Tuesday, January 11, 2011

தமிழில் இணைய இதழ்கள்

தமிழில் உள்ள இணைய இதழ்கள் குறித்த தகவல்களைத் தொகுக்கும் எண்ணம் தோன்றியது. அதன் விளைவே இன்றைய பதிவு. இணையத்தில் தமிழ் என்று ஒரு கட்டுரை மு.பழனியப்பன் எழுதியதை திண்ணை ௨௫-0௪-௨0௧0-ல் வெளியிட்டுள்ளது. சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகம், தேனி.சுப்பிரமணியம் எழுதிய தமிழ் இணையச் சிற்றிதழ்கள் நூலினை வெளியிட்டுள்ள செய்தியைத் தமிழ் விக்கிபீடியா தெரிவிக்கின்றது.

முனைவர் துரை மணிகண்டன் எழுதிய இணையமும் தமிழும் புத்தகம், சென்னை-17-ல் 17/3சி மேட்லி சாலயிலிருந்து வெளியிடப் பட்டுள்ளது. இணையம் ஓர் அறிமுகம், இணையத்தின் வரலாறு, இணையத்தில் தமிழ், இணயம் தொடர்பான மாநாடுகள்-கருத்தரங்குகள், இணயத்தில் தமிழில் பயன்பாடு, இணயத்தில் தமிழ்க்கல்வி, இணையத்தில் தமிழ் மின் இதழ்கள், இணயத்தில் தமிழ் மின் நூலகம், இணயம் வழி கணினி ஆய்வுகள் என்று ஆரம்பப் பள்ளி மாணவன் கூடப் புரிந்துகொள்ளுமாறு விளக்கமாக எழுதியுள்ளார். சுமார் 150 இணையத் தமிழ் இதழ்களின் முகவரியைத் தேடித்தந்திருப்பது நல்ல சாதனை!

மேலும் முற்சித்தபோது அண்ணா கண்ணன் உதவிக்கு வந்தார். அவர் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் எம்ஃபில் பட்டம்பெற எடுத்துக் கொண்ட பொருள், "தமிழில் இணைய இதழ்கள்" என்பதாகும். அமுதசுரபி( ஏ-. இரண்டாம் அவென்யூ, அண்ணா நகர் கிழக்கு, சென்னை-௬00௧0௨ ) மேற்படி ஆய்வேட்டினைப் புத்தகமாக்கியுள்ளது.

அவரது ஆய்வு முடிவுகளாகத் தெரிவிப்பது. . இணையம் உலகத்தைச் சுருங்கும்படிச் செய்துவிட்டது. . இணையம் இன்று பல துறைகளிலும் மனிதனுக்குத் துணை செய்கிறது. . அச்சிதழ்கள், வருங்காலத்தில் மறைந்து விடலாம். மூன்றாவது முடிவின் அறிவிப்பால்தான் இவரது புத்தகத்தை, சென்னை புத்தகக் காட்சியில் வாங்க முடியவில்லை போலும். ஆம். அமுதசுரபி அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கின்றது.

௨௮-க்கும் மேற்பட்ட வினாக்கள் கொண்ட பட்டியலைத் தயாரித்து, சில இணைய இதழ் ஆசிரியர்களோடு தொடர்புகொண்டு த்கவல்களச் சேகரம் செய்துள்ளார். காலத்தின் தேவைக்கேற்ற அரியதோர் முயற்சி. தமிழ் இணைய இதழ்கள் ஓர் அறிமுகம், தோற்றமும் வளர்ச்சியும், உள்ளடக்கம், வணிக நிலை என்ற நான்கு பிரிவுகளில் திரட்டிய செய்திகளைத் தந்துள்ளார்.

உலக மொழிகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் கோடிக்கணக்கான் இணைய தளங்கள் இருக்கக் கூடும். ஆங்கில அகர வரிசையில் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுவரை, இவற்றைப் பட்டியலிட்டார், ஒருவர். அவரது பெயர், ஜான் லிபோவிட்ஸ். இணையதளத்தை நடத்த முடியாமல் அவரது முயற்சிகள் தொடரவில்லை. தற்போது தமிழ் இணைய தளங்கள் எழுபதாயிரத்திற்கும் மேல் உள்ளன. ஏன் இலட்சத்தைத் தாண்டியிருந்தால் கூட வியப்பதற்கில்லை.

ஆயிரத்துத் தொழாயிரத்து தொண்ணூற்றி இரண்டிலிருந்து, ௨00௩ வரை , நூற்றி இருபதுக்கும் மேற்பட்டவை தொடங்கப்பட்டுள்ளன. சராசரியாக ஆண்டிற்குப் பத்து இதழ்கள் வருவதாகக் கொள்ளலாம். இணையத்தில் மட்டுவருபவை, இணையத்திலும் அச்சிலும் வருபவை என்று இரண்டுவகையாகப் பிரித்தும் காட்டுகின்றார், அண்ணா கண்ணன். இந்திய மொழிகளில் தமிழ்தான் இணையத்தில் இடம் பிடித்தது. அ -முதலில் வந்த மின்னிதழாகக் கொள்ளலாம். குறிப்பிட்ட கருப் பொருளைகொண்டு முதலில் வந்தது, தமிழ் சினிமா. அசிரியர். ஆண்டோபீட்டர். முதல் குழும இதழ், கணியன்.காம் ஆகும். மஞ்சு கணேஷ் முதல் பெண்பால் ஆசிரியர். செய்திகளுக்காக மட்டும் தொடங்கப்பட்டது விண்ணோசை. மாபெரும் இணைய இதழ்க் குழுமம் இன்தாம் என்பதாகும். இவை எல்லாம் அண்ணா கண்ணன் அரிதின் முயன்று திரட்டியவையாகும்.

தமிழ் வலைப்பூக்கள் அனைத்தையுமே இணையச் சிற்றிதழ்களாகக் கருதலாம் என்பதே என் கருத்து. ஜனரஞ்சகமாகப் பல்வேறு பிரிவுகளையும் உள்ளடக்கியதாக வலைப்பூக்கள் உலா வருகின்றன. இன்ன வலைபூவிற்குச் சென்றால் இன்னின்ன த்கவல்களைப் பெறலாம் என்ற நிலை உறுதியானால் மேலும் நன்றாக இருக்கும்.

தமிழ்சினிமா.காம் இதழின் ஆசிரியர் சொல்வது:- முதலில் ஆண்டுக்கு நான்கு லட்சம் செலவு.ன் தற்பொழுது இருபத்தைந்து லட்சம். அதிக விளம்பரங்கள் பெற்றபோதிலும் ஆண்டுக்கு ,௮0,000-ம் நட்டம் ஏற்பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் முப்பத்தைந்து லட்சம் நட்டம். (நூல் வெளியிடப்பட்ட ஆண்டு இரண்டாயிரத்து மூன்று ) இப்பொழுதும் இயங்குகின்றது. முகப்பு ஆங்கிலத்திலேயே உள்ளது. ௬௧ (அறுபத்து ஒன்று ) தமிழ்த் திரைப்ப்படக் காதல் ஜோடிகள் காட்சியளிக்கின்றனர். அவர்கள் நடித்த திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. பெயர் மீது சுட்டி, உள்ளே சென்றால், அப்படத்தின், விமர்சனங்கள் தமிழில் உள்ளன. இளைய தலைமுறையினரில் பலர் ,ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதும் காலம் இது. மறைந்த தமிழ் எழுத்தாளர் சு.சமுத்திரம் உள்பட பலருக்குக் கணினியையும் தந்து, தமிழில் எழுதவும் கற்றுக் கொடுத்தவர் ஆண்டோ பீட்டர். ஆங்கிலத் தலைப்பிட்டு தமிழில் தருகின்றார், அனைத்துத் திறனாய்வுகளயும். அவர் என்ன செய்தாலும் அதற்குத் தகுந்த காரணம் கட்டாயம் இருக்கும். கணினியில் தமிழ் பயன்பாட்டைப் பல்வேறு வழிமுறைகளிலும் வளர்த்துவரும் மெய்யான தமிழரல்லவா ஆண்டோ பீட்டர்.

சும்மாயிருப்பதே சுகம் என்று ஒரு வழக்குச் சொற்றொடர் உண்டு. சும்மா இருக்க முடியாமல்தான் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கின்றோம். தாய்மொழியாம் தமிழில் எழுதுகின்றோம் என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்ளலாம்.

கனடாவிலிருந்து ஜெயபரதன் (மதுரைக்காரர்தான்) தமிழில்எழுதும் அறிவியற் கட்டுரைகளின் அருமை படித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.

தமிழ் இணைய இதழ்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு எம்ஃபில் பட்டம் பெற்ற அண்ணா கண்ணனை வலைப்பதிவர்கள் அனைவரும் வாழ்த்துவோம்.

புதுவை தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் இணையம் கற்போம் என்ற நூலினை எழுதியுள்ளார். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று மாணாக்கர்களுக்கு விளக்கப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் மூலம் அறிமுகம் செய்து வருகின்றார். மதுரையில் மதுரை சரவணன் உள்ளிட்ட சில வலைப்பதிவு அன்பர்களும் இதே பணியைச் செய்து வருகின்றனர்.

தெருவெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார், மகா கவி, பாரதியார். வலைப்பூ அன்பர்கள் த்மிழை உலகம் முழுவதும் உலாவரச் செய்கின்றனர், என்பதை எவரும் மறுக்க முடியாதல்லவா?

தமிழின் புதிய மின்னிதழ்









2 comments:

  1. வாழ்த்துக்கள் உங்களின் முயற்சி சிறப்பாக அமைவதற்கு

    ReplyDelete
  2. வலைப்பதிவர்கள் நவீன வசதிகளைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்லோராம் ஏற்றுக் கொள்ளும் காலமும் வரும். அதற்குள், சமூக வளர்ச்சிக்கும் வலைப்பதிவர்கள் தக்க பங்களிப்பினைத் தர முடியும் என்பதனை உறுதி செய்ய வேண்டும். பதிவு வெளியிட்டவுடனேயே வாழ்த்திய பனித்துளி சங்கருக்கு நன்றி.

    ReplyDelete

Kindly post a comment.