மேற்குத் தொடர்ச்சி மலையின்மேற்குப்பக்கம் பாயும் நதிகள், நேத்ராவதி, காலி நதி, சரசுவதி!
இவை மலைப்பகுதிகளில் எண்பது மைலும், சமவெளியில் முப்பது மைலும் பாய்ந்தோடி அரபிக் கடலில் சங்கமமாகின்றன, வீணாக!
இந்த நதிகள் உற்பத்தியாகும் மலை உச்சியிலும், அடிவாரத்திலும் குளங்கள் வெட்டி நீரைத் தேக்கவேண்டும். இதற்கு பம்ப் ஸ்டோரேஜ் மெஷினைப் பயன்படுத்த வேண்டும்.
மேலிருந்து கீழே விழும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். பவர் ஜெனரேட்டரைக்கொண்டு பம்பிங்க் செய்தால் குளத்து நீர் வழிந்து கிழக்குப்பக்கமாகக் காவிரியில் போய்ச் சேரும்.
யாருக்கும் பயன்படாமல் அரபிக்கடலில் சங்கமித்து வீணாகும் நீர் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். மேற்படி நதிகள் பாயும் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம். ஆண்டும் முழுவதுமே இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியும். மலைவளம் காத்திடலாம். சுற்றுச் சூழலையும் பேணிடலாம்.
16000ம் கோடி செலவாகும். மூலதனம் செய்திட டாடா நிறுவனம் தயாராய் உள்ளது. மின் விற்பனை அவர்களுக்கு லாபம் தரும். முப்பது ஆண்டுகள் குத்தகைக்குப்பின் அரசுக்கே திரும்பவும் கிடைத்துவிடும்.
"கர்நாடக-தமிழக விவசாயிகளின் நல்ன் கருதி, சம்பளமின்றிப் பணியாற்றித் திட்டத்தை நிறைவேற்றிட நான் தயார்."
என்று சொல்பவர் யார்? ஹிராகுட், சம்பல், துங்கபத்ரா, நர்மதா அணக்கட்டுக்களை கட்டியவர். இந்திய அரசின் தலைமைப் பொறியாளராகவும் இருந்தவர். ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகராகவும் திகழ்ந்தவர். தற்பொழுது சகயோக அமைப்பின் தலைவராகவும் இருக்கின்ற, பவானி சங்கர் என்ற பொறியாளர்.
தமிழக-நடுவண்- கர்நாடக அரசுகள் அறிவியலாளரின் கருத்துக்கு செவி சாய்க்குமா?
தகவல் உதவி: சாகுல் அமீதை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தமிழ் முழக்கம் வெல்லும் , மாதமிருமுறை இதழ். -ஜனவரி (௧-௧௫.)
Friday, January 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.