Saturday, February 4, 2012

சத்திய மூர்த்தி ஐயரின் ஆங்கிலச் சொற்பொழிவைக் கேட்டு ரசிக்க எலிசபத்ராணி இந்தியா வந்தார் !


மேலும் தொகுக்கப்படவேண்டியவை
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு அழைக்கப்பட்டவர் சத்திய மூர்த்தி ஐயர்।அவரது பேச்சின் இனிமையை ரசிக்க பிரிட்டிஷ் ராணி எலிசபெத் விரும்பியதாலேயேஇந்த அழைப்பு. ஆனால் தேசப்பற்றின் காரணமாகச் செல்ல மறுத்து விட்டார் சத்திய மூர்த்தி ஐயர். மறுத்ததுடன் மட்டுமன்றி எங்கள் நாட்டை அடிமைப்படுத்தியுள்ள நாட்டின் பாராளுமன்றத்திலும், ராணியின் முன்பும் நான் பேச மாட்டேன்। என் பேச்சைக் கேட்க வேண்டுமானால் ராணி இந்தியாவரட்டும் என்றும் சபதம் செய்தார்.
இதற்கு மாற்றாக சீனிவாச ஐயங்கார் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிவிட்டு இந்தியா திரும்பினார்.
ராணி இந்தியாவிற்கு வந்து டெல்லியில் சத்திய மூர்த்தி ஐயரின் பேச்சைக் கேட்டு ரசித்தார்। அந்தக் கூட்டத்தில்தான் சீனிவாச ஐயங்கார் காந்தியை மகாத்மா என்று அழைத்தார். அப்பொழுது ராணியை வரவேற்கத் தாகூரால்126வரிகளில் இயற்றப்பட்ட பாடலிலிருந்துதான் இந்தியாவின் தேசியகீதம் உருவாக்கப்பட்டது। இவை எல்லாம் இளமை நாட்களில் ஆசிரியர்கள் சொல்லியவை। பாரதியின் வ்ந்தே மாதரம் பாடலைத்தான் தேசிய கீதமாக வைக்க வேண்டும் என்று பக்கிம் சந்தர் போன்றோர் வலியுறுத்தியபோதும் அக்கருத்துக்கள் வெற்றி பெறவில்லை. சத்திய மூர்த்தி ஐயரின் சீடர்தான் காமராஜர். இவர்கள் உறவின் நெருக்கம்தான் கடைசியில் இராஜாஜியைக் காங்கிரசின் மீது கோபங் கொள்ளச் செய்தது. திராவிட ஆட்சிக்கும் வழி வகுத்தது। தோற்ற காங்கிரஸ் தோற்றதுதான்।
இவர்களது தமிழ்ப்பற்றும் தொகுக்கப்பட வேண்டியவைதான்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.