Sunday, January 9, 2011

தலாய்லாமாவும் நாடுகடந்த அரசின் அங்கீகாரமும்;_

௨௩-௧௨-௨0௧0-ல் முத்தமிழ்வேந்தன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலை பொள்ளாச்சி நசன் , தனது, இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

"இமாசலப்பிரதேசம், தர்மசலாவில், தலாய்லாமாவின் நாடு கடந்த அரசு இயங்குகின்றது." என்பதே அதன் கருப்பொருள்.

தலாய்லாமா.காம் தரும் தகவல் என்ன?

திபெத்தியர்கள் நலனுக்காக,நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு, தலாய்லாமாவால், ௨00௯- இரண்டாயிரத்துஒன்பதில் ஒரு அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.

தலாய்லாமாவின் இராஜதந்திர நடவடிக்கைகள்,

அவரது இந்திய, அயல்நாட்டுப் பயணங்கள், தினசரி நிகழ்வுகள்,

திபெத்தின் மத்தியப் பகுதி நிர்வாகம்,

முதலியவையே அந்த "ட்ரஸ்ட்"-டின்

குறிக்கோள் என்ற தகவலையும் தருகின்றது.

தலாய்லாமாவும், அவரது ஆதரவாளர்கள் பலருடன், திபெத்தை, சீனா ஆக்கிரமிப்புச் செய்த போது (௧௯௫௯)-ஆயிரத்துத் தொழாயிரத்து ஐம்பத்துஒன்பதில் இந்தியாவில் அடைக்கலமாயினர்.

அறக்கட்டளை அமைக்கப்படும்வரை அவரது செலவுவகைகள் எவ்வாறு சமாளிக்கப்பட்டன, சி... டாலர் கணக்கில் கொடுத்ததாக விக்கிபீடியா சொல்லும் தகவலின் உண்மைத் தன்மை, தர்மசலாவில், திபெத்தியப் பண்பாடு, கல்வி கற்றுத்தர ஏற்பாடுகள் என்பனவெல்லாம் வேறு விஷயங்கள்.

நாடு கடத்தப்பட்டோ- தாயகத்திலிருந்து பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தோ வந்தவர்கள், உலகில் வேறேங்கிலும், இதுபோன்று செயல்பட முடியுமா? செயல்படுகின்றார்களா?

இந்தியாவில் பிறந்ததனால் இந்தியக் குடியுரிமையுடன் வாழ்கின்ற இந்திய மக்களின் உணவு, உடை, உறையுள் முதலானவற்றிற்கெல்லாம் உத்தரவாதம் தர இயலாத இந்திய அரசு தலாய்லாமாவிற்காக எவ்வளவு செலவிடுகின்றது என்பதை யாராவது த்கவல் அறியும் சட்டத்தின் வாயிலாகக் கேட்டுச் சொல்வார்களா?

தற்போதைய தலாய்லாமாவின் செங்கோலாட்சியைத்தான், முத்தமிழ் வேந்தன், நாடு கடந்த அரசு என்று மின்னஞ்சலில் குறிப்பிடுகின்றாறோ?

வலைப்பதிவு நண்பர்களிடமிருந்து பதில் கிடைக்குமா?


1 comments:

  1. புதியத்தகவல்... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Kindly post a comment.