Sunday, February 12, 2012

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் சென்னையில் தெருத்தெருவாக வலம்வரும் காவல் துறை!


Chief Minister's Special सेल

E-MAIL एड्रेस

cmcell@tn.gov.in


வாக்காளர் பட்டியலுடன் அறியாமை நீக்கி அறிவொளி ஏற்றும் ஆசிரியப் பெருமக்கள் வீதிவீதியாகச் சென்று வாக்காளர் பட்டியலைச் சரி செய்திட தகவல்களைச் சேகரிப்பார்கள்।

மேலும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், இடமாறுதல்களைக் குறிப்பிடுதல், பெயர்களை நீக்குதல், புகைப்படங்களைச் சேர்த்தல் போன்ற எல்லா வேலைகளும் ராக்கட் வேகத்தில் தமிழகத்தில் நடந்துவருவது யாராலும் மறுக்க முடியாத விஷயம்। யாரும் பட்டியல்களோடு சென்று எதுவும் செய்து விட முடியாது। வாக்காளர்களே நேரடியாகச் சென்றால்தான் இவற்றைச் செய்யமுடியும்। இந்தப் பணிகளை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்கள் அத்தகைய அரசியல்வாதிகளை வெளியே போ என்று கூடச் சொல்லாமல் வாசலை நோக்கிக் கையைக் காட்டிவிடும் அற்புதங்கள் தமிழகத்தில் நடக்கத் துவங்கிவிட்டன. நேற்று வேலைக்குச் சேர்ந்த ஆசிரியைகள் கூடத் துணிச்சலுடன் செயல்படுவதை சென்னையில் நேரடியாகப் பார்த்து வருகின்றேன்.

அதற்கும் ஒருபடி மேலேபோய்த் தற்பொழுது வாக்குச் சாவடிக்குவேண்டிய ”பூத் சிலிப்பையும்” அதிகாரிகளே வீடுதோறும் வழங்கிவருவது நமக்கெல்லாம் நன்கு தெரியும்। இதனால் லஞ்சம் கொடுக்க முற்படும் அரசியல்வாதிகள் வாக்காளர்களை வீட்டில் சந்திக்கும் வாய்ப்புக்களும் பெரும்பாலும் குறைக்கப்பட்டு விட்டன।

இத்தகைய நடவடிக்கைகளில் தேர்தல் அலுவலக மேலாண்மை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்। எனவே இந்தியா முழுவதும் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். .

ஆனால் சென்னைத் தெருக்களில் தெருதெருவாக வாக்காளர் பட்டியலுடன் காவலர்கள் இருவர் வலம் வந்தவண்ணம் உள்ளனர். அந்தப்பட்டியலைப் பார்த்தால் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் பெயர்களுக்கு எதிரே சிகப்பு மையால் அடையாளமிடப்பட்டிருந்தது.

அவர்கள் இருக்கும் வீடுகளுக்கெல்லாம் சென்று ஸ்டிக்கர் வசதியுடன்கூடிய 19 செ।மீ।நீளமும் 12।5 செ।மீ.அகலமும் உடைய எளிதில் கிழிந்து விடாத பிளாஸ்டிக் தன்மையுடைய பேப்பரைக் விட்டுப்பேசத் தொடங்கினார்கள் அவர்களது பேச்சில் இப்பொழுதான் திருவள்ளுவர் சொன்ன இனியவை கூறல் அதிகாரத்தின் பத்துக் குறட்பாக்களையும்படித்துவிட்டுவந்தவர்கள் போல் இருந்தது.


காவலர்களக் கண்டாலே அஞ்சி நடுங்குபவர்கள் கூட நெருங்கி நின்று வேடிக்கை பார்க்க முடிந்தது. முதியோர்களும், குறிப்பாகத் தனியாக இருக்கும் முதியோர்களும், பகலில் மட்டும் தனியாக இருக்கும் முதியோர்களும், சிங்கிளாக இருக்கும் முதியோரும் எப்படியெல்லாம் நடந்துகோண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரிவாகவே விளக்கம் தந்துவிட்டனர். 63 வயய்துடைய எனது வாழ்க்கையில் இது போன்ற காட்சியைக் கண்டதே இல்லை.

”இது கனவல்ல நிஜமா என்று உடம்பைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டாள்” என்று அந்தக்காலத்துக் கதைகளில் படித்த வரிகள் கூட நினைவுக்கு வந்தது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த வாரிசுகளின் குழந்தைகளின் (பேரன்,பேத்திகள்) கூச்சலால் அந்த நிலை எனக்கு ஏற்படவில்லை.

அந்தப்பேப்பரில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வாங்கிப் பார்த்தேன். அதில் உள்ளதை உள்ளபடி எழுதுவதுதானே வலைப்பதிவர்களின் கடமை.


காவல் துறை - அவசர உதவிக்கு

காவல் கட்டுப்பாட்டு அறை
100 அல்லது 044 23452377

T 1 அம்பத்தூர் காவல் நிலையம் 044 23452797

T 1 அம்பத்தூர் காவல் ஆய்வாளர் (ச।ஒ) 9840495695

T 1 அம்பத்தூர் காவல் ஆய்வாளர் (கு।பி) 9840888922

அம்பத்தூர் காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் 044 23452794

அம்பத்தூர் காவல் உதவி ஆணையாளர் 9444390888

அம்பத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம் 044 23452793

இதில் தேர்தல் ஆணையத்திற்குத் தொடர்பிருக்காது என்று படிக்காத பாமரனுக்குக் கூடத் தெரியும்। நிச்சயமாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் அதிரடி ஆணையாகத்தானே இருக்க முடியும் என்ற முடிவிற்கும் வந்தேன்। காவல்துறை முதல்வர் வசம்தானே இருக்கின்றது வலைப்பூ நண்பர்களே ?

இந்தியாவில் இதுபோல் பிற மாநிலங்களில் இருப்பதாகத் தெரியவில்லை। பிற மாநிலத்திலிருந்து இந்கு வந்து பணிபுரியும் இளஞர்களிடம் விசாரித்தேன், எனது அரைகுறை ஆங்கிலத்தில்। உதட்டைப் பிதுக்கி இல்லை என்றனர்।

நான் குடும்பத்துடன், ஜாவூங்கா , நஹி ஜாவூங்கா, இரு வார்த்தைகளை வைத்துக் கொண்டே ஹரித்வார்வரை குடும்பத்தாருடன் சென்று வந்தவன்। எனவே, இந்தியில் யாரிடமும் விசாரிக்க முடியவில்ல।

இதே போன்று எனது வீட்டிற்கும் தரப்படுவிட்டதா என்பதை அறிந்து கொள்ள, ஷேர் ஆட்டோவில் ஏறினேன், வீட்டிற்குச் செல்ல! சென்னையில் இவ்வகை ஆட்டோக்களில் பயணிப்பது பலரது வாடிக்கையாகிவிட்டது.

மேலும் சில தகவல்கள்; ,ஆதார் அட்டைக்கும் சென்னைப் பகுதியில் மிக வேகமாகப் பணிகள் தொடர்கின்றன। ரேஷன் கடைகளிலும் தேதி நேரம் எழுதிப்போட்டு மாற்றங்களை எழுதித் தந்து ரேஷன் அலுவலகத்திற்குப் போகச் சொல்லுகிறார்கள்। ரேஷன் கார்டில் முத்திரை போட்டு ஓராண்டிற்கு நீட்டித்தும் விட்டனர
நடந்தால் பாராட்டுங்கள். இல்லை என்றால் மக்கள் பிரதிநிதிகள் மூலம் முயற்சியுங்கள். அப்படியும் நடக்காவிட்டால் முதல்வரை நாடுங்கள்

இந்தநற்செயலகளுக்கெல்லாம் நடுநிலை உணர்வுடைய வலைப்பூ பதிவர்கள் தமிழக முதல்வரைப் பாராட்டி மின்னஞசல் அனுப்பலாமே, உடனடியாக! வசதிக்கு தமிழக முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் செயல்படும் செல் மின்னஞ்சல் முகவரியை மேலேயே கொடுத்து விட்டேன் ।மற்றவை உங்கள் விருப்பம்।


பின் குறிப்பு, மகிழ்வுடன்.

எப்படியோ 200 பேர் பார்ப்பதற்கே திணறிக்கொண்டிருந்தது எனது வலைப்பூ. நேற்றைய எண்ணிக்கை 721. இன்று இது வரை 507. சென்ற மாதம்14084. ஆக மொத்தம் 54529.
SEO PAGE SCORE 60. ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.

1 comments:

  1. --
    Affiliated to http://www.peopleofindia.net
    To post to this group, send email to people-of-india@googlegroups.com
    To unsubscribe from this group, send email to
    people-of-india+unsubscribe@googlegroups.com
    For more options, visit this group at
    http://groups.google.co.in/group/people-of-india?hl=en?hl=en
    Reply | Reply to all | Forward | Print | Delete | Show original

    Add star
    Subbaraman NV
    13 February 2012 06:53
    Reply-To: people-of-india@googlegroups.com
    To: people-of-india@googlegroups.com
    Reply | Reply to all | Forward | Print | Delete | Show original
    Our great CM has no time for any good thing for the society!
    N V Subbaraman
    - Show quoted text -
    --
    N V Subbaraman,
    Editor, Young Poet,
    12 / 1045 Jeevan Bhima Nagar,
    Chennai - 600101

    ReplyDelete

Kindly post a comment.