Monday, August 20, 2012

நிலக்கரி, மின்சாரம்,விமான நிலையம் கோடிக்கணக்கில் ஊழல்!மத்திய தலைமைக்  கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி  ( சிஏஜி )
கண்டறிந் துள்ள  மோசடிகள் பின்வருமாறு :-

நிலக்கரி ஊழல் மோசடி :-

2004 ஆம் ஆண்டு முதல் 1,86,000/- கோடி ரூபாய் நிலக்கரிப் படுகைகளைத் தனியாருக்கு ஒதுகீடு  செய்ததில் கொள்ளை.

தில்லி விமானநிலைய ஊழல்

 மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறையும், இந்திய விமான நிலைய ஆணையமும்  இணைந்து வெறும் ரூ.2ஆயிரத்து 450 கோடி பங்குத்தொகை அளித்த தனி யார் நிறுவனம், 240 ஏக்கர் நிலத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள் வதற்கான அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  இதன்மூலம் அடுத்த 58 ஆண்டு காலத்தில் ரூ.1லட் சத்து 63ஆயிரத்து 557 கோடி அளவிற்கு அந்தத் தனியார் நிறுவனங்கள் வ்பருவாய் ஈட்டமுடியும். இப்படி கிடைக்கப்போகும் வருமானத்திலிருந்து டெல்லி  சர்வதேச விமான நிலையத்திற்குக்  கிடைக்க உள்ள பங்கு ரூ.88 ஆயிரத்து 337 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலம் தவிர, மேலும் கூடுத லாக 190.19 ஏக்கர் நிலமும் மேற் கண்ட தனியார் நிறுவனத் திற்கு குத்தகைக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த ஒட்டு மொத்த நிலத்தையும் நீண்ட காலத்திற்கு அனுபவிக்க உள்ள இந்த நிறுவனம், அதற்கு கட்டணமாக வெறும் ரூ.6.19 கோடி மட்டுமே செலுத் தியுள்ளது.

ஆனால் இதே விமான நிலையத்தை பயன்படுத்து வதற்காக அரசு நிறுவனங் களான சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்கு நரகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் ஆகியவற்றிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணங் களைவிட மேற்கண்ட தனி யார் நிறுவனத்திடம் வசூலிக் கப்பட்ட கட்டணம் மிகமிகக் குறைவு என்பதும் கவனிக்கத் தக்கது.
இவைதவிர, மேற்கண்ட தனியார் நிறுவனத்திற்கு, ஏலம்விடப்பட்ட பின்னரும், ஒப்பந்தம் முடிந்தபின்னரும் சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை யனைத்தும், ஏல நடைமுறை கள் சார்ந்த அனைத்து விதி முறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்துகிறது.

மேலும், மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகமும் விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையமும், மேற்கண்ட நிறுவனத்தை பயணிகளிடம் விமான நிலைய மேம்பாட்டுக்கட் டணம் வசூலித்துக் கொள்ள அனுமதியும் அளித்துள்ளன. இப்படி வசூலிக்கப்பட்ட தொகை ரூ.3,415.35 கோடி ஆகும். இதுதொடர்பாக 2009 பிப்ரவரி மாதம் சிவில் விமானப்போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, விமான நிலை யங்கள் மேலாண்மை மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்திற்கும், இந்திய விமானநிலைய ஆணையச் சட்டம் மற்றும் விமானநிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் ஆகிய அனைத்திற்கும் நேர் எதிரானதாகும்.

ரிலையன்ஸ் மின்நிறுவனத்தின் மோசடி


இதேபோல, , ரிலை யன்ஸ் பவர்ஸ் லிமிடெட் (ஆர்பிஎல்) என்ற தனியார் பெருமுதலாளியின் நிறுவனம், அரசுக்குச் சொந்தமான நிலக் கரியை சுருட்டியதன் மூலம் கொள்ளை லாபம் அடித்தது தொடர்புடையதாகும்.

மத்தியப் பிரதேச மாநிலத் தில் ஷசான் என்னும் இடத் தில் அரசுத் திட்டத்தின்கீழ் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்த அதிநவீன மெகா மின்திட்டத்திற்கு அரசுக்குச் சொந்தமான மூன்று நிலக்கரி படுகைகளிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரியை, அனுமதிக்கப்பட்ட அளவிற் கும் அதிகமாக எடுத்ததன் விளைவாக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இத்திட்டம் தொடர்பான டெண்டரின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியது மட்டு மல்ல; இதன்மூலமாக ரிலை யன்ஸ் பவர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரும் அளவில் நியாய மற்ற லாபம் கிடைத்துள்ளது. சிஏஜியின் அறிக்கை, ரிலை யன்ஸ் பவர் நிறுவனத்தின் இத்தகைய மோசடிச் செய லால் ஒட்டுமொத்தமாக ரூ.29 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள் ளது என்பதை மிகத்தெளிவாக விளக்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான சிஏஜி வெளியிட்டுள்ள இந்த அறிக்கைகளை, அந்த அமைப்பிற்கு அரசியல் சட் டப்பூர்வ அதிகாரம் இல்லை என்ற கோணத்தில் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கும் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை கள் பெரும் அதிர்ச்சியளிப்ப தாக உள்ளன. மோசடித்தன மான முதலாளித்துவம் அரங் கேற்றுகிற இத்தகைய கீழ்த்தர மான நடவடிக்கைகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத் தின் அவமானச் சின்னங் களாக மாறிப்போய் இருக் கிறது. நாட்டு மக்களின் உணவுப்பாதுகாப்பிற்கும், சத்துணவு கிடைப்பதற்கும் செலவழிக்க முடியாது என்று கைகளை இறுகமூடிக்கொள் ளும் அரசு, பொதுக்கருவூலத் திற்கு இவ்வளவு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ள பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் பலனடைவதற்காக அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பது ர்ந்தவகையில் நியாயம்?..

மேலும்,  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழி
காட் டியது போன்று, ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளின் அடிப்படையில், அரசுக்கு ஏற் பட்ட இழப்புகள் அனைத் தையும் மீட்பதற்கான
 நட வடிக்கைகளை  நடுவரசு மேற்கொள்ளுமா என்பதே  இன்று மக்கள் மன்றம் எழுப்பிடும் வினா.  தக்க விடை கிடைக்குமா?.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை ஏல முறையில் உரிமை அளிப்பதில்லை என்பது பரதீய ஜனதா கட்சி செய்த முடிவு. அதே போன்று, நிலக்கரிப்படுகைகளை ஒதுக்கீடு செய்வதிலும் ஏல முறையைப் பின்பற்றுவதில்லை என்பதும் பா.ஜ.கட்சி எடுத்த முடிவுகள்தான். அவற்றையே  இன்றைய மத்திய அரசும் பின்பற்றி வருகின்றது என்பதே பதிலாகக் கூறப் படுகின்றது. அவர்கள் தவறு செய்திருந்தால், அவற்றைத் திருத்துவதுதானே உங்களின் முதற் கடமையாக இருக்க வேண்டும்?

காங்கிரசும், பா.ஜ.வும் இல்லாத புதியதோர் அரசு மத்தியில் அமைக்கப்படவேண்டும். அதற்குரிய வாய்ப்பும் வசயுமுடைய காலக் க்ட்டத்தில் தமிழக முதல்வரின்மீது காலமிடும் கட்டளையாகும்.

1 comments:

  1. அப்ப தமிழகத்தில் ஊழலே இல்லை என்று முடிவுகட்டிவிட்டீர்களா? நீதி மன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி என்ன சொல்வது?
    காமராஜர் கூறியதுபோல் 'இரண்டு திராவிடக்கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே'

    ReplyDelete

Kindly post a comment.