Thursday, March 1, 2012

துக்ளக்” சோ” இராமசாமி ஓர் கம்யூனிஸ்ட்!



Born October 5, 1934 (age 77)
Mylapore, Madras, India
Occupation Actor, politician, journalist, lawyer
Family Father: R. Srinivasa Iyer
Mother: Rajammal
Notable credit(s) Thuglak

இந்தியா பல்வேறு இனத்தவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு. அவ்வப்போது ஆட்சிக்கு வந்த வம்சத்தைச் சார்ந்த மன்னர்கள் பலர் இருந்தாலும் எல்லோரும் நினைக்கப் படுவதில்லை. நல்லவராக இருந்தாலும் சரி; அல்லவர்களாக இருந்தாலும் சரி. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் முகம்மது பின் துக்ளக். அவரது குணநலன்கள் தன்னிடம் இருப்பதாக்க் கருதியதாலோ- அவரை போல் புத்திசாலியாகக் கருதிக் கொண்டதாலோ- யாது காரணத்தாலோ தாமிரபரணித் ண்ணீர் குடித்து வளர்ந்த சோ என்கின்ற இராமசாமிக்கு துக்ளக் என்ற பெயர் மிகவும் பிடித்துவிட்டது. பத்திரிக்கை நடத்தும் ஆசையில் இருந்தவர் துக்ளக்கின் பெயரையே தனது மாதமிருமுறை இதழுக்கு வைத்துவிட்டார். தமிழக மக்கள்  அவரது பத்திரிக்கையாகவே  எண்ணத் துவங்கிவிட்டனர். வெளியீட்டாளர் பகுதிக்குச் சென்று பார்த்தவர்களுக்கு மட்டுமே அது ஆனந்த விகடன் குழுமத்தைச் சேர்ந்தது என்று தெரியும்.

அதற்குள் அவசரப்பட்டு விடாதீர்கள். தற்பொழுது கல்கி குழுமத்திலிருந்துதான் துக்ளக் வந்து கொண்டிருக்கின்றது. சோவைப் பிடிக்காதவர்கள் கூட சோவின் நகைச் சுவைத்திறன் கண்டு வாய்விட்டுச் சிரிப்பார்கள். அப்படிச் சிரித்தால் தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமே என்று யாருக்கோ ( கட்சிக் கட்டுப்பாடு என்னும் பெயரில் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் கூட்டத்தினர் ) நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். இதனைப் புன்முறுவல் என்று கூடக் கொள்ளலாம்

என்னைப் பொறுத்தவரை சோ ஒரு உண்மையான பொது வுடைமைவாதி என்பேன். ஏனெனில், இந்தப் பொது வுடைமைக் கட்சிக்காரர்கள் அவ்வப்பொழுது சொல்வது என்ன?  “நல்லதை ஆதரிப்போம். தீயனவற்றை எதிர்ப்போம்” என்பதுதானே.? அப்படி என்றால் சோவும் ஓர் கம்யூனிஸ்டுதான்.

அண்மையில் ஒரு பெரியவர் சொன்னார்.” ஜீவா, கல்யாணசுந்தரம், இராம்மூர்த்தி போன்றோருக்குப்பின் எங்கே இருக்கிறது அந்தப் பேரியக்கம் ? ”
என்று. அதுதான் ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சியை அமைத்த பெரியவர் எம். கயாணசுந்தரம், தாம் அமைத்த கட்சிக்கு யார் யார் வந்து சேர்வார்கள் என்று கணித்தாரோ, அவர்கள் எல்லாம் வராமற் போனபோது, ”கட்சி அட்டை வைத்திருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகளும் அல்லர். அட்டை  இல்லாதவர்களைக் கம்யூனிஸ்டுகள் இல்லை என்றும் கூற முடியாது” என்று மன வருத்தத்தோடு கூறினார். தம்மை நம்பி வந்தவர்களைப் பற்றிய கவலை ஏதுமின்றி ஒரு கட்டத்தில் தா.பாண்டியன் அவர்களும் அவரோடிருந்த தலைவர்களும் தாய்க் கட்சிக்கே சென்று அடைக்கலமாயினர். அப்படி எல்லாம் தன்னை மாற்றிக் கொள்ளாமல் எப்பொழுதுமே ஒரே நிலையில் இருக்கும் சோவைப் பாராட்டினால் என்ன தப்பு?

என படைப்புக்களைக் குமுதம் குழுமம் தவிர யாரும் அனுமதி இன்றி எடுத்துப் பிரசுரித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துக் கொண்டிருந்த மதிப்பிற்கிரிய-பன்முகத் திறமை படைத்த- ஞாநி கூட, தன் கட்டுரைதொடரில் ஆனந்த விகடன் சற்றுத் திருத்திக் கொள்ளச் சொன்னபோது  அதனை மறுத்தார், பாரதியின் வீரத்தனத்தோடு. குமுதம் அவரை அணைத்துக் கொண்டது. அங்கும் ப்ரச்சினை ஏற்பட்டபோது கல்கி ஏற்றுக் கொண்டது. தற்பொழுது கல்கியில் ஓ பக்கங்கள் வருகின்றனவா என்று எனக்குத் தெரியாது.

07-03-2012 துக்ளக் அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முன்னரெல்லாம் தொடர்ந்து துக்ளக் தொடர்ந்து வாங்குவேன். தற்பொழுது எபொழுதாவதுதான் வாங்குகின்றேன். என்பொழுது போக்கு வலைப்பூவிற்கும், டிவிட்டருக்கும் மாறிவிட்டது.

 இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதிலும். இந்திய தேசியத்திலும் அவ்வப்பொழுது ஐயப்பாடுகள் வரும். அதற்கெல்லாம் துக்க்ளக்கின் நகைசுவைப் பதில்கள் உண்மையை உணர்த்தும். அதிலும் குறிப்பாகத் தலையஙத்தின் மேற்பகுதியில் வரும்  “எச்சரிக்கை” பகுதி நாளை நடக்கப் போவதை எடுத்துச் சொல்லும்.

அதே போன்று இந்த ”மனித உரிமை” ஆளாளுக்கு வேறுபடும்போது எனக்குச் சிரிப்பு வரும். தன் கட்சியை  /  இனத்தை  / மதத்தை / மொழியை ...இன்னும் என்னென இழவையோ பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல் அவர்களுக்கு. நன்மை தீமைகளைப் பார்க்க மாட்டார்கள். தன்னவன் தப்புச் செய்தால் புத்தியும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் தொழிற்சங்கம் அல்லது கட்சி வகையில் அவள் / அவன் / அவரை  /அவளைச் சேர்ந்த கூட்டத்தினரின் support - membership- votes  தஙகள் வசம் இருந்தால் போதும். இந்த வகையில் என்  நண்பனின் வாழ்க்கையில் நடந்த ஓர் உண்மை நிகழ்விற்கு  இந்த அட்டைப்படம் ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது.

அதனால் அந்த அட்டைப்படத்தையும், தலையங்கத்தையும் அப்படியே இந்த வலைப்பூவில் அப்படியே மீள் பதிவு செய்து விட்டேன், எனது கருத்துகளுடன்.

.


துக்ளக்கின்  வயது  42. துக்ளக் ஆசிரியர் பேசியபின் அத்வானியைப் பேச அழைத்தார். என்று தலையங்கத்தின் அடுத்த பக்கத்தில் போட்டிருக்கின்றது. சென்ற வாரத் துக்ளகை வாங்கிப் படித்தபின் தான் இதைப் படிப்பேன்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு முடிவு கூடங்குளம் அணுமின் நிலையமே. இன்று காலை நாகர் கோவிலில் இருந்து பேசிய நண்பர் ஒருவர், ”மின்வெட்டால் அவதிப்படும் மக்கள் அனைவரும் கூடங்குளம் வேண்டும் என்றே கூறுகின்றனர். அது அமைக்கப்பட்டுள்ள கடற்கரைப் பகுதியில் வாழும் மகளிடம் மட்டுமே எதிர்ப்பு இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.”

ஆனால், எல்லோரும், அ.முத்துக் கிருஷ்ணன் எழுதி ,  16 சமூக

விழிப்புணர்வுள்ளோர் கூட்டாகச் சேர்ந்து ஐந்து ரூபாய் விலையில் மக்கள்


பதிப்பாக வெளியிட்டுள்ள , “ கூடங்குளம் விழித்தெழும்  உண்மைகள் “ என்ற

சிறு புத்தகத்தைப் படித்துப் பார்த்தபின் ஒரு முடிவிற்கு வாருங்கள்.

கிடைக்குமிடம், உயிர்மைப் பதிப்பகம்,  அபிராமபுரம், சென்னை -600018

தொலைபேசி எண்:- 91-44-24993448

மின்னஞ்சல்:-   uyirmai@gmail.com

இணையதளம் :-  www.uyirmai.com

துக்ளக் ஆசிரியருக்கு ஓர் வேண்டுகோள் ::-

ஜனநாயகப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை குறித்து ஓர் விரிவான கட்டுரை

எழுதிட வேண்டுகின்றேன்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.