Thursday, March 1, 2012

உலகம் போற போக்கைப் பாரு டிங்கிரி டிங்காலே ....

கேர்னிங் நகரில் அதி நவீன முதியோர் இல்லம்

கேர்னிங் சிட்டி என்று ஆங்கிலத்தில் தேடியபோது, விக்டோரியா தீவில் உள்ளதாகப் பதில் கிடைத்தது.

 கலிபோர்னியா, கனடா, சிலி, நைஜிரியா, ருஷ்யன் ஆர்க்டிக் ஆகிய இடஙளில் எல்லாம்  விக்டோரியா தீவு உள்ளதாகப் பதில் கிடைத்தது.

நல்லவேளை கேர்னிங் நகர் டென்மார்க்கில் உள்ளதாக டென்மார்க் செய்திகளுக்காகக் கட்டுரை எழுதியுள்ள துரை என்பவர் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டார்.

தியாகராஜ பாகவதர் பாடிய பாடலின் வரிகளைக் கட்டுரையின் இறுதியில் துரை குறிப்பிட்டுள்ளார். அதைப் போன்றே பிரபலமான  நடிகர் சந்திரபாபுவின்
பாடல் வரிகளைத் தலைப்பாகக் கொடுத்துவிட்டேன்.

அலைகளுக்குக் கட்டுரை எழுதிய துரை தவறாகக் கருத மாட்டார் என்ற நம்பிக்கையுடன்!
( tamilweb.net    அலைகள் E NEWS )

February 29, 2012

அம்மை அப்பாவைப் பராமரிக்க அந்தோ ரோபோக்கள் வருகின்றன.
.
டென்மார்க்கில் உள்ள முதியோர்கள் பழைய மனிதர்களாக இருந்தாலும் அவர்களைப் புதிய முறையில் பராமரிக்க வேண்டுமென கேர்னிங் நகரசபை திட்டம் தீட்டியுள்ளது.


இதன் பொருட்டு மொத்தம் 64 முதியோர் விடுதிகள் கொண்ட அதி நவீன முதியோர் இல்லம் கேர்னிங் லின்ட் நகரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்காக கேர்னிங் நகர முதல்வர் லாஸ்காருப் நேற்று செவ்வாய் முதலாவது சவுளை தரையில் இடித்து மண்ணை வாரி எறிந்து, பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதைப்பார்த்து அவர் அருகில் இருந்த ஆதரவாளர் சிலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். இந்த முதியோர் இல்லாம் வரும் 2013ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். மொத்தச் செலவு 98.8 மில்லியன் குறோணர்களாகும், கட்டி முடிய ஒரு பில்லியன் குறோணரை தொட்டுவிடும்.

டென்மார்க்கின் ரூபாய் DANISH KRONER  என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு danish kroner என்பது  8.82293  இந்திய ரூபாய்க்குச் சமம்.

இந்த அதி நவீன முதியோர் இல்லத்தில் விசேடங்கள் பல உள்ளன. முதியோரின் மலசல கூடத்தின் கழித்தல் பேசன் கழிவை தானாக நீரை அடித்து கழுவும். கடதாசியால் துடைத்துவிடும், வயிற்றால் அடி அமோகமாக இருந்தால் யானை தும்பிக்கையால் தண்ணீரை விசிறுவது போல விசிறிக் கழுவிவிடும்.

மேலும் றோபேட் கருவி நிலத்தை கூட்டி துப்பரவாக வைத்திருக்கும். தொலைக்காட்சித் திரையில் அன்றாட மின்னஞ்சல் வரும், தொலைக்காட்சியே வாசித்துக் காட்டும். அன்றாடச் செய்திகளை பாலர் வகுப்புக்கு வாசிப்பது போல தொலைக்காட்சி வாசித்துக் காட்டும்.

தூக்குதல் காவுதல் போன்ற அத்தனை வேலைகளையும் செய்யும். இதன் மூலம் முதியோர் பராமரிப்புப் பணியாளருக்கு செலவிடும் பணம் மீதமாகும். ஆனால் இந்த முதியோர் இல்லத்திற்கு நவீன வாழ்க்கைக்குத் தயாராகாத முதியோர் வருவது சாத்தியமில்லை என்பதை உணர்தல் அவசியம். ஆனால் எதிர்கால உலகத்திற்கு அமைவாக இது வருகிறது. கேர்னிங் நகரில் சூப்ப வைத்தியசாலை வருவது போல இதுவும் வருகிறது.



முதியோரைப் பிடித்துவந்து நவீன வாழ்வளிக்கும் அதேவேளை நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு பெரும் பிரளயங்களை நடாத்திவரும் றொக் வன்முறைக் குழுவினரை மடக்கிச் சிறைச்சாலைகளில் போட வேண்டுமென போலீஸ் கமிஷனர் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

சென்ற ஆண்டு சுமார் 250 றொக் வன்முறையாளர் சிறையில் தள்ளப்பட்டார்கள். இந்த ஆண்டும் அவர்களுடைய தாக்கம் கட்டுப்பாட்டில் வரவில்லை. ஆகவே 300 பேர்வரையாவது சிறையில் தள்ள வேண்டும், அவர்களுக்கு சிறையில் உணவளிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.

இத்தகைய வன்முறையாளரைச்  சமுதாய வீதியில் இருந்து அகற்ற வேண்டுமென நீதியமைச்சர் மோற்றன் புதுஸ்கோவ் எகிறிக்குத்தி முழக்கமிட்டார். டென்மார்க்கில் புதிதாகக் கட்டி காற்றாடும் சிறைக் கூடங்களுக்கு புதிதாக 300 பேர் தயராகிறார்கள். யார் கையில் விலங்கு விழப்போகிறதோ யாரறிவார்.?

சிறைச்சாலை ஆகட்டும், முதியோர் இல்லமாகட்டும், சாதாரண வீடுகளாகட்டும் தூக்கம் வராமை டென்மார்க்கில் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்காகத் தூக்கமாத்திரை எடுக்கும் பழக்கத்தைப்  பலர் கைக்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி இன்றைய பிரிட்டீஸ் மெடிக்கல் ஜேர்ணல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி தூக்க மாத்திரை சாப்பிடுவோர் தூக்க மாத்திரை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிட்டால் ஐந்து வருடங்கள் முன்னரே மீளாத்துயிலை அடைய நேரும் என்று குறிப்பிட்டுள்ளது. 10.000 மரணித்தவர்களுடைய முந்தைய மரணத்திற்கு தூக்க மாத்திரையே காரணம் என்றும் அவர்களோடு ஒப்பிட்டால் வெறுமனே வருடத்திற்கு 18 தூக்க மாத்திரைகள் மட்டும் எடுத்தவர்கள் ஐந்து ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ்வதாகவும் கூறுகிறது.

மெல்ல மெல்ல தூங்க வைக்கும் மாத்திரை மெல்ல மெல்ல ஆயுளையும் குடித்துக் கொண்டே இருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இது இவ்விதமிருக்க டென்மார்க்கின் முன்னைய அரசு சுமார் 40 மில்லியன் குறோணர்களை போலியான ஏ.எம்.யூ பயிற்சிகளுக்கு வழங்கி பொய்யான கண்துடைப்பு பயிற்சிகளை நடாத்தி சுத்துமாத்து செய்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான விசாரணைகள் நடந்துவருகின்றன
.
நேற்று சோமாலிய கடற் கொள்ளையரில் 17 பேரை கைது செய்து, 18 பணயக்கைதிகளை டேனிஸ் கடற்படைக் கப்பலொன்று மீட்டது தெரிந்ததே. இதில் இருவர் மரணமடைந்துள்ளனர், மீட்கப்பட்டவர்கள் ஈரான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

வொக்ஸ் வகன் கார் நிறுவனம் அடிமாட்டு விலைக்கு புதிய மைக்கிரோ கார்களை விற்பனைக்கு விட்டுள்ளது. இதன் விலை 90.000 குறோணர்களுக்கும் குறைவாகும். தற்போது 2100 பேர் தமக்கு இக்கார் வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர்.

இதை வாங்குவதானால் 3 – 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும், கைக்கு வரும் போது 108.000 குறோணர் மட்டும் செலவாகும். ஒரு கி.மீ தூரத்தை 1.28 குறோணரில் ஓடிக் கடக்கும். எயா கொண்டிசனுடன் இந்த விலை மிகவும் குறைந்தாகும். கார்களை லீஸ் செய்து எடுப்பதற்கான விலை அதிகரிக்க பதலடியாக மலிவு கார் சந்தைக்கு வர ஜனம் அடித்துப் புரள அல்லோல கல்லோலமாக இருக்கிறது கார்ச் சந்தை. லீஸ் கார் விற்பனையில் இலாபம் எடுக்க முயன்ற அரசின் கனவில் ஜனம் மண்ணள்ளிப் போட ஆரம்பித்துள்ளது.

அதேவேளை கார்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஓடுவோர் தொகை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் கார்களை பறித்து வருவதாக போலீஸ் கூறுகிறது. பலர் லைசென்ஸ் எடுக்காமல் ஓடுகிறார்கள் இன்னும் சிலர் போதையில் ஓடுவதால் லைசென்சை விட்டுவிட்டே வருகிறார்கள்.

மத்திய யூலன்ட் பகுதியில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இவ்வாறு 27 பேர் லைசென்ஸ் இல்லாமல் அகப்பட்டுள்ளனர். மூன்று வருடங்களில் மூன்று தடவைகள் இவ்வாறு காரை ஒருவர் ஓடி அகப்பட்டால் அவருடைய கார் பறிமுதலாகும், திருப்பி கொடுக்கப்படமாட்டாது என்று போலீஸ் அறிவித்துள்ளது.

நன்றிக்குரியோர்  தயாரிப்பாளர்கள் :அலைகள் டென்மார்க் இரவுச் செய்திகள் 29.02.2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.