Thursday, March 8, 2012

விக்ரமாதித்யன் கவிதைகள்


விக்கிரமாதித்யன்                                   
எனக்கும் கூட
நண்பர்தான்!
இருந்தாலும்
தமிழச்சி
தஙகப்பாண்டியனின்
வானத்திலிருந்து
மழைத்துளியாய்
வந்தடைந்தார்
என் வலைப்பூவில்!

நன்றி சொல்வேன் தமிழச்சி தஙப்பாண்டியனுக்கு!

விக்ரமாதித்யன்  கவிதைகள்
ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக் கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக் கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ


********************************************************

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள


******************************************

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்


********************************************

விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்

**************************************


அவன் திருட
இவன் திருட
அதையெல்லாம் பார்த்து
நீயும் திருட

நான் மட்டும்
எப்படிச் சாமியாராய் இருக்க

***********************************

நல்லோர் நட்பிற்கு பாடம் படியுங்கள் !

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !!

நோயில்லா உடலிருந்தால் நூறுவரை காதல் வரும்!

1.சாராய சுனாமி

2. சத்தமில்லாத மரணங்கள்  

3.தாய்ப்பாலையும் ஆவின் பாலையும் நஞ்சாக்கும் பிளாஸ்டிக்

4. மவுனத்தைத் தகர்ப்போம்

5.பெற்றால்தான் பிள்ளயா

ஆகிய,

ஐந்து சமூகச்சிக்கல்களுக்குத்

தீர்வு சொல்லும் டிவிடி

விலை ரூபாய் 75/- தான்



0 comments:

Post a Comment

Kindly post a comment.