Saturday, February 11, 2012

புதிய தேர்தல் முறைக்குப் பின் முதல் பிரதமராக இன்றையத் தமிழக முதல்வர் ஏன் வரக் கூடாது? புத்தரின் கதையுடன்!
புத்தர் பெருமான் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில்,தன் கையிலிருந்த குட்டை துணியில் முடிச்சிட ஆரம்பித்தார்।

பிறகு,முன்பு இருந்த துணிக்கும் இப்போது உள்ள துணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?என்று சீடர்களிடம் கேட்டார்

உடனே சீடர் ஒருவர் முன்பு இருந்த துணி சுதந்திரமாக இருந்தது।முடிச்சிகள் போடப்பட்ட பின்பு, இந்த துணி தனது சுதந்திரத்தை இழந்து கட்டுண்டு கிடக்கிறது என்றார்.

உடனே,அதுபோல்தான் இயல்பில் எல்லோரும் கடவுள்தான்।ஆனால் முடிச்சுகள் போட்டுக்கொண்டு நாமே நம்மை பிரச்சினைகளில் சிக்க வைத்துக் கொள்கிறோம்.

எனவே, நல்லதோ கெட்டதோ பிறர் நமக்கு ஏற்படுத்தி தருவது இல்லை।நாமே நமக்கு பிரச்சனைகளை விளைவித்துக் கொள்கிறோம்.நம்மை அறியாமல்,விழிப்புணர்ச்சி இல்லாமல் நாம் போட்டிருக்கும் முடிச்சுகளில் சிக்கி,சிக்கலை அவிழ்க்க முடியாமல் நாம் திணறிக்கொண்டிருக்கிறோம் .இதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

எப்போதுதான் நாம் விழித்துக்கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை என்றார் புத்தர்।

எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர், ஒருவனிடம் உள்ள குடிப்பழக்கத்தையும், பெண்வகையிலான களள உறவுகளையும் நீக்கிவிட்டுப்பார்த்தால் எல்லோரும் நல்லவர்களே என்பார்।

தமிழகத்தின் பெரிய தற்போதைய சிக்கல் டாஸ்மாக்। கடைகளை மூடச்சொல்லிப் போராடவேண்டிய இயக்கமே கள்ளுக்கடைகளைத் தீர்க்கச் சொல்லித் தீர்மானம் போடுகின்றது; கோரிக்கை வைக்கின்றது; அதில் உள்ள போதை தரும் ஆல்ஹகாலின் அளவு குறைவு; உடலுக்கு நல்லது என்று வக்கலாத்து வாங்குகின்றது

காந்தி சொன்னவுடன் கள்ளுக்கடைகளை மூடி, கள்ளிறக்கத் துணைநிற்கும் மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார் ஈவே.ரா.அவர் வழிவந்தவர்கள் அவரைப் பின்பற்றுவது கள்ளில் மட்டும்தான். அதுவும் அது விற்பனக்கு அனுமதிக்கப் படாதவரைதான்!

காந்தியின் பெயரை வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கும் கட்சியோ மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள கூட்டுச் சேர்பவர்களுக்குக் காவடி தூக்குகின்றது। சுதந்திர உணர்ச்சியே இல்லை।

தாமிரவருணிக்கரையில் குழலூதும் கடவுளின் பெயரைக் கொண்ட தமிழ்க் கடலும், கொங்குப்பகுதியில் தமிழை அருவியாகக் கொட்டுபவரும் இவர்களைப் போன்ற சிலரும் துணிச்சலாகக் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

தமிழகத்தின் சிக்கலைத் தீர்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டுள்ள, சிவனையும் விஷ்ணுவையும் தன்பெயரில் இணைத்துள்ள மாத இதழ் ஒன்றின் ஆசிரியர் பெரும் பொருள் நஷ்டத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார்।

கால நேரம் பார்க்காமல் குடிகாரக் கணவன்மாரால் பாதிக்கப்படும் பெண்மணிகள் நள்ளிரவில் கூட அவரைத் தொலைபேசியிலும், அலைபேசியிலும் அழைக்கின்றனர். குடியினின்றும் என் கணவரை மீட்டுத்தாருங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அவரும் இயன்றவரை உதவி வருகின்றார்

குறும்படம் ஐந்தடங்கிய குறுவட்டின் (வன்தகட்டின்) மூலமும் தமிழகத்தில் பாடத்தைத் தொடர்கின்றார் தமிழகத்தின் இடியாப்பச் சிக்கலாம் குடியினை அழித்திட. அப்படங்களைப் பார்த்தவர்கள் குடிக்க மாட்டார்கள். புகைக்க மாட்டார்கள். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்த மாட்டார்கள். சின்னஞ்சிறுவர்களைப் பாலியல் தொல்லைகட்குட்படுத்த மாட்டார்கள். சிறந்த கடிதத்திற்குப் பரிசும் அந்த டி.வி.டி.தான். AA- தொலைபேசி எண்களைப் பகுதிவாரியாக வெளியிடுவதன் மூலமும் பாடம் நடத்துகின்றார்.

படித்த வாரிசுகள் கொண்டு வரும் பெரும் மாதந்திர வருவாயைத் தன் கணவன் மூலமோ அல்லது சுய சம்பாத்தியதிலோ கண்ணால் காணாத பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் பீடி சிகரெட்டை அனுமதித்தது போன்று குடியையும் கண்டுகொள்ளாமல் நீக்குப்போக்காக நடந்து கொள்ளத் துவங்கிவிட்டனர்।

தன் குடும்ப வாரிசுகளுக்குப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள இந்தியும் படிக்க வைப்பார்கள்। தமிழ் வாழ்க என்று முழக்கமும் செய்வார்கள். ஆனால் அவர்கள் வாரிசுகள் அனைவரும் ஆங்கிலவழிப் படிப்பில்தான். தமிழகத்தின் இளைய தலைமுறையே அறியாத கடாமார்க் சாராயம் அறிமுகம் இவர்கள் காலத்தில்தான். அன்று தொடங்கியது கல்விக் கூடங்களைச் செழுமைப் படுத்த வேண்டிய அரசு சாராயக் கடைகளை நடத்துமளவிற்கு முன்னேறியிருக்கின்றது.


அன்று சத்திய மூர்த்தி ஐயருக்கும் (காமராஜரின் குரு), இராஜ கோபால ஆசாரியாருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களின் கடைசிக் கட்டம் சுதந்திராக் கட்சியை இராஜாஜியை ஆரம்பிக்க வைத்தது। காங்கிரசின் மீது இராஜாஜிக்கு ஏற்பட்ட கோபம் தீரவில்லை. அனைத்துக் கட்சிகளையும் ஐக்கியப் படுத்தினார். அவரைப் போன்றவர்கள் எந்தச் சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்; சிக்கலை ஏற்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்.


கடவுளே இல்லை என்றவர்கள் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கோஷத்தை மாற்றி வேஷம் போட்டார்கள்। கோட்டையைப் பிடித்தார்கள். அந்தக் கோஷ வரிகள் திருமூலருக்குச் சொந்தமானது. ஒரு முறையேனும் சொல்லியிருப்பார்களா?

காங்கிரஸ் மீது இராஜாஜிக்கு ஏற்பட்ட கோபம் தமிழகம் சீரழிகின்றது। மூதறிஞர் புத்திசாலித்தனமாக ஒரு முறைகூட எந்தத்ப் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டதே இல்லை. அதே புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வருங்காலச் சந்ததியைப் பாதுகாக்கத் தேர்தல் முறையினையே மாற்றி இருக்கலாம். ஆம்! விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைக்கு அடித்தளமிட்டிருக்கலாம்.நமது துர் அதிர்ஷ்டம் கோபம் அவர் கண்ணை மறைத்துவிட்டது.

இராஜாஜியின் உதவியைப் பயன்படுத்திடத் தன் கொள்கைகளக் கூட விட்டுக் கொடுத்து ம.பொ.சிவஞானக் கிராமணியார் பெற்றுத் தந்ததுதான் சென்னை நகரம். இல்லை என்றால் சென்னையும் நமக்கில்லை.

இன்று தமிழகத்தின் முதல் சிக்கல் டாஸ்மாக் கடைகள். பெண்களத்திரட்டி அதற்கு எதிராகப் போராடினால் ஒரே வாரத்தில் அவற்றை மூடச் செய்யலாம்.மக்கள் தயார். ஆனால், ஒரு கண்ணனும், தமிழருவி மணியனும், நாராயணனும் போதாது.

இண்டாவதாக ஊழலை ஒழிக்கப் போராட வேண்டாம்। தேர்தல் முறையை மாற்றிடத்தான் போராட வேண்டும். தமிழக முதல்வர் சர்வ கட்சியையும் கூட்டி அனைவரது ஒப்புதலுடனேயே பிரதிநிதித்துவத்தேர்தல்முறையைக் கொண்டுவரச் சொல்லி மத்தியஅரசைச்சட்டமன்றம் மூலம் வலியுறுத்த வேண்டும். தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பிற மாநிலங்கள் மூலமாகவும் நடுவரசை நிர்ப்பந்திககச் செய்ய வேண்டும் இது தமிழகத்திற்கும் நல்லது. இந்தியாவிற்கும் நல்லது.

மீண்டும் மீண்டும் தேர்தல் வரும்; கூட்டணிகளும் அமையும்। பின்னர் பிரிவும் வரும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டு வந்து விட்டால், எந்தத் தனி மனிதருக்கும் வாக்களிக்க வேண்டாம். கட்சிச் சின்னங்களுக்கு வாக்களித்தால் போதும். கட்சிக்குள்தான் யார் யாரைச் சட்டமன்றத்திற்கு/ பாரளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என்ற போட்டி இருக்கும். பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எண்ணிக்கையும் அமையும்.


இந்தத் தேர்தல் பல்வேறு முறைகளில் சிற்சில மாறுதல்களுடன் உலகின் பல நாடுகளில் பின் பற்றப் படுகின்றன। அதில் எது சிறந்த முறை என்பதைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றுதல் மிகமிக முக்கியம்। அவ்வப்பொழுது அரசியல் கூட்டங்களில் சில தலைவர்கள் பேசியதைக் கேட்டதிலிருந்து நான் புரிந்து கொண்டதை எழுதியுள்ளேன்।

தேர்தல் முறையினையே மாற்றி இந்திய அரசியலில் புதிய மாற்றத்தைத் தமிழக முதல்வர் கொண்டுவரும் வாய்ப்பு ஒளிமயமாக உள்ளது। இந்திய வரலாற்றில் அவருக்குத் தனி இடம் கிடைக்கும். சுதந்திரத்திற்குப்பின் முதல் கவர்னர் ஜெனரல் இராஜாஜி. முடிவும் அவரே. சுதந்திரத்திற்குப்பின் தமிழக முதல் முதல்வரும் அவரே. அதே போன்று புதிய தேர்தல் முறைக்குப் பின் முதல் பிரதமராக இன்றையத் தமிழக முதல்வர் ஏன் வரக் கூடாது? அவரது ஆங்கில மொழிப்புலமை ஒன்றே போதுமே வடவர்களை எதிர் கொள்ள !

மாற்றங்கள் வரட்டும்। மாற்றம் ஒன்றுதான் நிலையானது என்றுதானே மார்க்சியமும் கூறுகின்றது.

புத்தர் கதையை மலேசியாவிலிருந்து இணையத்தின் மூலமாக நடத்தப்படும் முதல் பத்திரிக்கையான தமிழ் ஓசையில் படித்தேன்। அதில் புத்தர் பயன் படுத்தியுள்ள சிக்கல் என்ற வார்த்தையின் தொடர் சிந்தனை இந்தக் கட்டுரையில் வந்து முடிந்தது। தமிழ் ஓசைக்கும் படிக்கப்போகும் வாசகர்களுக்கும் நன்றியும் வணக்கமும்।


புதிய தேர்தல் முறைக்குப் பின் முதல் பிரதமராக இன்றையத் தமிழக முதல்வர் ஏன் வரக் கூடாது? தாராளமாக வரட்டுமே। அந்த நிர்வாகத் திறமையும் தகுதியும் அவருக்கு உண்டு। வாய்ப்பினைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்।

எம்,ஜி।ஆர்। மேல்சபையை நீக்கிப் ப்ரட்சிசெய்ததைப் போன்று தேர்தல் முறையில் மாறுதல் கொண்டு வந்து புரட்சி செய்யட்டும்। வரலாற்றில் நீங்கா இடம் பெறட்டும் காலமும் கனிந்திருக்கின்றது। வயதும் இருக்கின்றது। வாய்ப்பும் இருக்கின்றது.
நீடூழி வாழட்டும்।

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இந்தியப் பிரதமராக வேண்டும் என்ற தலைப்புத்தான் சரியாய் இருக்கும் என்று இப்பொழுது தோன்றுகின்றது.

2 comments:

 1. Subbaraman NV
  13 February 2012 06:54
  Reply-To: people-of-india@googlegroups.com
  To: people-of-india@googlegroups.com
  Reply | Reply to all | Forward | Print | Delete | Show original
  Yes; India to witness the saddest day in its history! If it unfortunately happens, it will be the misfortune of the Millennium.
  N V Subbaraman
  - Show quoted text -
  --
  N V Subbaraman,
  Editor, Young Poet,
  12 / 1045 Jeevan Bhima Nagar,
  Chennai - 600101

  ReplyDelete
 2. Subbaraman NV
  13 February 2012 06:56
  Reply-To: people-of-india@googlegroups.com
  To: people-of-india@googlegroups.com
  Reply | Reply to all | Forward | Print | Delete | Show original
  Great! I totally agree with the substance.
  N V Subbaraman
  - Show quoted text -
  --
  N V Subbaraman,
  Editor, Young Poet,
  12 / 1045 Jeevan Bhima Nagar,
  Chennai - 600101

  ReplyDelete

Kindly post a comment.