

64-வது சுதந்திர தின விழாவில் அனைவருக்கும் வளர்ச்சியைக் கொண்டு செல்வோம் என்று டெல்லி செங்கோட்டையில் பாரதப் பிரதமர் முழக்கமிட்டுவிட்டார்.
அனைத்து மாநில இந்தியத் தலைவர்களும் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லாமே சுதந்திர தின வாழ்துக்களைச் சொல்லிவிட்டார்கள். அனைத்து ஊடகங்களும் பொதுமக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டன.
பாரளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளம், இதர படி வசதி இத்யாதிகள் கூட்டித்தரவேண்டுமென்ற கோரிக்கையை நடப்பு மழைக் காலக் கூட்ட்டத் தொடரிலேயே கூட்டாக விவாதித்து தீர்மானித்துக் கொள்ள இருக்கின்றார்கள்.
இந்தச் சூழ்நிலையில்,சென்ற ஞாயிறன்று மும்பையில், ஆதரவற்றோர்- தேவதாசி கூட்டமைப்பு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 3000/- பென்ஷன் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா-உ- சம்பளம், டெல்லியில் இருந்தால் தினப்படி, தொகுதிப் படை, தொகுதியிலிருந்து டெல்லிக்கு விமானப் பயணவசதி கூட ஒரு நபருடன், தண்ணீர், மின்சாரம், தொலைபேசிவசதி, மொபைல் வசதி, பிராட்பேண்ட் வசதி, இவை எல்லாம் போகச் சம்பளம் அவற்றை எல்லாம் பட்டியல் போட்டால் தலையைச் சுற்றும். எனவே அதற்குள் எல்லாம் போகவில்லை.
14--8-2010-ல் மும்பையில் ஆதரவற்றோர்-தேவதாசி அமைப்பினர் நடத்திய போராட்டம் உரியவர் மனச்சாட்சியைப் பேச வைக்கட்டும் எனச் சிந்திப்போம். வெற்றி பெற வாழ்த்துவோம்!
0 comments:
Post a Comment
Kindly post a comment.