Thursday, March 8, 2012

சி.பா. ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழச்சி தஙகப்பாண்டியனின் நிறைவுரை!!


தமிழ்த் திணை இணைய இதழின் சார்பு அமைப்பாகச் செயல்படுகின்றது, 

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்., திருச்சியில்!


தனது நான்காம் கருத்தரஙகத்திற்கு,  “இதழியல் வளர்ச்சியில் தமிழ் இதழ்கள்”

என்னும் தலைப்பினை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டது..


தொடக்க விழாவிற்கு, முனைவர், தி.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.

தி. மா.சரவணன் வரவேற்புரை வழங்கினார்.



வெளியிடப்பட்ட ஆய்வு நூலை, தீக்கதிர் ஆசிரியர், மதுக்கூர் இராமலிஙகம்

பெற்றுக்கொண்டு மைய உரை நிகழ்த்தினார். ஈ.வே.ரா. கல்லூரி முதல்வர் பழ.

கெளதமன் வாழ்த்துரையும், முனைவர் கா.வாசுதேவன் நன்றியுரையும்

நல்கியதும் காலையில் தொடக்க விழா நிகழ்வுகளாக அமைந்தன.


நிறைவு விழா  மாலை  2.மணிக்குத் துவங்கியது..மணிக்குத் துவங்கியது. 

மடிக்கணினி ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு,  மெய் நோக்காது, பசி 

துஞ்சாது அழைத்திடும் பள்ளிகள். கல்லூரிகள், பொதுநல அமைப்புகள் 

ஆகியவற்றிற்கெல்லாம் சென்று கணினியில் தட்டச்சு செய்வது எப்படி 

என்பதை ஒலி ஒளி காட்சிப் படங்களுடன். விளக்கமாகச் சொல்லித்தந்து 

கொண்டிருக்கின்றார் , முனைவர்,  துரை மணிகண்டன் அவர்களின்

 நிகழ்ச்சி நிரலில் அது குறிப்படப் படாதது வருத்தத்தைத் தந்தது.. அங்கு

நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள்,

அல்லது பேராசிரியர்கள். ஆய்வு மாணாக்கர்களும் உண்டு, இளமையும்,

முதுமையும்  இணைந்த கரங்களாய்ச்  செயலாற்றியமை நெஞ்சிற்கு நிறைவு.

தரும் ஓர் நிகழ்வு

.
மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருப்பவர்தான் 

கவிஞர் முனைவர் தமிழச்சி தஙகப்பாண்டியன்



கவிஞர் முனைவர் தஙகச்சி தங்கப்பாண்டியன்


அவர்க்கு இடதுபுறம் பேருறையாறி விட்டு மேடையில் அமர்ந்திருப்பவர்தான் 

திராவிட இயக்கச் சிந்தனையாளர் புலவர், முருகேசன், அவர்கள். தமிழக 

அமைச்சருள் ஒருவராக இருக்கவேண்டியவர். தற்பொழுது இந்த மேடையில் 

வீற்றிருக்கின்றார்.  ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர் போல் 

பருகுவதற்கு இனிமையாக ஆரவாரத் தன்மையற்ற முறையில் 1912-ல்

நடேசனார் திராவிட இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை.

உள்ள திராவிட இயக்க வரலாற்றைக் கண்முன்னே கொண்டு வந்து 

நிறுத்திவிட்டு அமர்ந்திவிட்டார், நாற்காலியில்!


அதைத் தொடர்ந்து பேச வந்தவர், தமிழச்சி தஙகப் பாண்டியன். தமிழச்சி 


தங்கப்பாண்டியன் தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் கவிஞர் மற்றும் சமூக

ஆர்வலர் ஆவார். இவரது இயற்பெயர் தா. சுமதி. சென்னை ராணி மேரிக்

கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான இவர், அருப்புக்கோட்டை தொகுதி

முன்னாள் தமிழக சட்டசபை உறுப்பினர் வி. தங்கபாண்டியனின் மகள் மற்றும்

முன்னாள் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின்

சகோதரி.

ஆகியவற்றின் படைப்பாளி. தமிழகத் திருக்கோவிலிலிருந்து ஏதோ ஒரு 

சிலை உயிர்ப்புடன் எழுந்து வந்து விட்டதோ என்றதோர் மலைப்பு எனக்கு.


“நகரவாசிகள் சமரசம் செய்து கொண்டு வாழ்கின்றனர். வணிக 

பொருளாதாரம், உலகமயமாக்கல் ஆகியவற்றுக்கு நடுவில் நகரவாசிகள் 

வாழ்க்கை நடத்துகின்றனர். கிராமங் களில், வன்முறை வெளிப்படையாக 

உள்ளது. ஆனால், நகரத்தில் எப்போது என்ன நடக்கும், என்பது தெரியாத 

புதிராக இருக்கிறது, என்று வனப்பேச்சி கவிதைநூல் வெளியீட்டு விழாவில் 

பேசியுள்ள தமிழச்சியின் பேச்சினைக் கேட்பதும்,  நேரில் பார்த்துப் பேசும் 

வாய்ப்புக் கிடைத்ததும் என்போன்றே பலருக்கு இதுதான் முதல் 

முறை.அவரது பேச்சினைக் கேட்பதற்காகவேப் பெரியவர்கள் பலர் வந்து 

காத்திருந்ததையும் கண்டேன். தலையில் முக்காடு போட்டுக் கொண்டு 

தஙளைத்திட்ட்டிப்பேசும் பெரியார் பேச்சைக் கேட்பதற்காகவே காத்திருக்கும்

கூட்டத்தினரைக் கோவை கிராஸ்க்ட் ரோட்டில் கண்டு ரசித்த பழைய 

அனுபவம் நினைவிற்கு வந்தது.

”எனக்கான வார்த்தகளை நீ முடிவு செய்கையில், நான் தேர்கிற மவுனம்

மிகவும் மலிமையானது “  

என்ற இவரது கோட்பாட்டைப் புரிந்து கொண்டகாரணத்தினால்தான்

 முனைவர் மு. அருணாசலத்தின் முன் முயற்சியால் ஓராண்டிற்கு முன்பே 

தேதி வாங்கப்பட்டிருந்தும்,  இவர்க்குத் தலைப்பெதுவும் கொடுக்காமல்

 “பேராளர்களுக்குச் சான்று வழங்கி நிறைவுரை “ என்று மட்டுமே  

குறிப்பிட்டிருந்தனர். அதாவது  தமிழச்சிக்கு என்று தலைப்பெதுவும் 

கொடுக்கப்படவில்லை என்பதே அவர் கொண்ட கொள்கையினின்றும் 

மாறாதவர் என்பதை அவைக்கு உணர்த்தியது.

பேராளர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கவில்லை என்றாலும், இங்கு 

வரும் வரையில் சிலவற்றைப் பார்த்தும், சிலவற்றைக் கேட்டும் ஆய்வுக் 

கட்டுரைகளின் பயணப் பாதையைப் புரிந்து கொண்டேன். இதில் என்ன பங்கு, 

அதில் என்ன பங்கு என்ற வகையான ஆய்வுப்போக்குகள் எல்லாம் 

பழங்காலத்தவை. ஆய்வுப் போக்கின் பாதை மாற வேண்டும். இன்று மக்கள் 

மத்தியில் உலாவரும் நாள், வார, மாதமிருமுறை, மாதமொருமுறை, 

காலாண்டிதழ். அரையாண்டிதழ், ஆண்டிற்கொரு முறை மட்டும் வெளியிடப் 

படும் இதழ், சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எல்லா 

ஊடகஙகளின் பின்னாலும் ஓர் அரசியல் ஒழிந்திருக்கின்றது. அப்படி 

மறைந்திருக்கும் அரசியலின் அடைப்படைத் தன்மையை ஆராய்ந்து 

உண்மைத் தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

பழைய பஞ்சாங்கம் கூடாது காலத்திற்கேற மாற்றம் வேண்டும் என்றார்.


தன் கருத்திற்கு வலூவூட்ட பாரதியின் புதுவை வாழ்க்கையில் நடந்ததோர் 

நிகழ்வினைச் சுட்டிக்காட்டினார். தமிழும் ப்ரெஞ்சும் தெரிந்த புலமமிக்கதோர்  

அறிஞர் ஒருவர் பாரதியிடம்,  ஒள்வயாரின் ஆத்திசூடியைப் ப்ரெஞ்சுக்கு 

மொழி பெயர்த்துக் கொண்டிருக்கின்றேன் என்று பெருமையாகச் சொன்னான்.


அதைக் கேட்டார், பாரதி!  கோபமும் வந்தது. இதோ இரும் வருகின்றேன் 

என்று சொல்லிவிட்டுப் போன ஆத்திரத்துடன் திரும்பி வந்தார் 

” புதிய ஆத்திசூடியுடன்! “  ஒள்வையாரின் பாடல்களை நான் குறைத்து 

மதிப்பிடவில்லை. அது தமிழின் பெருமைக்குப் புகழ் சேர்க்கும். தமிழைப் 

பற்றிப் புகழ்ந்துரைக்கும்போது பழைய நூல்களை எல்லாம் சேர்த்துக் 

கொள்ளலாம். ஆனால், காலத்திற்கேற்றபடியான மாற்றங்களும் தமிழனின் 

வாழ்க்கையிலும் கொண்டுவரும்படி இலக்கியங்களில் ஆய்வுகளில் புதுமை 

செய்திடல் வேண்டும் என்பத வலியுறுத்தியபோது, இவர் இப்படிப் 

பேசிவிடுவார் என்பதை முன்னரே தெரிந்துவிட்ட காரணத்தால்தான் 

பெரும்பாலான கட்டுரைளை எழுதியவர்கள் வரவே இல்லை 

ஆய்வரங்கத்திற்கு!.


அயலகத் தமிழர் குறித்த ஆய்வொன்றிற்காக ஆஸ்திரேலியாவிலுள்ள 

பல்கலையி ஒன்றில் ஒரு பேராசிரியரை அணுகியபோது, அது குறித்து 

எனக்கு எதுவும் தெரியாது,  அந்தத் துறையில் ஆய்வு செய்த வல்லுநர் 

ஒருவரை உஙகளுக்கு அறிமுகப் படுத்துகின்றேன் என்று பதில் சொல்லியது 

மட்டுமன்றி அந்தப்புதியவரிடம் அழைத்தும் சென்றாறாம்.

ஆனால், இந்தியாவிலோ கொஞ்சம்  பிரபலமாக இருந்துவிட்டாலே போதும் /

/இருப்பதாகவோ தெரிந்துகொண்டுவிட்டால் போதும் கோபால் 

பற்பொடியிலிருந்து எல்லாவிதமான வியாபாரப் பொருட்களுக்கும் 

விளம்பர உற்சவ மூர்த்தி ஆக்கப்பட்டு விடுவார். என்ற போது  உண்மை எந்தக் 

கட்சியிலிருந்தாலும்  வெளிப்பட்டுப்பேசும் என்ற உண்மை தெர்ந்தது.

பேச்சுத் துவக்கத்தில் எல்லோரையும் பெய்ர் சொல்லி அழைதத்த  தமிழச்சி, 

திராவிட இயக்கச் சிந்தனையாளர் புலவர்.க. முருகேசனை மட்டும்  

மேடையில் பெயரிட்டுக் கூறாத தன்மையினாலேயே ,அவர்பால் தாம் 

கொண்ட மரியாதையை வெளிப்படுத்திய நல்ல குணம் எனக்கு மிகவும் 

பிடித்திருந்தது.


”வரைவின் மகளிர்”  என்று மகளிருக்காக ஓர் அதிகாரத்தை ஒதுக்கி வைத்த 

திருவள்ளுவர் ஆண்களைப் பற்றி ஏன் தனியாக குறிப்பிடவில்லை? என்று 

அவர் எழுப்பிய வினாவிற்கு விடை தேடும் முன்பாவே

ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாளையும் விட்டு வைத்திடவில்லை!

நான் தொல்காப்பியத்தப் படிக்கவில்லை என்றாலும் கூட, பெண்களுக்கான

இலக்கணத்தை மட்டுமே  தொல்காப்பியம் கூறுகின்றதென்று கூற முடியும்

என்பதை உதாரணத்துடன்  விளக்கினார்.


மணிக்கொடிக் காலம் இலக்கியவளர்ச்சியின் பொற்காலம் அல்ல என்பதை

மார்க்சியச் சிந்தனையாளர் அ.மார்க்ஸ் அவர்களின் விளக்கங்களோடு

எடுத்துரைத்தார். மணிக்கொடிக்காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துக்

கொண்டார். ஒவ்வொரு காலத்திலும் எப்படி இருந்ததென்பதை எல்லாம்

மார்க்ஸின்  எடுத்துக்காட்ட்க்களுடன் விவரித்துவிட்டு, கடைசியில்

கவிதைகளோடு  முடங்கிப்போனது என்றும் உணரச் செய்தார்.


பண்பரசரான உ.வே.சா. விடம், ஒருவர்  “நேற்றைய உங்களது சொற்பொழிவு

நன்றாக இருந்தது “ என்று சொன்னபோது, ”உபந்நியாசம் எங்கே போயிற்று ”

என்று சீறி விழுந்தாராம்.

”நலமாக இருக்கின்றீர்களா ”என்று கேட்டபோது ”ஷேமம் எங்கே போயிற்று”

என்று புலி போல் சீறிப் பாய்ந்தாரம், உ.வே.சா.


தமிழ்ப் புலமை என்பது வேறு,  தமிழ்ப் பற்று என்பது வேறு,  தமிழ் ஆய்வு

என்பது வேறு

” தமிழ்ப்பற்றும், புலமையும், ஆய்வும் தமிழைத் தமிழினத்தை அடுத்த

தளத்திற்கு முன்னேடுத்துச் செல்லவேண்டும்.

மரபின் அச்சிலேதான் புதுமையின் சக்கரம் சுழல்கின்றது “

என்று பேருரையை

தமிழச்சி தங்கப்பாண்டியன் முடித்துக் கொண்டபோது

அவையில் உள்ளோர் அனைவரும் அவரைச் சுற்றிலும் வட்டமாக

நின்றுகொண்டு பேச ஆரம்பித்தனர். அனைவரிடமும் முகம் கொடுத்துக்

கனிவாகப் பேசிய பின்னர்தான் அறையை விட்டு அகன்றார்.



தமிழ் நாட்டில் எந்தவொரு பொது நிகழ்வாக இருந்தாலும் ஒரு 

குறிப்பிட்ட பிரிவினர் ஒத்துழைப்பின்றிச் சிறப்பாக அமையாது. 

பெரிய உதாரணம்:- தென்காசி இடிந்த கோபுரம் உயிர்பெற்றெழுந்தது. 

அந்தத் திருகோபுரத்தின் அடிப்புறத்தில் உள்ள படிக்கட்டுக்கள்தான் 

அப்பகுதிவாழ் மக்கள் மாலையில் காற்று வாங்கப்போகும் "BEACH" 

திருப்பணிக்குழுத் தலவர் :-

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தநாடார்.

சின்ன உதாரணம்:- 

சீர்காழி நாகப்பட்டின மாவட்டம், 

A. பால்சாமி நாடார்  

கல்வி  அறக்கட்டளைத்

 தலைவர் மா.இராமர்

 நல்வாழ்த்து களுடன் வழங்கப் 

பெற்ற “BAG".



0 comments:

Post a Comment

Kindly post a comment.