Saturday, August 14, 2010

பணி ஓய்வுக்குப் பின்னால்........!



எல்லோருக்கும் இதுபோல் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையுமா என்று
கேட்டால், அதற்குச் சரியான விடை கிடைப்பது கடினமே ஆகும்.

14-08-2010 சனிகிழமை செய்தித்தாள்களில் வந்ததோர் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. ஒரே குடும்பத்த்தில் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அதுவும், மகனே, தந்தை-தாய்-உடன் பிறந்தோ ஆறு பேரைக் கொலை செய்தான் என்பதே செய்தி. சொத்துப் பங்கீட்டில், விளைநிலம் 3 ஏக்கருக்குப் பதிலாக, வீட்டைத் தந்ததால் விபரீதமானது.

சிறுநீர்க் கோளாறுள்ள ஒரு மகனால், 78- வயதுடைய ஓய்வு பெற்ற போலீஸ்
இன்ஸ்பெக்டர் குடும்பத்தில் விளைந்ததே இந்த அவலம்!

சொத்து இருந்தாலும்/ இல்லாவிட்டாலும் கூடச் சிக்கல்கள் தமிழத்தில் தொடர்கதை ஆகின்றன. ஆங்காங்கே நிகழும் இலக்கியக் கூட்டங்கள் மனித மனத்தைச் செம்மைப் படுத்திடவில்லை என்பதே உண்மை.

முதுமையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழில் அதிகமான நூல்கள் இருப்பதுபோல் தெரியவில்லை.

ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய், பக்கவாதம் குறித்த நோய்கள், வலிப்பு வகைகள், களைப்பு மற்றும் வலுவின்மை, எடை இழப்பு, தலை சுற்றலும் நிலை தடுமாறலும், நினைவாற்றல் குறைவு, எலும்புத் தேய்மானங்களால் ஏற்படும் கோளாறுகள் முதாலான பல்வேறு பாதிப்புக்களையும் பாமரனும் புரிந்து கொள்ளுமாறு ஒரு நூல் கண்ணில் பட்டது, ஓர் புத்தகக் கடையில்!

முதியோர் இல்லங்கள் - கருணைக்கொலை வேண்டுமா/ வேண்டாமா? என்று கூட ஆராய்கின்றது.

50/60 வயதுடையோர் அவசியம் படிக்க வேண்டிய நூல். வது 62 ஆனவன் தேவையின் காரணமாகத் தேடிப் பிடித்த நூல்.

சென்னை-10, கீழ்ப்பாக்கம், 18-A- பிளவர்ஸ் சாலை, ஆதிபராசக்தி கிளினிக் டாக்டர். வி.எஸ். நடராஜன் ஆங்கிலத்தில் எழுதியது. லக்ஷ்மி மோகன்
தமிழாக்கம். 60 வயதுக்குப் பிறகு .... என்பதே நூலின் தலப்பு.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வலைத்தளம்! சரிதானே நண்பர்களே!

0 comments:

Post a Comment

Kindly post a comment.