Tuesday, January 11, 2011

தமிழில் இயங்கும் இணையதளங்களைப் பட்டியலிட வழி வகை காண்போம்.

2010ம் ஆண்டுக்கான தமிழின் முன்னணி வலைப்பதிவுகளின் பட்டியல் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் காரணிகளாகக் கணக்கில் கொள்ளப்பட்டன.

என்ற அறிவிப்புடன், முதல் 100 வலைப்பதிவர்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில், முதல் மூவர் வரிசை பின்வருமாறு.

1. வினவு. 2.கேபிள் சங்கர் 3. உண்மைத் தமிழன்

கணினித் தொழில் நுட்பத்தை இயக்க வளர்ச்சிக்கு இலவசமாகப் பயன் படுத்திக் கொண்டுள்ள

வினவின் நிர்வாகிகள் மற்றும் நூறு அன்பர்களையும் நெஞ்சாரப் பாராட்டுவோம்.

இன்று இந்திய வலைப்பதிவாளர்கள் அனைவரையும் ஆங்கில அகர வரிசையில் தொகுத்துள்ள ஒரு வலைப்பதிவினைப் பார்த்தேன். இந்தியாவைச் சேர்ந்தோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரிசை எண்கள் தனியாகவோ-கூட்டாகவோ தரப்படவில்லை. இந்த முயற்சியை எடுத்துள்ளவர் பெயர், அனிதா, இந்தியாவில் வசிப்பவர். தொடர்பு கொள்ள முகவரி எதுவும் இல்லை. பின்னூட்டங்கள் வழியாக முயற்சிக்கலாம்.indianbloggers.blogspot.com என்பதே அந்த வலைத்தளத்தின் பெயர். எடுத்துக் காட்டாகச் சில அகரவரிசையில் இடம்பெற்றவற்றுள் சில:-

Abhi Malani, 17-year-old blogger. Location: Mumbai, India.

Ajay of Scratchpad. Where he scribbles his thoughts.

Akhila of Whispering Wind. Location: US.

Alok Kumar has a Hindi blog. Might be India’s first! Location: Bangalore.

Amit Asaravala of Asaravala.com. Location: USA.

Amrita of Margarita's in the Sky. Born on July 11, 1984. Location: Mumbai, India.

தமிழ் இணைய தளங்கள்- இதழ்கள்- (இலவசம்-கட்டணம்)-திரட்டிகள்- வலைப்பூக்கள் அனைத்தையும் பட்டியலிட முற்சிப்போம்.

கணினியில் வல்லுநர்கள் உள்ளனர். அறிவியல், வங்கிகள், ஆயுள் காப்பீட்டுத் துறை மற்றும் எல்லாத் துறைகளிலும் தலை சிறந்து விளங்கும் நம்மவர்கள் இதற்கொரு வழி காண்பார்களா ?

இதற்கென்றே தனியாக ஓர் வலைப்பக்கத்தை உருவாக்க, தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டி அளிப்போர் யாராவது ஒருவர் முன்முயற்சி எடுக்கலாம்.

சென்னை- பூவிருந்தவல்லியை அடுத்த திருமழிசை அருகில் உள்ளது குத்தம் பாக்கம் என்னும் கிராமம். அப்பகுதி இளைஞர்கள், செம்பரம்பாக்கம் ஏரியைக் காப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தைக் கணினி வாயிலாகவே நடத்துகின்றனர். அதே முறையைக் கூடப் பின்பற்றலாம். அகர வரிசைக்குப் பதில் , தளத்தைத் துவக்கிய நாள், நேரத்தை, வரிசையாகக் கொண்டு, பூர்த்திசெய்யச் சொல்லிக் கூட அறிவிக்கலாம்.

முயற்சி செய்தால் வழி பிறக்கும் நிச்சயமாய்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.