிடித்து நடந்தால் மனித உயிர்கள் பாதுகாக்கப்படும். இல்லை என்றால் இன்று செய்தியினைப் படிப்போர் நாளையே செய்தியாகி விடக்கூடும். இது எனக்கும் நடக்கலாம். உங்களுக்கும் நடக்கலாம்.

அண்மையில் உச்சநீதிமன்றம், தேசீய நெடுஞ்சாலைத் துறையிடமும், மத்திய அரசிடமும், சாலைப் போக்குவரத்துத் துறையில், உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லையே ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளது. இருவாரங்களுக்குள் பதில் சொல்ல வேண்டும் என்ற காலக் கெடுவையும் விதித்துள்ளது.

வெறும் நடைமுறைச் சம்பிரதாயங்களுக்குக் கொண்டாடும் பல விழாக்கள் போன்று, ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரத்தைக் கொண்டாடி வருகின்றோம். உண்மையான விழிப்புணர்வு ஏற்பட்வதில்லை. இந்த நிலையில் மாற்றம் வேண்டும்.

அரசு எவ்வழி, அவ்வழி மக்கள்! அரசு சரியான திசை வழியில் சென்றால், மக்களும் அவ்வாறே செல்வர். அரசு தவறு செய்தால், மக்கள் செல்லும் பாதையும், வாழ்க்கையும் தவறாகவே இருக்கும்.

தற்போதையக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும். நுகர்வுக்கலாச்சாரத்தால் ஏற்படும் பாதிப்புக்களை அகற்றிட, சமூக அக்கறையுடனும் , தொலை நோக்குப் பார்வையுடனும் செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் இந்தியாவில் வன்முறை பெருகுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.


சன் தொலக்காட்சி மக்கள் குரலில் சாலைப் பாதுகாப்பு என்னும் தலைப்பில் பாடம் ஆசிரியர் நாராயணனுடன், நேர் காணலும், பொது மக்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்ட நாள், 20-08-2012.

அக்டோபர், 2009  பாடம் மூன்றாவதுஇதழ், தமிழகத்தில்சாலைகளா? நரபலி பீடங்களா? என்ற முகப்பு அட்டையுடன் வெளிவந்தது. அதனையே இதற்குரிய படமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு பொது நல வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று சிலவற்றில் வெற்றில் வெற்றி பெற்றிருக்கின்றார். சிலவற்றில் வெற்றிக்காகக் காத்திருக்கின்றார். இவர் கொடுத்துள்ள பேட்டியே சான்றாகும்.



 

சென்ற 29-12-2010-ல்சென்னைஅண்ணா சாலையில் உள்ளதேவநேயப் பாவாணர் நூலகக்கட்டிடத்தில்வாங்க நேர்ந்த குறுந்தகடு (DVD), மீண்டும் வலைப்பதிவைத் தொடரத் தூண்டுகோலாய்அமைந்தது.


புகையிலையினால் ஏற்படும் சத்தமில்லாத மரணங்கள்சாராய சுனாமிதாய்ப்பாலையும்பசும்பாலையும் நஞ்சாக்கும் ப்ளாஸ்டிக்மௌனத்தைத் தகர்ப்போம்-குழந்தை பாலியல் கொடுமை,பெற்றால்தான் பிள்ளையா?-காப்பகங்கள் தீர்வல்ல-என நெஞ்சை நெகிழச்செய்யும் ஐந்து சமூகச்சிக்கல்களும்அதற்கான தீர்வுகளும் மேற்படி குறுந்தகட்டில் படமாக்கப் பட்டிருந்தன.

ஒவ்வொன்றும் ஒருமணிநேரம் கால அளவைக் கொண்டதுகாட்சி அமைப்புவசனம்ஒலிப்பதிவு,ஒளிச்சேர்க்கைஇயக்கம் எல்லாமே அற்புதம்.நாரயணன் தயாரிப்புஇயக்கம்:ஆர்.வெங்கட்ராமன்விலை 75 ரூபாய்தான்.

கிடைக்குமிடம்பாடம் பதிப்பகம், 2/628, ராபிட் நகர்கெருகம்பாக்கம்சென்னை-602 101.

ஒவ்வொரு வலைப்பதிவாளரும் பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல்புகைக்கும்குடிக்கும்அடிமையாய் உள்ள தெரிந்தோரை எல்லாம் பார்த்திடச் செய்தல் வேண்டும்.

தெருவெல்லாம் சாராய முழக்கம் செய்து, தலைமுறையே நாசமாக்கப்பட்டுவரும், இன்றைய சூழலில், தினமும், ஒருவரையாவது, புகைப்பதையும், குடிப்பதையும் நிறுத்திடச் செய்ய வலைப்பதிவாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

புகையும்குடியும் இல்லாத சூழலை உருவாக்கிடவலைப்பதிவர்கள், 2011-ஆம்ஆண்டிலிருந்தேனும் செயல்படத் துவங்கிட வேண்டுகின்றேன்.


மீண்டும் மீண்டும் நினைவிற் கொள்ள வேண்டிய தகவலாதலால் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.