தமிழ்! தமிழ்!! தமிழ்!! தமிழ் மூலம் ஆங்கிலம் பயிலவும் ஓர் வலைப்பூ
வலைப்பூவில் எதையும் எழுதலாம் என்போர் ஒரு வகையினர். இதைத்தான் எழுதவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுவோர் மற்றோர் வகையினர். அத்தகைய வலைப் பதிவுகள் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. அவற்றுள், ஒன்றின் விபரம்.
"எமது இனம் வெறுமனே அறிவாளிகள் என்று கூறிக்கொள்வதை விட, அறிவாளிகள் மத்தியில் அறிவாளிகளாகத் திகழ வேண்டும்." எம் தமிழர் அடையவேண்டிய இலக்குகள் நிறையவே உள்ளன. - அருண் HK Arun ,ஹாங்காங் வாழ் அன்பர்.
தமிழ்! தமிழ்!! தமிழ்!!! -இதுவே அவரது ஆர்வம். தமிழ் வழியாக ஆங்கிலம் பயிற்றுவிப்பதே அவரது வலைப் பதிவுகளின் குறிக்கோள்.
Team Members
கணினிக் களஞ்சியம்
ஆங்கிலம் - Learn English grammar through Tamil
User Stats On Blogger Since November 2007
ஆங்கிலப் பாடப் பயிற்சி (33 பாடங்கள்), ஆங்கிலத் துணுக்குகள்/அட்டவணை/ஆக்கங்கள்/ நிறுத்தற் குறிகள் என்று பிரிவுகளை அமைத்துள்ளார்.
aangilam.blogspot.com வலைப்பூ. தொடர்பு மின்னஞ்சல் arunhk.info AT gmail.com
பாடங்களை "அழைப்பேசி" மூலமாகவும் பெற்றிட வசதி உள்ளது.
சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு பயன்பாடுகளை விளக்குவது வெகு அருமை.
DAY - DATE - DATING என்பனவற்றை எடுத்துக் காட்டியுள்ளார், தெளிவாக, டிசம்பர்,27/2010.
தமிழ் மணத்தில் இவரது பதிவு இணைக்கப்பட்டிருந்தால், பார்த்தோர் பட்டியல், இவரை முதல் வரிசைக்குக் கோண்டு சென்றிருக்கக் கூடும். பார்த்தோர் எண்ணிக்கை அதிகம்.
புத்தாண்டில் பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால் விடாமல் தொடர்வார் என்ற நம்பிககை எனக்கு உள்ளது.
நல்லதை ஊக்குவிப்பதில் நாம் யாருக்கும் பின் தங்கியவர்கள் அல்ல, என்பதை, நிரூபணம் செய்வோம். சரிதானே , வலைப்பூ நண்பர்களே?
0 comments:
Post a Comment
Kindly post a comment.