Monday, August 20, 2012

விக்கிலீக்ஸ் அசாஞ்ஜேவைக் கைகது செய்திட அதிரடித் திட்டம் ?

ந்மது நாட்டில் நடுநிலை இதழ் என்பது நாளேடுகள் / பத்திரிக்கைகளின் தலைப்பாக இருக்கும். ஆனால், யோசித்துப் பார்த்தால் நடு நிலைமை என்ற ஒன்று எப்பொழுதுமே நடைமுறையில் சாத்தியப்படாது. விலகி வேண்டுமாயின் சென்று விடலாம். தேர்ந்த்டுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் ந்டுநிலைமை வகிக்கின்றோம் என்று சொல்வதும்,வெளிநடப்பு செய்கின்ரோம் என்று சொல்வதும் கூட நன்றன்று. ஆதரித்து/எதிர்த்து வாக்களிக்கவேண்டும். அவமானப்படுத்தப்பட்டால் கூச்சல் குழப்பம் போடாமல், காரணியாய் இருந்தோர் மன்னிப்புக் கேட்கும் வரை உட்காராமல் எழுந்து நின்று எதிர்ப்பைக் காட்டலாம். அவசியமானால், சட்டசபை முடிந்தபின்னர் கூட தொடர்ந்து உள்ளிருக்கலாம். நிச்சயமாகக் காந்தீயம் கைவிடாது. ஏதவதொரு கட்டத்தில், மெள்னத்திகைக் கலைத்து, அல்லது மறைமுகமாகச் சிலரை ஆதரிக்கவே இந்த நடு நிலைமை பயன்படுத்ப் படுகின்றது.எந்த ஒரு சிற்றிதழுக்குக்கூட ஒரு அரசியல் இருக்கும். அப்படி என்றால் ந்டுநிலைத் தன்மை எப்படி இருக்க முடியும்? ஆளுங்கட்சியை முற்றிலுமாக ஊழல்-ஊழல் என்று சொல்லிக் கொண்டு ப்லபட விமர்சனமும் செய்து, கார்ட்டூன் போட்டு ஊழலை வெளிப்படுத்தும் பத்திரிக்கைகள், ஆள்வோர் /ஆதரிப்போர் தரும் பல பக்க விளம்பரங்களை ஏற்றுக் கொண்டு பிரசுரிப்பது ஏன்? ஆள்வொர் தமது கொள்கைகளையும், திட்டங்களையும், அவற்றால் மக்கள் அடந்த-அடையப்போகும் பலன்களையும் மக்களுக்குத் அரசுப் பத்திரிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்திவிட்டால் போதுமே. ஒரு FM மூலம் ஆங்கங்கே தகவல்களைத் தந்து கொண்டே இருக்கலாமே !பலருக்கு அரசு வேலையும்கொடுக்கலாம். விளம்பரம் மூலம் வருமானமும் பெருகும். மத்திய அரசு தடுத்தால், எஙகள் மாநிலத்தில் ஒலி/ஒளி பரப்பும் உரிமையைக் கோரிப் பெற்றிடல் வேண்டும். பொதிகை அனைத்திந்தியாவிற்கும். தமிழகத்திற்குத் தனியாக இர்ந்தால் என்ன தவறு. மாநில ஒலிபரப்பை மத்திய அரசு தடுப்பதே ஜனநாயக மீறல் அல்லவா? தமிழரசு என்றொரு இதழ் அரசு நடத்தியது தற்பொழுது வருகின்றதா என்று தெரியவில்லை. தமிழகம் முழுவதற்குமான பொதுச் செய்திகள்/ தொகுதிவாரியான செய்திகள் என்று இரண்டே பிரிவுகளில், தமிழகத்தின் மொத்த தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசாமாகவே அனுப்பிவைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாமே. இன்று எடுத்துக் கொண்ட தகவலுக்குள் நுழைவோம்.விக்கீலீக்ஸ், JULIAN ASSANGE ~ஆள் 2006-துவக்கப்பட்டது. 2010-ல் அமெரிக்க மக்கள் பதிநெட்டுப்பேரை, விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து சுட்டு வீழ்த்தும் காட்சியை அப்படியே மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.இவ்வாறாக அனைத்து நாடுகளின் தவறான செயல்பாடுகளையும் ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டியது. உண்மை எப்பொழுதுமே சுடுமல்லவா? சூடு பட்டவர்களுக்கு ஆத்திரம் கொப்பளிக்கின்றது. உலகின் சட்டாம்பிள்ளை ( பொருள் தெரியாவிட்டால் இன்னம்பூரான் ஐயாவிடம் கேட்கலாம் ) அமெரிக்காவின் கோபத்திற்கும் ஆளாக்கியது. கோபக்கனலினின்றும் தப்பித்திட அசாஞ்சே இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார்.இந்நிலையில் இவர்மீது ஸ்வீடனில் செக்ஸ் புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு ஸ்வீடன் கோரியது. அனுப்புவதற்கான மேல் நடவடிக்கைகளை இங்கிலாந்து மேற்கொண்டது. இந்தச் சூழலில், விக்கீலீக்ஸ், JULIAN ASSANGE லண்டனில் உள்ள ஈக்வடார் துதரகத்தில் ஜுன் 19 தேதி அடைக்கல்ம் புகுந்தார். இரு மாதங்களாகிவிட்டன. தூதரகத்தைத் தாக்கப் போவதாக பிரிட்டனும் மிரட்டியுள்ளதாவும் தகவல். இதனையடுத்து தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அசாஞ்சே தாராளமாகத் தங்கலாம் என்று, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ரிகார்டோ பாட்டினோ நேற்று தொலக்காட்சி மூலம் பகிர்டங்கமாகவே அறிவித்துள்ளார். அசாஞ்சே வெளியிட்டவற்றில் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளின் அரசு மற்றும் இராணுவ ரகசியங்கலே அதிகம். அதனாலேயே அவற்றிற்கு அசாஞ்சேயின் மீது கடுங்கோபம். வியன்ன ஒப்பந்தத்தின்படி துதரகத்துக்குள் போலீசார் நுழையக் கூடாது. மேலும், ஈக்வடார் அமைச்சரவையும் அசாஞ்சேக்கு தஞ்சமளிக்க ஒப்புதல் அளித்துவிட்டது. இங்கிலாந்து நாட்டில் அஜாஞ்சேவுக்கு ஆதரவாகவும், ஈக்வடார் நாட்டை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பிய பொதுமக்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.. வல்லரசு நாடுகளின் அட்டகாசங்களை உலகிற்குத் தன் இணையதளம்மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டினார், விக்கீலீக்ஸ், JULIAN ASSANGE . தற்பொழுது இலண்டலினில் உள்ள ஈக்வடார் துதரகத்தில் பாதுகாப்பாக உள்ளார். ஈக்வடார் அரசும் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்க உறுதியளித்துவிட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், அசாஞ்சே. அந்நாடு அவரைக் கைகழுவி விட்டது. ஆனால், விக்கிலீக்ஸ் அதிபரக் கைது செய்திட, லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரக்த்திற்குள் அதிரடியாய் நுழைய லண்டன் போலீஸ் திட்டமிட்டுள்ளது. கைதானல் ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுவார். ஸ்வீடன் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடும். அதைத் தடுக்கவே, விக்கீலீக்ஸ், JULIAN ASSANGE, ஈக்வடார் நாட்டின் உதவியோடு போராடி வருகின்றார். அவரது முயற்சிகள் வெற்றிபெறுவதாக!

0 comments:

Post a Comment

Kindly post a comment.