சென்ற 29-12-2010-ல், சென்னை, அண்ணா சாலையில் உள்ள, தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில், வாங்க நேர்ந்த குறுந்தகடு (DVD), மீண்டும் வலைப்பதிவைத் தொடரத் தூண்டுகோலாய் அமைந்தது.
புகையிலையினால் ஏற்படும் சத்தமில்லாத மரணங்கள், சாராய சுனாமி, தாய்ப்பாலையும் பசும்பாலையும் நஞ்சாக்கும் ப்ளாஸ்டிக், மௌனத்தைத் தகர்ப்போம்-குழந்தை பாலியல் கொடுமை, பெற்றால்தான் பிள்ளையா?-காப்பகங்கள் தீர்வல்ல-என நெஞ்சை நெகிழச்செய்யும் ஐந்து சமூகச் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் மேற்படி குறுந்தகட்டில் படமாக்கப் பட்டிருந்தன.
ஒவ்வொன்றும் ஒருமணிநேரம் கால அளவைக் கொண்டது. காட்சி அமைப்பு, வசனம், ஒலிப்பதிவு ,ஒளிச்சேர்க்கை, இயக்கம் எல்லாமே அற்புதம். அ.நாரயணன் தயாரிப்பு; இயக்கம்: ஆர்.வெங்கட்ராமன். விலை 75 ரூபாய்தான்.
கிடைக்குமிடம்: பாடம் பதிப்பகம், 2/628, ராபிட் நகர், கெருகம்பாக்கம், சென்னை-602 101.
ஒவ்வொரு வலைப்பதிவாளரும் பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், புகைக்கும், குடிக்கும் அடிமையாய் உள்ள தெரிந்தோரை எல்லாம் பார்த்திடச் செய்தல் வேண்டும்.
தெருவெல்லாம் சாராய முழக்கம் செய்து, தலைமுறையே நாசமாக்கப்பட்டுவரும், இன்றைய சூழலில், தினமும், ஒருவரையாவது, புகைப்பதையும், குடிப்பதையும் நிறுத்திடச் செய்ய வலைப்பதிவாளர்கள் முயற்சிக்க வேண்டும்.
புகையும், குடியும் இல்லாத சூழலை உருவாக்கிட, வலைப்பதிவர்கள், 2011-ஆம் ஆண்டிலிருந்தேனும் செயல்படத் துவங்கிட வேண்டுகின்றேன்.
Friday, January 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.