Friday, March 9, 2012

அந்த பிரபுக்குல ஐயாமாரோ, தண்டச்சோறே தின்பதில்லையே ! சீனக்கவிதை- நேரடி மொழி பெயர்ப்பு- பயணி



சீனாவின் சஙக இலக்கியம்

கவித்தொகை

அறிமுகமும் நேரடித் தமிழாக்கமும்

பயணி

ஸ்ரீதரன் மதுசூதனன் சென்னையைச்  சேர்ந்த தமிழர். பயணி என்னும் புனை

பெயர் கொண்டவர். இந்திய அயலகத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு

கைவரப் பெற்றவர்.


பெய்ஜிங்,  ஹாங்காங்,  ஃபிஜித்  தீவு ஆகிய இடஙகளில்

ஒன்பது ஆண்டுகளுக்கும் மேல்  பணியாற்றி உள்ளார். தற்போது டெல்லியில்

பணியாற்றுகின்றார்.


விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராகத் திகழந்தவர். பிரம்மா செய்திக்

கட்டுரைகள் என்ற அமைப்பினைத் துவக்கினார். இவர் பங்கேற்கும் நாடகக்

குழுவின் பெயர் ஐக்யா.


( விண்னில் பவனி வந்த முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. அவர் பயணித்த விண்கலத்தின் பெயர் சோயுஸ், சோயுஸ் என்றால் ஐக்கியம் என்று பொருள். சோயுஸ் என்னும் பெயரில் பாக்கட் புத்தக வடிவில் சில ஆண்டுகள் மாத இதழை நண்பர் ஜீவியுடன் இணைந்து நடத்தியுள்ளார் இந்த வலைப்பூ பதிவர் ).


ஐக்யா நாடகக் குழு தமிழகத்திலும், ஹாங்காங்கிலும் நவீன நாடகங்களை

நடத்தியுள்ளன.


பத்துக்கும் மேற்பட்ட சிறுகதகள்,  மற்றும் சில கவிதைகளுக்கும்

சொந்தக்காரர் இவர். அவற்றைப் பிரசுரித்துப் பெருமை கொண்ட இதழ்கள்,

கல்கி, விகடன், கணையாழி. முதலியன


கல்வி ஆராய்ச்சி இதழ்களுக்கும் கணிசமான ஆங்கிலக் கட்டுரைகள்

எழுதியுள்ளார். தமிழ் அகராதி இயல்-தனிழ் இலக்கியம்- இயற்கை

இவற்றிற்கான தொடர்புகள் பற்றியவை அந்தக் கட்டுரைகள்.

கல்வி ஆராய்ச்சி இதழ்களுக்கும் கணிசமான ஆங்கிலக் கட்டுரைகள்

எழுதியுள்ளார். தமிழ் அகராதி இயல்-தனிழ் இலக்கியம்- இயற்கை

இவற்றிற்கான தொடர்புகள் பற்றியவை அந்தக் கட்டுரைகள்.

 இவர் ஓர் அறிவியல் பட்டத்தாரி. இதழியலும், பொது நிர்வாகமும், மனித

 


மேலாண்மையும் இவரது மேற்படிப்புகளாகவும் அமைந்தன.

அபி, கீர்த்தனா, இவரது பேரைச் சொல்லிக் கொண்டிருக்கும் வாரிகள்.

மனைவி பெயர் வைதேஹி. பன்னாட்டுப் பள்ளியில் ஆசிரியை மட்டுமல்ல,

ஆங்கிலத் துறைத் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.


பழம்பெரும் பூமியாம் பாரத்தத்தில் இவர் பிறந்த ஆண்டு 1966.  சீனக்

கவிதைகளின் மையக்கரு  நமது பழைய சஙக இலக்கியங்களுடன் பல

வகைகளிலும் ஒத்துப்போகின்றது என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது.

அதனால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஓரிரு கவிதைகளைத் தமிழில் மொழி

பெயர்த்து எனது வலைப்பூவிலும் பதிவு  செய்துள்ள்ளேன்.

.http://rssairam.blogspot.in/#!http://rssairam.blogspot.com/2012/02/blog-post_05.html

மனித வடிவை ஆணியால் அடித்த பூமி இது!

  ( எனது மொழியாக்கம்)



சு ய நில இயல் கோட்பாடு
மற்றவர்கள் காண இயலாது மலை முகட்டை
விண்வெளியில் உலாவரும் பறவைகள் போல்!
பூங்காவின் பசுமை பெருஞ்சிரிப்பு! பெருஞ்சிரிப்பு!
ஈன்றெடுக்கும் கருப்பையின் திசுச் சுவர்கள்,
சுருங்கும், விரியும், கண்ணீரும் சிந்தும் இதழ்களால்!
உள்ளங்கை வரைபடங்கள் கதைகளைச் சொல்லுமாம் !
கோணலான தெருவில் நெய்யச் சொல்லுகின்றனர் !
காலங்கள் மாறும், ஏற்றிட மறுத்தாலும்,
மாற்றங்கள் தொடரும், தொடர்கின்றன!
பறவைகள் ஊஞ்சலாடிப் பாடிய கிளைகள், இளைப்பாறிய மரங்கள்,
மீண்டும் மீண்டும் அழிந்து தழைக்கும்!
தண்ணீர் அதன்போக்கில் போகட்டும், விட்டு விடுங்கள்!
பொங்கட்டும், ஓடட்டும், சுழிக்கட்டும், நுரைக்கட்டும், நீர்வீழ்ச்சியாகட்டும்!
மனித வடிவை ஆணியால் அடித்த பூமி இது!
சூரிய பூமியில் சம்மட்டி இல்லை।
எதுவும் தெரியாமல் நடக்கின்றீர் பிற்பகலில்!
வழிகாட்டும் நன்னூல்கள், இருள் வாழ்வில்!

உதவி-ஆண்டனி டன் (ஆங்கிலம்)    தமிழில்:- சீராசை சேதுபாலா.


சீனத்திலிருந்து  நேரடியாகத் தமிழர் ஒருவரால் தமிழுக்குக் 
கொண்டுவரப்பட்ட முதல் நூல் என்னும் பெருமைக்குரியது இந்நூல்.  
அடிக்கடி தமிழன் / தமிழர் என்று சொல்வதில் ஆழமான பொருள் இருக்கின்றது. ஏனென்றால் தோல்வி தந்த துக்கம்  சென்னை இராஜதானியக இருந்த காலத்தில் பேசிய பேச்சுக்களை நோட்டம் விட்டுப் பார்க்கின்றனர். அண்மையில் நான் சென்ற திருமணங்களுள் குறிப்பிடத்தக்கதும் ஒன்று. அப்பா சென்னை திருச்சிக்கு அருகில் உள்ள சிறுகமணியச் சேர்ந்தவர். சென்னையில் வசதியான வங்கி வாழ்க்கை. நாயுடு பெண்ணுடன் காதல் திருமணமும்ம்நடந்தேறியது. இன்று அவர் மகன் ஆந்திர பிராம்மண குலப் பெண்ணுடன் காதல் திருமணம். பெண்ணின் அப்பா சென்னை பொறியியல் அறிஞர்களை உருவாக்கும் அரசின் முதற் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர். பெற்றோர் சம்மதத்துடந்தான் முறைப்படி நடந்தேறியது திருமணம். நான் திருநெல்வேலி சைவ வெள்ளாளா. என் குடும்பத்தில் இல்லாத ஜாதி கிடையாது. என் மருமகளே ஓர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவள்தான்.அவற்றைப் பெருமையாகவே கருதுகின்றோம்.
ஆனால் பொறுப்பை இழந்துவிட்ட காரணத்தால் ஆரியம், பார்ப்பனீயம், வடவர்  ( முணுமுணுப்புடன் )  பேசத்துவங்கிவிட்டார் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமும் உலகத் தமிழினத் தலைவரும்!
நம் முன்னோர் பயன்படுத்திய மிகமிகச் சாதாரணப் பொருட்களைக் கூட உள்ளது உள்ளபடி பாதுகாப்பதில் பெருமைப்ப்படுவோம் நாம். எளிமைப் படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி கிடைத்த நூல்களின் மூலங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டு விட்டன. காலப்போக்கில் இவற்றை எல்லாம் படைத்தவ கலைஞர்தான் என்று கூடச் சொல்லும் சூழல் ஏற்பட்டுவிடும். உரை எழுதலாம்.

புலவர் குழந்தை  போன்று புதிய காவியங்களைப் படைக்கலாம். தப்பில்லை. வரவேற்கப் பட வேண்டியவையும்  கூட. இங்கிருக்கும்  பேராசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதல் கட்டத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் இந்த இழிவு நிலை தமிழுக்கு ஏற்பட்டிருக்காது
பள்ளி, கல்விக் கூடங்களில், இனம், மதம் என்ற இரண்டு  விபரங்களைக் குறிப்பிடச் சொல்லும்  இரு வரிகளை மட்டும்  எடுத்துவிட்டாலே போதும் ஜாதி ஒழிக்கப்பட்டுவிடும். ஜாதியை. ஒழித்திட வேறு சிறந்த வழியுமுண்டோ?

என்னிடம் கேள்வி கேட்போர் எல்லாம் சொந்த ஊரைச் சொன்னவுடன், அதே ஊரா அல்லது பக்கத்திலா  என்று வினா எழுப்புவர். அதே ஊர்தான் தெற்குரதவீதிதான், என்றவுடன் என்னுடன் பழகுவதைக் கூடக் குறைத்துக் கொண்டுள்ளனர் தெற்கு ரதவீதியில் உள்ளோர் எல்லாம் உயர்ந்த வகுப்பினராம். என்றுதான்  அழியும் இந்த ஜாதியின் மோகம்?

சீனாவில் மொழியாக்கப்ப் பட்டறைகள் உள்ளனவாம். அதில் பயிற்சி பெற்றிருக்கின்றார். ஆசிரியர் ஸ்ரீதர். ( பயணி ).

ZHANG, YANG, YU, LI, QI YOUNGXTANG, ZHANG YINGHUA,

 HAN CHONG -  திலகவதி என்ற தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்ட சீனப் பெண்

ZOU ZIHUA- அரவிந்தன் என்ற தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்ட சீனர்

HAN LIN, JIANG JINGKUI  ஆகிய பல்வேறு துறைகளில் பணியாற்றிய சீனர்கள்

ஸ்ரீதருக்கு  உலகத்திலேயே உள்ள கடினமான மொழிகளில் ஒன்றான சீன

மொழியைப் ப்யின்றிட உதவி இருக்கிறனற்னர்.

தமிழகத்திலிருந்து அங்கு பணியாற்றும், ஆண்டனி கிளீட்டஸ்,  மரியா

மைக்கிள், ஜார்ஜ் ஏ. கென்னடியின் “பென்னொலோசா, ஒஅவுண் மற்றும் சீனச்

சொற்கள” என்னும் சிக்கலான ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கித்

தந்துதவிய மு.இராமநாதன்,  பா.ரா. சுப்பிரமணியன்,  grass ravi  எனும் பெருமாள்

ரவிச்சந்திரன், ராமமூர்த்தி சுகந்தன் எனும் மாணவர்,  தூதர அதிகாரி,

சித்தார்த்த நாத்,  ஆகியோர் சீனாவில் பெர்ந்துணை புரிந்துள்ளனர்.


சென்னையிலிருந்து கொண்டே,  சிவ குமார் இராமலிங்கம்,,,

கனடாவிலிருந்து  அ..முத்துலிஙம், அமெரிக்கா,  செல்வி பெருந்தேவி,

ஹாங்காங் , குருநாதன், நரசிம்மன் சந்தானம், ஸ்ரீனிவாசன் பிரசாத்,

சுவாமிநாதன்,  கார்த்திக் ஹரிஹரன், இந்தியா,

மற்றும்,அண்ணாத்துரை மாரியப்பன், உமா மஹேஸ்வரி, சந்தர்

சுந்தர்ராஜன்,சி.அண்ணாமலை, இராஜேந்திரன் ஸ்ரீநிவாசன், சுபா வென்கட்,

ஸ்ரீகாந்த் சத்யநாராணா, க்ரியா இராமக்ருஷ்ணன், வடக்கு வாசல் ஆசிரியர்
\
பொன்னேஸ்வரன், செந்தில்குமார், ஆ.ரா. வெங்கடாசலபதி, பா.மதிவாணன்,

காலச்சுவடு தில்லை முரளி, தாய், உடன் பிறந்தோர், நூல்

உருவாக்கிக்கொண்டிருந்தச் காலக் கட்டத்திலேயே  நினைவில் வாழுபவராக

மாறிப்போன அவரது தந்தை, கால நேரங்களை அனுசரித்துக் கொண்ட

அவரது வாரிசுகளான அபி , கீர்த்தனா என்று உதவியோர் பட்டியல்

முழுவதையும் படம் பிடித்துக் காட்டிவிட்டார், ஆசிரியர், ஸ்ரீதர் என்கிற பயணி.

ஸ்ரீதரின் மனைவி, வைதேஹியின் பெயரை வலைப்பதிவாளர் விட்டுவிட்டார்

என்று யாரும் எண்ணிட வேண்டாம். அட்டை வடிவமைப்புக்கு ஆலோசனை

சொன்னதும், துவக்கத்திலிருந்தே எல்லாப் பணிகளிலும் உறுதுணையாய்த்

திகழ்ந்ததும் அவர்தானே! ஸ்ரீதர் மிகவும் கொடுத்து வைத்தவர். பெண்ணின்றி

ஆண் ஏது? சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதுதானே  உண்மை.


2002-ல் சீன மொழி ஓர் அறிமுகம் என்ற இவரது நூல் என்போன்றோர்

பார்வைக்கு வராதது எங்களது துரதிர்ஷ்டமே !

2012-ல் வரும் இந்த கவித் தொகை என்கிற  வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை

என்ற நூல் தமிழர்களுக்குக் கிடைத்ததோர் அறிவுப் பெட்டகம்.

பழம்பெரும் சீனப்புலவர் பிறக்கும் ஆண்குழந்தைக்கு ஆடை

அணிகலன்களுடன் தொட்டிலும், பெண்ணுக்கு தரையே பாயாகக் கொண்டும்

வளர்க்கப்படுவதாகாக் கவிதை ஒன்று எழுதியுள்ளார்,.

அதை மொழி பெயர்க்க முற்பட்டபோதுதான், உயிர்மை பதிப்பகம், சிஙப்பூரில்

வாழும் ஜெயந்திசங்கர்  சீனக் கவிதைகள ஆங்கிலத்திலிருந்து தமிழில்

மொழி பெயர்த்துள்ள விபரம் தெரிந்தது. அந்த நூலின் பெயர் மிதந்திடும் சுய

பிரதிமைகள். ரூபாய் 200 விலைக்குக் கிடைக்கும் இந்த நூல் மறுநாளே என்

நூலகப் புத்தகஙளுடன் சேர்ந்து கொண்டது,  சீன வரலாற்றையும், சீனக்

கவிதைகளின் தோற்றம் மற்றும் வளர்ச்சியையும் துவக்கத்திலேயே

முழுமையாகக் கொடுத்துள்ளார், ஜெயந்தி சங்கர்! அவர் எழுதிய நூல்களின்

பட்டியலை எல்லாம் பார்க்கும் பொழுது, சென்னை, எம்.ஜி.ஆர்., மருத்துவ ந்

மனையில் தன் இறுதி நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் திருமதி

இராஜம் கிருஷ்ணனின் வாரிசாகவே  நினைது  மகிழ்கின்றேன் , திருமதி

ஜெயந்தி சஙகர் அவர்களை!

பயணி என்னும் புனை பெயர் கொண்ட ஸ்ரீதர்,

தனது,  கவித் தொகை நூலினைத் தமிழில் உள்ள சஙக இலக்கியஙளுக்கு

ஈடாகக் கருதுகின்றார்

  1. கவித் தொகை பற்றிய அறிமுகக் கட்டுரைகள்

அறிமுகக் கட்டுரைகளில், பெய்ர், பொருள், காலம், அமைப்பு, ஒற்றுமை,

பாடல்கள் எவற்றைப் பற்றியவை, பாடல்களில் உள்ள கருத்து , மற்றும்

தகவல்களின் எடுத்துக்காட்டுத் தொகுப்பு, கவித் தொகையின் இலக்கிய

வரலாறு என மூன்று பிரிவுகளில் நம்மைச் சீனப் பழமைக்கே அழைத்துச்

சென்று விடுகின்றார்..


2.     தேர்ந்த்டுக்கப்பட்ட பாடல்களின் மொழி பெயர்ப்பில்,


      அ. நாட்டுப் பாடல்கள், ஆ.விழாப் பாடல்கள்.,  இ. வேண்டுதல் பாடல்கள்

       ஆகிய மூன்று பிரிவுகளை அமைத்துள்ளார்.

3. மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

     ஷிழ் சிங் நூலைச் சீன மொழியிலிருந்து தமிழாக்குதல்.....
 
     சில செய்முறைக் குறிப்புகளும் , எடுத்துக் காட்டுக்களின் வழியிலான

     உரையாடலையும் தந்துள்ளார். 

. பின்னிணைப்பு  -
 
பின்னிணைப்பில், சீனப்பாடல்களின் தலைப்பினையும்,

அதற்கிணையாகத்தாம் மொழி பெயர்க்குங்கால் வைத்துக்கொண்ட தமிழ்த்

தலைப்புக்களையும்  பட்டியலிட்டுள்ளார். இது தமிழுக்குப் புதுசு.


பாடல்கள் எந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டன என்ற விபரஙளையும்,

கட்டற்ற சீனக் கவிதைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும்

இணையதள விபரங்களையும் தந்துள்ளார். இதுவும் தமிழுக்குப் பு து சென்றே

கூறுவேன்.

பிற நாடுகளில் உள்ள நல்லன பலவற்றைப் பதிப்புரிமை    பெற்றோ

பெறாமலோ ஞானம் உள்ளோரைக் கொண்டு மொழி பெயர்க்கச் செய்து, பல

பதிப்புக்களையும்  வெளியிட்டு போட்ட முதலை விடப் பல மடங்கு லாபம்

பார்த்த பின்னரும், மொழி பெயர்ப்பாளருக்குரிய தொகையைக்

கொடுப்பதில்லை பெரும்பாலான பதிப்பகஙகள் / பதிப்பாளர்கள்.
 

அதிலும் மொழி பெயர்ப்பாளர் குடிகாரராய் இருந்துவிட்டால் முட்டடக்

குடிக்கச் செய்து விட்டு கையெழுத்து வாங்கிக்கொள்ளும் சான்றோரும்

உள்ளனர்.

பாலின் நிறம் எப்படி இருக்கும்  என்ற குருடனுக்கு வெள்ளையின் நிறத்தை

எப்படி எடுத்துக் காட்டிப் புரிந்து கொள்ளச் செய்ய இயலாதோ, அதே போன்று


இந்தப் புத்தகத்தின் அருமை பெருமைகள எடுத்துரைத்தல் என்னால் ஆகாத

காரியம்.



தமிழுக்கு, சீனத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதொரு நூல்,

கவித் தொகை என்னும் பெயரில் வந்துள்ளது. இதனை  மொழி பெயர்த்தவரும்


சுத்தத் தமிழர்தான். அவர் பெயர் ஸ்ரீதரன். பயணி என்ற புனை பெயர்

கொண்டவர் சீன மொழி அறிமுகம் என்ற நூலை 2002-ல் எழுதியவர்.

தற்பொழுது  இந்த நூலுக்கு கவித் தொகை என்பதோடு , வாரிச் சூடினும்

பார்ப்பவரில்லை என்ற பெயரினையும் சூட்டியுள்ளார். காலச்  சுவடு என்ற

பதிப்பகம் தனது 452 வது வெளியீடாகக் கொண்டு வந்துள்ளது. என்ற

தகவலுக்காகத்தான்!


மொழிபெயர்ப்புரிமை, ஸ்ரீதரன் என்று மட்டும் போடப்பட்டுள்ளது. பயணி,


இந்த நூலை,
வணக்கத்துடன் நம் முன்னோர்களுக்கும்,
வாஞ்சையுடன் நம் பின்னோகளுக்கும்
என்று கூறிவிட்டார்.

எனவே,  நாம் தாராளமாக அவர் பெயர் மின்னஞ்சல் முகவரியுடன் பயன்படுத்துவதைக் காலச்சுவடு பதிப்பகம் அனுமதிக்கும் என்றே நம்புகின்றேன்.

பயணியைத் தொடர்பு கொள்ள :- msridharan@gmail.com


”க்கான்!” , ”க்கான்!” -மரத்தை வெட்டுவோம்’

நாம் அவற்றை மேட்டில் அடுக்குவோம்

ஆற்றில் தண்ணீர், தெளிவும் அலையும்.

விதைபதுமில்லை, அறுப்பதுமில்லை

முன்னூறு ச்சான் நில தானியம் மட்டும் குவிவது எப்படியாம்?

விரட்டுவதில்லை, வேட்டையுமில்லை

வீட்டுமுற்றத்தில்  தகசுக்கறியாய்த் தொங்குவதெப்படியாம்?

அந்த பிரபுக்குல ஐயாமாரோ,

தண்டச்சோறே தின்பதில்லையே !  ( 1 )



”க்கான்!” , ”க்கான்!” -மரத்தை வெட்டுவோம்’

நாம் அவற்றை மேட்டில் அடுக்குவோம்

ஆற்றில் தண்ணீர், தெளிவும் சமனும்,

விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை

மூவாயிரங்கோடித் தானியம் மட்டும் குவிவது எப்படியாம்?

விரட்டுவதில்லை, வேட்டையுமில்லை

வீட்டுமுற்றத்தில்  வளர்ந்த கிடாக்கறி தொங்குவதெப்படியாம்?

அந்த பிரபுக்குல ஐயாமாரோ,

தண்டக்கூழே  குடிப்பதில்லையே!  ( 2 )


”க்கான்!” , ”க்கான்!” -மரத்தை வெட்டுவோம்’

நாம் அவற்றை மேட்டில் அடுக்குவோம்

ஆற்றில் தண்ணீர், தெளிவும் சமனும்,

விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை

மூவாயிரங்கோடித் தானியம் மட்டும் குவிவது எப்படியாம்?

விரட்டுவதில்லை, வேட்டையுமில்லை

வீட்டுமுற்றத்தில்  வளர்ந்த கிடாக்கறி தொங்குவதெப்படியாம்?

அந்த பிரபுக்குல ஐயாமாரோ,

தண்டக்கூழே  குடிப்பதில்லையே! ( 3 )

குறிப்புகள்:-

1  .மூலத்தில்  சந்தன மரம், வெட்டுவதற்குக் கடினமான மரம் என்ற அளவிலே
   குறிப்பிடப்படுகின்றது.

2  ச்சான் நில அளவு. ஏறத்தாழ 66 ஹெக்டேர். முன்னூறு என்னும் அளவுச்
     சொல்  மிக அதிகம் என்ற வகையில் பயன் படுத்தப்பச்ட்டுள்ளது.

3  தகசு BADGER, RATEL,  தவழ் கரடி. இச்சொல் பிற்காலத்தில் மருவி, ட்கசு
   என்றானது. தன்னளவிலும் பெரிதான விலங்குகளைக் கொல்லும் மூர்க்கம்
  உடையது.

4  மூலத்தில், யீ என்ற அளவுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு யீ என்பது
     பத்து கோடியைக் குறிக்கும்.


   மரம் வெட்டுபவர்கள் பாடுவதாக அமைந்துள்ள பாடல்.
கோடரிகள் மரத்தை வெட்டும் பொழுது ஏற்படும் சத்தம் தான் “க்கான்”.
ஒரே வெட்டில் மரம் வெட்டுப்பட்டு விடுவதில்லை.
தொடர்ந்து வெட்டுவதால் பலன் கிடைக்கின்றது.
கீழேயும் விழுகின்றது, மரம்.
வேலை பார்க்கும் பொழுது கேள்வியும் கேட்கிறார்கள்.

சின்னச் சின்னக் கேள்விகள்தான்.
அது மனதில் தோற்றுவிப்பதோ
பெரிய பெரிய பதில்களைத்தான்!
எளிய கேள்விகள்;
எளிய சொற்கள்;
எளிமையான
வெளிப்பாட்டு முறை.

”அந்தப் பிரபுக்குல  ஐயாமாரோ, தண்டச்சோறே   தின்பதில்லையே,
                                தண்டக்கஞ்சியே குடிப்பதில்லையே,
                                தண்டக் கூழே   குடிப்பதில்லையே! “

  என்ற வரிகள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ ஓர் ஆற்றங்கரையில்
  ஏதோ ஒரு மதியத்தில் வெளிப்படுத்தப்பட்ட பசித்த வயிறின் கோபம் கலந்த நமுட்டுச்
  சிரிப்புத் தெரிகின்றது.

      நமுட்டுச் சிரிப்பென்கின்றார் மொழிபெயர்ப்பாளர்.
     
      இயலாமையின் வெளிப்பாடு என்கிறேன் நான்!

      நினைவில் வாழும் ஜீவானந்தமும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும்

      நினைவுக்கு வருகின்றனர்.

      இதற்கு முந்தைய பதிவான விக்கிரமாதித்யனின் கவிதை வரிகளும்

      அந்த மரம் வெட்டுபவர்கள் எதிர்க்க முற்படாமல் தொடர்ந்து

      கூலிகளாய் இருப்பதற்கான காரணிகளைத் தெளிவாக்குகின்றன.

      எதிர்க்க  முற்பட்டால் கிடைக்கும் கால் வயிற்றுக் கூழோ, கஞ்சியோ

      அல்லது சோறோ கூடக் கிடைக்காமற் போகும் என்ற அச்சத்தால்தனே?


 மொழி பெயர்ப்பாளரின் தொடர்பு மின்னஞ்சல்:- msridharan@gmail.com

  kaalassuvadu pathippakam, nagerkovil, 91-4652-278525

  e mail :- publications@kalachuvadu

நூல் டெல்லியில் வெளியிடப் போகும் செய்தினை

இந்து ஆங்கில நாளிதழில்

படித்துச்  சொன்ன,

எனது அருமை நண்பர்

இ.சரவணனுக்கும்,

நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகத்தில் உடனே வாங்கி சென்னைக்கு

அனுப்பி   வைத்த எனது அருமை நண்பரும், யாளி என்ற புதுமையான நவீன

நாவலைப்   படைத்தளித்தவருமான  மணிதணிகை குமாருக்கும்  ( 9443177764 )

அன்பார்ந்த வணக்கமும் நன்றியும்.

         




    

0 comments:

Post a Comment

Kindly post a comment.