Tuesday, August 21, 2012

ஹலோ, நம்ம செல்போனுக்கு இன்னிக்கு 18 வயசு... தெரியுமா?

http://tamil.oneindia.in/news/2012/08/21/tamilnadu-happy-birth-day-my-dear-mobile-160033.html


 Happy Birth Day My Dear Mobile


இந்தியாவில் செல்போன்கள் எனப்படும் மொபைல் போன்கள் அறிமுகமாகி இன்றுடன் 17 ஆண்டு முடிந்து, 18வது ஆண்டு பிறந்துள்ளது.

ஒரு காலத்தில் தகவல் சொல்ல வேண்டுமென்றால் யாராவது ஆளை அனுப்ப வேண்டும். பிறகு தொலைபேசி வந்தது. பின்னர் டிரங்க் கால் வந்தது. அதன் பிறகு தொலைபேசியில் நவீனம் புகுந்தது. பின்னர் தந்தி வந்தது, பேக்ஸ் வந்தது. அதன் பின்னர் பேஜர் வந்தது. கடைசியாக வந்த தொழில்நுட்பம்தான் செல்போன் எனப்படும் மொபைல் போன்.

செல்போன் வந்ததற்குப் பிறகு உலகமே தலைகீழாக மாறி விட்டது. நினைத்ததை நினைத்த நேரத்தில் எங்கிருந்தாலும் பேச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் குறுந்தகவல் எனப்படும் எஸ்எம்எஸ் வந்த பிறகு அடேங்கப்பா... எப்படியெல்லாம் டெவலப் ஆயிட்டாங்க நம்மாளுங்க. லவ்வை சொல்வதிலாகட்டும், வதந்திகளைப் பரப்புவதிலாகட்டும், பின்னிப் பெடலெடுத்து வருகிறோம்.

உலக நாடுகளில் எப்போதோ செல்போன்கள் வந்து விட்டாலும் கூட இந்தியாவைப் பொறுத்தவரை 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதிதான் செல்போன் அறிமுகமானது. அப்போதெல்லாம் செல்போன் சாதனங்கள் செங்கல் சைஸுக்கு இருந்தது. செங்கல் போன் என்றுதான் பலரும் அப்போது செல்லமாக சொல்லிக் கொள்வர். பெரிய பெரிய சைஸில் செல்போன்களை வைத்துக் கொண்டு அந்த சமயத்தில் நிறையப் பேர் கர்வத்துடன் அலைந்த காலம் அது

ஆரம்பத்தில் பணக்காரர்கள் கையில்தான் செல்போன் இருந்தது. காரணம், இன்கமிங்குக்கும் ஏகப்பட்ட காசைக் கொட்ட வேண்டியிருந்ததால். பின்னர் செல்போன் சேவைகள் மேம்பட்டு, சாதனங்களின் விலையும் குறைந்து, கட்டணங்களும் குறைந்த பின்னர் இப்போது மாட்டு வண்டி ஓட்டும் மன்னாரு முதல் மாடி வீட்டு கோடீஸ்வரர்கள் வரையில் ஒரே மாதிரியான செல்போன்களைப் பார்க்க முடிகிறது.

சாதாரணக்  கொத்தனார் கூட கொரியா போனுடன்தான் பாட்டுக்  கேட்டபடி -பெரும்பாலும் இளையராஜா பாட்டுதான் - கலவை சுமக்கிறார், வீடு கட்டுகிறார்.

இன்று ஏகப்பட்ட வசதிகளுடன் எக்குத்தப்பாக வளர்ந்து நிற்கும் செல்போனுக்கு இந்தியாவில் இன்று 18வது பிறந்த நாள்.

நமக்கு நாமே  ஒரு வாழ்த்து எஸ்.எம்.எஸ். அனுப்பி சிம்பிளாக கொண்டாடி விடுவோமே!

0 comments:

Post a Comment

Kindly post a comment.