Sunday, February 5, 2012

60 கோடி ஆண்டுகளாகக் கடும் வறட்சி செவ்வாய் கிரகத்தில் !



அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்। அங்கு வெட்டி எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன। எனவே, அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என நம்பினர்.

அதைத் தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைக்கோள் அனுப்பிய போட்டோக்களையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

3 வருட ஆய்வுக்கு பிறகு தற்போது உயிரினங்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியற்றது என கண்டறிந்துள்ளனர். ஏனெனில், அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி சிலவுகிறது. எனவே, அங்கு உயிர் வாழப் போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை.

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன। அதனால்தான் அங்கு தண்ணீர் இருப்பதாகக் கருதப்பட்டது। அவை தவிர மற்றப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது.

இந்தத் தகவல் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.