Sunday, February 5, 2012

மனித வடிவை ஆணியால் அடித்த பூமி இது!-யாங் லியன்

Yang Lian is a Professor of Poetry at the European Graduate School in Saas-Fee, Switzerland, where he conducts an Intensive Summer Workshop।







சு ய நில இயல் கோட்பாடு

மற்றவர்கள் காண இயலாது மலை முகட்டை

விண்வெளியில் உலாவரும் பறவைகள் போல்!

பூங்காவின் பசுமை பெருஞ்சிரிப்பு! பெருஞ்சிரிப்பு!

ஈன்றெடுக்கும் கருப்பையின் திசுச் சுவர்கள்,

சுருங்கும், விரியும், கண்ணீரும் சிந்தும் இதழ்களால்!

உள்ளங்கை வரைபடங்கள் கதைகளைச் சொல்லுமாம் !

கோணலான தெருவில் நெய்யச் சொல்லுகின்றனர் !

காலங்கள் மாறும், ஏற்றிட மறுத்தாலும்,

மாற்றங்கள் தொடரும், தொடர்கின்றன!

பறவைகள் ஊஞ்சலாடிப் பாடிய கிளைகள், இளைப்பாறிய மரங்கள்,

மீண்டும் மீண்டும் அழிந்து தழைக்கும்!

தண்ணீர் அதன்போக்கில் போகட்டும், விட்டு விடுங்கள்!

பொங்கட்டும், ஓடட்டும், சுழிக்கட்டும், நுரைக்கட்டும், நீர்வீழ்ச்சியாகட்டும்!

மனித வடிவை ஆணியால் அடித்த பூமி இது!

சூரிய பூமியில் சம்மட்டி இல்லை।

எதுவும் தெரியாமல் நடக்கின்றீர் பிற்பகலில்!

வழிகாட்டும் நன்னூல்கள், இருள் வாழ்வில்!

உதவி-ஆண்டனி டன் (ஆங்கிலம்)


2 comments:

  1. அருமைக் கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete

Kindly post a comment.