Saturday, March 10, 2012

யார் இந்த ஆப்பிரிக்கப் பேரழகி ?

ஆப்பிரிக்கப் பேரழகியின் வயது 93-ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவென்ன புதிய சாதனை என்கிறீர்களா? அவர் வரலாறு தெரிந்தால் நெஞ்சமெல்லாம் நெக்குருகும்; கண்களில் நீர்  அருவியெனக் கொட்டும்.

20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திடும் பெரும்பேறு பெற்ற பெருமாட்டி நமது பேரழகி.  குடிப்பிறப்பால் பிரிட்டிஷ்காரர். ஆனாலும் பிறந்ததென்னவோ பெர்ஷியாவில் ( இன்றைய ஈரான் ) தந்தை இம்பீரியல் வங்கியில் எழுத்தராகப் பணியாற்றினார். அம்மா நர்ஸாக வேலை பார்த்தார்.

 பிஜித் தீவில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கூலிகளாக வேலை பார்க்கத் தமிழர்கள் சென்ற கதை  கடந்த காலத் தமிழக வரலாறு  நம்மில் பலருக்குத் தெரியும். ”திரை கடலோடியும் திரவியம் ( செல்வம் ) தேடு“ என்று அறிவுறுத்திய தமிழின முன்னோடிகளையும் நாம் அறிவோம்.

 மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்ற மூதாட்டியின் வார்த்தையைத் தட்டிக் கழிக்காமல், பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு தமிழின வாரிசுகளாகிய  நம்மில் பலர் தப்பாமல்  இன்று அதைத்தானெ செய்து கொண்டிருக்கின்றோம்.

அன்று கரும்பு. இன்று கணினி. அன்று வெயிலும் மழையும். இன்று குளிரூட்டப்பட்ட அறைக் கூண்டு. கால நேரம் அன்றும் இல்லை; இன்றும் இல்லை. கொடுக்கப்பட்ட திட்டத்தினை அந்தக் கல அளவ்விற்குள் முடித்தாக வேண்டும்.தீட்டப்படும் அட்டவணையோ மணிக்கு மணி வாரத்திற்கு வாரம் மாதஙளுக்கு மாதம் நிரைவேற்றப்பட வேண்டிய திட்டத்தின் குறிப்பிட்ட எல்லையை அடந்திருக்க வேண்டும் என்று வரையறைக்கப் பட்டிருக்கும். இரவு பகலாகத் தொடர்ந்து வேலை பார்க்கும் பொழுது  இதில் கோளாறுகள் ஏற்பட்டால் பணியாளர்களின் தகுதி நிலையில்  கூட மாற்றம் ஏற்படக் கூடும். கட்டுப்பாட்டின் தீவிரத் தன்மை அனுபவித்தவர்களுக்குத்தன் தெரியும்.

 வெளி நாடுகளில் பணிபுரிவோருக்குத்தான் இந்தத் தொல்லை என்றில்லை. இங்கிருக்கும் வருவாய் உள்ள பெற்றோரும் இரவில் சில மணி நேரம் உறக்கத்க்தைத் தொலத்தால்தான்  வாரிசுகளிடம் கணினி மூலம் \பேச முடியும். மறுநாள் பணியாற்றும் இடங்களில் தூங்கி விழ்த்தான் வேண்டியதிருருக்கும் . அன்றாட வாழ்க்கையின் இன்பங்களையும்  அனுபவிக்க முடியாமல் திண்ட்டாடத்தானே செய்கின்ர்றோம்.

அதே போன்று, பெர்ஷியாவிலிருந்து இடம் பெயர்ந்தனர் இந்தப் பேரழகியின் பெற்றோர்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்த ரொடீஷ்யாவிற்கு,
(  இன்றைய  ஜிம்பாபேவே  ) .எதற்காக?   அரசு இலவசமாகத் தரும் நிலப் பகுதியில் ,வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம்;  மக்காச் சோள விவசாயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்துடனும் வாழ்விடத்தை மாற்றினர்.

ஆயிரக்கணக்கான துண்டுதுண்டான நிலங்களில் உள்ள புதர்களை எல்லாம் அகற்றும் பணியில் இறங்கினர். அம்மாவின் கடினமாக உழைத்தார். எழுத்தராக வங்கியில் பணியாற்றிய தந்தையால் கடும் வேலைகளைச் செய்ய முடியவில்லை. இச்சூழலில் வளர்ந்த நமது கதாநாயகிக்குத் தம்பி ஹரியுடன் விளையாடுவதுதான் மகிழ்ச்சியைத் தரும் ஒரே பொழுது போக்கான விஷயம். வயது ஏறியபோது அதிலும் இடி இறங்கியது.

வருங்கால வாழ்வின் நலம் கருதி அருட் சகோதரிகள் நடத்தும் பள்ளியில் தன் மகளைச் சேர்த்துவிட்டார், அன்புத் தாய். ஆனால், அங்கே நடந்ததோ வேறு கதை. வெறுக்கத்தக்க அச்சமூட்டக்கூடிய நரகலோகக் கதைகளையே சகோதரிகள்  போதிதனர் . பின்னர்  தலைநகர் சாயிஸ்பரியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அங்கும் அதே அச்சுறுத்தும் தன்மையே தொடர்கதை ஆனதால், பள்ளிப் படிப்பிற்கு வைக்கப்பட்டது முற்றுப் புள்ளி.

சிலகாலம் நர்ஸாகவும் பணிபுரிந்த அனுபவம் உண்டு. அப்போது, அரசியல், சமூகவியல் நூல்கள் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார். அதுசமயம் தங்கியிருந்த உறவினர் வீட்டில், இவரது brother-in-law , இவரது படுக்கைக்கு வந்து முத்தமிடுதல் முதலான சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் அந்த வீட்டைவிட்டு வெளியேறினார். முதல் திருமணமும் நடந்தது.

பின்னர், தொலைபேசி இயக்குநராகப் பணியாற்றியபோது, FRANK CHARLES  WISDOM என்பவரோடு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். கணவரோடு வாழும் பொழுது எழுதிய கவிதையும்கூட, இவர் வாழ்க்கையில் புயல் வீசிட ஒரு காரணியாய் அமைந்தது. வந்த கணவனால் வாழ்க்கை சிறக்கவில்லை. நமது கதாநாயகியின் பெற்றோரின் நிம்மதியும் பறிபோனது. மொத்தத்தில் இவரது வாழ்க்கையும், இவர் பிறந்த குடும்பமும் சீரழிந்தன. ஒரு கட்டத்தில் துணிச்சலுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் நமது கதாநாயகி. ( 1939-1943 )

அப்போது பொதுவுடைமை இயக்கக் குழுவினரின் அறிமுகம் கிடைத்தது.  பள்ளியில் கற்றுத் தரும் கல்விக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் உள்ள முரண்பாடுகளே இவரது வாழ்க்கையைச் செப்பனிட்டது என்று கூறலாம்.

பொதுவுடமைக் கொள்கையைப் பின்பற்றிய கூட்டத்தின் தலைவனிடம் நெருக்கமும் ஈர்ப்பும் ஏற்பட்டது. இது திருமணத்தில் கொண்டு போய் முடிந்தது.   Gottfried Anton Nicolai Lessing (1945–1949) இரண்டாவது கணவனனுடன் வாழ்ந்த வாழ்க்கையும் நமது கதாநாயகிக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமைந்திடவில்லை.  ஆப்பிரிக்கப் பத்திரிக்கைகளுக்கு இரு சிறு கதைகளும் எழுதிப் பணம் பெற்றுக் கொண்ட அனுபவமும்  இவருகு உண்டு.

குறுகிய காலத்தில் இணந்ததுபோலவே, பிரியவும் செய்தார். இரண்டாவது கணவன் மூலம் பிறந்த மகனுடன் 1949-ல் லண்டனுக்குப் புறப்பட்டுச் செல்கின்றார், நமது கதாநாயகி.

இந்தக் காலக்கட்டத்தில்தான் “The Grass Is Singing" என்ற நாவலை வெளியிடுகின்றார். பிற ஆப்பிரிக்க ( பெண் ) எழுத்தாளர்களைப் போன்று கல்லூரிகளில் பயின்று எந்தவிதப் பட்டமும் பெற்றிடவில்லை. ஆனால், எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தினை இந்த நாவல் பெற்றுத் தந்தது.







பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதுபோன்று, ஆரம்ப காலக்கட்டத்தில் நமது நாயகியின் துணிச்சலையும், சமூகத்தின் மீது  வைக்கப்படும் கருத்துகளையும், ஆடவர்களுக்கும் மேலாக எழுதும் தன்மையினையும் பெண்களே வியந்தும் குறைகூறியும் பேசினர். பின்னர் அவர் சொல்வதெல்லாமே சரி என்ற நிlaiப்பாட்டிற்கும் வந்தனர். சொர்க்கம் நரகம் கோட்பாடுகளை எல்லாம் மறுக்கும் நிலையினை உணரச் செய்தார்.
Novels
The Children of Violence series
  • Martha Quest (1952)
  • A Proper Marriage (1954)
  • A Ripple from the Storm (1958)
  • Landlocked (1965)
  • The Four-Gated City (1969)
The Canopus in Argos: Archives series
Opera libretti
Comics
Drama
  • Each His Own Wilderness (three plays, 1959)
  • Play with a Tiger (1962)
Poetry
  • Fourteen Poems (1959)
  • The Wolf People – INPOPA Anthology 2002 (poems by Lessing, Robert Twigger and T.H. Benson, 2002)
Short story collections
  • Five Short Novels (1953)
  • The Habit of Loving (1957)
  • A Man and Two Women (1963)
  • African Stories (1964)
  • Winter in July (1966)
  • The Black Madonna (1966)
  • The Story of a Non-Marrying Man (1972)
  • This Was the Old Chief's Country: Collected African Stories, Vol. 1 (1973)
  • The Sun Between Their Feet: Collected African Stories, Vol. 2 (1973)
  • To Room Nineteen: Collected Stories, Vol. 1 (1978)
  • The Temptation of Jack Orkney: Collected Stories, Vol. 2 (1978)
  • Through the Tunnel (1990)
  • London Observed: Stories and Sketches (1992)
  • The Real Thing: Stories and Sketches (1992)
  • Spies I Have Known (1995)
  • The Pit (1996)
  • The Grandmothers: Four Short Novels (2003)
Cat Tales
  • Particularly Cats (stories and nonfiction, 1967)
  • Particularly Cats and Rufus the Survivor (stories and nonfiction, 1993)
  • The Old Age of El Magnifico (stories and nonfiction, 2000)
  • On Cats (2002) – omnibus edition containing the above three books
Autobiography and memoirs
Other nonfiction

பள்ளிப்படிப்பிற்கு இடையிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்ட, பட்டம் பெறாத ஒரு பெண்மணி, அரிதின் முயன்று எழுதிய நூல்களின் பட்டியலைப் பார்த்தால் தலை சுற்றுகின்றது. கட்டற்ற கலைக் களஞ்சியம் என்று தமிழில் அழைக்கப்படுவது , விக்கிபிடியா.

அவரைப் பற்றிய ஆங்கில விக்கிபிடியாவிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள்தான் இவை. இவ்வளவு முயற்சிகளுக்குப் பெற்ற சமூக அங்கீகாரங்கள் எவையேனும் உண்டா? வினாவிற்கு விடை கீழே!

Archive

Lessing's largest literary archive is held by the Harry Ransom Humanities Research Center, at the University of Texas at Austin. The 45 archival boxes of Lessing's materials at the Ransom Center contain nearly all of her extant manuscripts and typescripts up to 1999. Original material for Lessing's early books is assumed not to exist because she kept none of her early manuscripts.[33] Other institutions, including the McFarlin Library at the University of Tulsa, hold smaller collections.[34]


சந்தோஷமற்ற இளமைக் காலங்ககளைப் பற்றி ஒளிவு மறைவற்ற பேட்டிகளைத் தந்திருக்கின்றார். கஷ்டப் படும் பொழுதெல்லாம் அதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வதென்ற கனவுகளிலேயே காலத்தை செலவிட்டதாகக் கூறுகின்றார்.

அந்தக் கனவுகளில் ஆயிரக்கணக்கான புத்தகஙளைக்கொண்ட புத்தகக் கட்டுகள் அஞலில் வருவது போலவும் தோன்றுமென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

Dickens, Scott, Stevernson, kilpiylater, D.H.LaWrence, Stendhal, Tolstoy, Dostoevsky,   இவரைப் பதப்படுத்திய நூல்களுள் சிலவாகும்.

உலக மகா யுத்தத்தின் பாதிப்புகளைத் தன் தந்தையிடம் கேட்டறிந்தார். யுத்தம் ஒரு கொடூரமான. . நாம் எல்லோருமே- நம்மைப் போன்று நாடு விட்டு நாடு பிழைக்கச் செல்லும் தன்மையுடைத்தோராக யுத்தங்களால்தான் உருவாக்கப்பட்ட்டோம். சீர் குலைக்கப்பட்டோம். அத்தனையையும் மறக்கப்பட வேண்டியவை என்றும் எடுத்துரைத்தார்.

உலக எஜமானனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா பாராளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் யுத்த்ம் மேற்கொண்டதற்கான காரண காரியங்களை நிரூபிக்க முடியாமல் திணறுவதையும், அண்மையில் ஆப்கனில் குரான் நேச நாடுப் படைகளால் எரிக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்டதையும் நினைத்துப் பார்க்கத் தூண்டுகின்றது, இவரது பேட்டியில் கூறப்பட்ட கருத்துகள்.

 பேட்டிகளில். பேட்டிகளைச் செவ்வி என்று போட்டு விடுவதால் தமிழ் வளர்ந்து விடாது. டாக்டர் மு.வரதராசனார், சி.பா.. ஆதித்தனார் போன்றோர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளரும். சந்தோஷம், கஷ்டம், பேட்டி என்ற வார்த்தைகளையெல்லாம் அதனால்தான் இங்கே பயன்படுத்தியுள்ளேன்.


டாக்டர்.மு.வ.. சொல்லுவார். ”பஸ்” என்றால் பாமரனுக்கும் புரியும் என்றால்,
”பஸ்”  ஆகவே இருந்துவிட்டுப் போகட்டுமே, என்று!


ஆதித்தனார், தினத் தந்தியை வளர்த்த கதை இப்படித்தான்! யாராவது ஒருவர் செய்தித் தொகுப்பினைக் கொண்டு வந்தால், அலுவலக வாசலில் நிற்கும் வாயிற் காப்போனிடம் போய்ப் படித்துக் காட்டச் சொல்வாராம். அந்தப் பாமரனுக்கோ அல்லது அரைகுறைப் படிப்பாளிக்கோ புரிந்து விட்டதென்றால்தான் செய்திகள் அப்படியே பிரசுரமாகுமாம். இல்லை என்றால் அது எப்படிப்பட்ட செய்தியாக இருந்தாலும் குப்பைத் தொட்டிக்குத்தான். செல்லுமாம்.

தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகத்தில்  முனைவர் பட்டம் பெற்ற தமிழறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் நேரடியாகவோ அல்லது கணிப்பொறிக் கூடங்கள்  மூலமாகவோ கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிபிடியாவில் ஆளுக்கொரு கட்டுரை இடம் பெறச் செய்துவிட்டால், நமது நிலை மெய்யலுமே உயரும்.

உலகத்தில் கணினியைத் தாய் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் சீனருக்கே முதலிடம் இரண்டாம் இடத்தில் வருபவர்கள் தமிழர்கள். தமிழிஷ் பேசும் நாம் அதற்காகப் பெருமை கொள்ள முடியாது..

பெற்றோர், உடன்பிறப்பு , உற்றார், சுற்றம், நட்பு, சொத்து பத்துக்களை இழந்து, பிறந்த மண்ணையும் மிதிக்கமுடியாமல் உலகெங்கிலும் பரவிக்கிடக்கின்ற இலங்கத் தமிழர்களே தலையாய காரணம். கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் இன்னோரன்ன எல்லவற்றின் வளர்ச்சிக்கும் நிலைப்பாட்டிற்கும் அவர்களே காரணம். தமிழில் நாம் மறந்து விட்ட சொற்களைக்கூட இன்னமும் பயன்படுத்தும் அவர்களே காரணம்.

சுதந்திரத்திற்குப்பின்  கூட்டுறவு அமைப்புக்கள் பல தமிழ் நாட்டிலும் உருவாக்கப்பட்டன. இலங்கையிலும் உருவாயின. ஆனால், 1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் உள்ள ஒரு கூட்டுறவு நிதி நிறுவனம், இரண்ட்டாண்டுகளுக்கு ஒரு முறை உலகளாவிய அளவில் வெளியான நல்ல தமிழ் நூல்களுக்கு 500000/- ரூபாய் பரிசாக வழங்கி வருகின்றது, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல்.. பரிசு பெற்ற விபரங்களைக்கூட விளம்பரப் படுத்திடாமல், பரிசுத் தொகையை அவர்களுக்கே நேரடியாக அனுப்பிவிக்கப்படும் என்று தகவல் சொல்லுகின்றது. தமிழ் நாட்டில் அது போன்று ஒரு கூட்டுறவு சங்கத்தைக் காட்ட முடியுமா?

இலவசங்களைப் பெற்றுக்கொள்ளவும் வரிசையில் நிற்கின்றோம். இலவசங்களைத் தருவதற்கான மூலதனத்தைக் கொடுப்பதற்கும் வரிசையில் நிற்கின்றோம். கடாமார்க் சாராயத்தை அறிமுகப்படுத்தித் தலைமுறைகளையே நாசமாக்கிய உலகத் தமிழ்க் காவலர்களே, வாழிய நீடு!
சாராயத்தை விடக் கள்ளில் இருக்கும் ஆல்ஹகாலின் அளவு குறைவுதான், எனவே, கள்ளிறக்கவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திடும் பொதுவுடைமைத் தோழர்களே, வாழிய நீடு!

”எல்லாமே பணத்துக்குத்தான்டா, இல்லாத கொடுமைக்குத்தான்டா” என்றொரு திரைப்படப் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இவை எல்லாம் மக்களுக்காகப் பாடப்பட்டவை. ”எல்லாமே வோட்டுக்குத்தான்டா ” என்று பாடிக் கொண்டிருப்பது அரசியலில் பதவி வேட்டையாட கூட்டணி தத்துவத்தையே கூறிக் கொண்டிருப்பவர்கள் தான்.

இன்னும் எத்தனைநாள்தான் பொது எதிரியைத் தோற்கடித்திட எல்லோரையும் ஐக்கியப் படுத்திக் கொண்டிருப்பது ? இரு தலைவர்களின் வீடுகளுக்கும் மாறி  மாறி அலைந்து சமரசம் பேசுவது?

இதற்குமேல் இதைப்பற்றி எதுவும்  சொல்வதற்கில்லை. விபரம் வேண்டுவோர் உலகளாவிய அளவில் நடந்திடும் போட்டிக்கு இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கலைஞன் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை,6000017 -ஐ அணுகலாம். அல்லது virupa.com இணைய தளத்திற்குச் சென்று விபரம் தெரிந்து கொள்ளலாம். அதற்கும் மேல் ஏதாவது தகவல் வேண்டுமாயின், rssairam@gmail.com மடல் அனுப்பினால் ஒரே நாளில் பதில் கிடைக்கும்.

மீண்டும் தமிழ் விக்கிபிடியாவிற்கு வருவோம். தமிழ்க் கட்டுரைகள் துவக்கப்பட்ட நிலையிலேயே பல உள்ளன. ஆனால், எழுதத் துவங்கினால் முழுமையான செய்திகளைத் தந்துவிடும் மலையாளம் எண்ணிக்கையில் குறைந்டிருந்தாலும் தரத்தில்  தமிழைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

ஆனால். கோச்சடையான் என்ற படத் தயாரிப்பும் பற்றி ஒரு அறிவிப்பு வருகின்றது. அச்ன்று விக்கிபிடியாவில் அதைப்பற்றிய தகவல் எதுவும் இல்லை. ஓரிரு தினங்களில் கோச்சடையான் தமிழ் விக்கிபிடியாவில் இடம்பெற்று விடுகின்றது? என்னே, நம் தமிழ் ஆர்வம்? கோச்சடையன்  என்ற மன்னனைப்பற்றிய கதையாக இருக்கும் பட்சத்தில், கோச்சடையன் என்பதே சரி, கோச்சடையான் என்று இருக்கக்கூடாது என்று கண்டன அறிக்கை விடக்கூட ஓர் தமிழனில்லை, தமிழ் நாட்டில்!

ஒரு  பொறியற் கல்லூரிக்குள் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருக்கின்றார் ஒரு நடிகர். வாயிற் கதவைத் திறந்துவிடும் மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணாக்கன் ஒருவன், தைரியமாக, நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் , இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத இயலாமையைச் சொல்ல, வீட்டிற்கு வரவழைத்து, அவனது படிப்பு முடியும் வரை, அவனது எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கின்றார், அந்தநடிகர்.
அவர் நடித ஒரு படம் வசூலில் அசுர சாதனை படைத்து  விட்டதென்ற உண்மையைச் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் அவிழ்த்துவிட்ட கதைகள் ஏராளம். பாலை- திரைப்படத்தைக்  காணாமற்   செய்தபோது , எங்கே போனது நமது தமிழினப் பாசமும் பற்றும் ?

நேற்று வெள்ளியன்று, சென்னை, அசோக் நகரில் உள்ள சந்தியா பதிப்பகத்தில் 2000/-ம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கியபோது, அதன் உரிமையாளர், ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, இவர் இன்னமும் உயிருடன் உள்ளார், இந்தப்புத்தகம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.


 sandhyapublications@yahoo.com 044/ 24896979  9841191397


அந்தப் புத்தகத்தின் பெயர், டோரிஸ் லெஸ்சிங்,
எழுதியவர்,பத்திரிக்கையாளர்,
கே.உமாபதி.
நமது கதையின் நாயகியும் அவரே!
இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர் ( 2007 ).
இன்னும் உயிர் வாழ்கின்றார் என்ற செய்தி தெரிந்தவுடன்,
அந்தப் புத்தகத்தைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை.


எழுதிய உமாபதியையும், அறிமுகப்படுத்திய சந்தியாபதிப்பக
உரிமையாளரையும் நன்றியுடன் நினைத்துக் கொண்டு
கணிப்பொறியில் உள்ள மின் பக்கங்களின் உதவியோடு
இதனை எழுதி முடித்தேன்.


ஆனால், எழுதும் பொழுது, எம்.ஜி.ஆர். மருத்துவ மனையில் உள்ள
அன்னை, திருமதி இராஜம் கிருஷ்ணனும்,


அதற்கிணையாகக் களப்ணியாற்றிக் குடும்பநலனும் பேணிக்கொண்டு
பல நூல்களைம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் வாழ்கின்ற
அன்புச் சோதரி திருமதி ஜெயந்தி சங்கரும்,


திருச்சியில்  நிகழ்ந்த  ஆதித்தனார் இதழியல் கருத்தரங்கில்
தமிழகத்தின் வீர மங்கையாகப் பேருரையாற்றிய
தமிழச்சி தங்கப் பாண்டியனும்,


எல்லவற்றிற்கும் மேலாக, தான் எழுதிய செங்கிஸ்கான்
என்னும் நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்து எனக்கு நல்லாசி நல்கிவரும்
பெரியவர். லயன், சீனிவாசனையும்


நன்றியோடு நினைத்து இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

Doris Lessing

Lessing at lit.cologne in 2006
Born Doris May Tayler
22 October 1919 (age 92)
Kermanshah, Persia
Pen name Jane Somers
Occupation Writer
Nationality British
Period 20th century, 21st century
Literary movement Modernism, Postmodernism, Sufism, Socialism, Feminism, Science fiction
Notable work(s) The Grass Is Singing, The Golden Notebook, Briefing for a Descent into Hell, The Good Terrorist, Canopus in Argos, The Cleft
Notable award(s) Nobel Prize in Literature
2007
Spouse(s) Frank Charles Wisdom (1939–1943)
Gottfried Anton Nicolai Lessing (1945–1949)




                 "  அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
                    ஆண்டவன் கூட அஞ்சிடுவான்;
                     அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தால்
                      பிறவிக் குருடனும் கண் பெறுவான்  "           

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

திரைக்கு எழுதாத் கடைசிப் பாடல்

பாதை தெர்யுது பார் என்ற நாடகத்திற்க்காக எழுதிய பாடல்

”ஆண்டவன் கூட அஞ்சிடுவான் ”

என்ற முழுப்பாலின் சில வரிகள் மட்டும்.

கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17


INTO@ KARPAGAMPUTHAKALAYAM

  WWW.KARPAGAMPUTHAKALAYAM.COM

 ( USE SMALL LETTERS )


















0 comments:

Post a Comment

Kindly post a comment.