Friday, February 3, 2012

ரஜினிக்காகக் கோச்சடை(யா)யனைத் தேடும் நாம் தமிழுக்காகத் தேவநேயப் பாவாணரை ஏன் தேடக் கூடாது?

தேவநேயப் பாவாணர் வழிநின்று மொழி ஆய்வை ஊக்குவித்தல்; நம் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாய் நிற்றல்; என்றும் எப்போதும் தமிழைத் தூயதாகப் போற்றிப் பேணல்.

தேவநேயப் பாவாணர் தொடர்பிலான அனைத்தும் இங்கு தொகுக்கப்படும்.தேவநேயப் பாவாணர் வழிநின்று மொழி ஆய்வை ஊக்குவித்தல்; நம் அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உறுதுணையாய் நிற்றல்; என்றும் எப்போதும் தமிழைத் தூயதாகப் போற்றிப் பேணல்.

தேவநேயப் பாவாணர் தொடர்பிலான அனைத்தும் இங்கு தொகுக்கப்படும்.பாவாணர் அறக்கட்டளை

எண் 1, சோப்பியா சாலை, #03-35, அமைதி நடுவம், சிங்கப்பூர் - 228149அறங்காவலர்கள்நிறுவனர் / தலைவர் :வெ.கரு.கோவலங்கண்ணன்

செயலர் :கோ.பொற்கைப்பாண்டியன்

உறுப்பினர் :பொற்கைப்பாண்டியன் தேன்மொழி


கோ.திருமகள்கோ.சிவகாமிகோ.கண்ணன் நம்பி

http://www.devaneyam.net/default.aspx
தமிழர் சரித்திரச் சுருக்கம்
பதிப்பு ஆண்டு :1941


பதிப்பகம் :இளைஞர் மன்ற வெளியீடு
பக்கங்கள் :16புத்தக அறிமுகக் குறிப்பு :

தமிழக இளைஞர் மன்றம், திரிசிராப்பள்ளி பதிப்புரிமை கொண்டு அடக்க விலை அணா ஓன்று என 1941இல் வெளியிட்டுள்ளது.

"பண்டித புலவ வித்துவ ஞா.தேவநேசன் இயற்றியது" என முகப்படையில் நூலாசிரியர் பெயர் உள்ளது. நூல் 16 பக்கங்களையுடையது.

"சைவப்புலவர் கு.சுப்பிரமணியம், தலைவர், தமிழக இளைஞர் மன்றம், 33 மல்லி சாகிப் தெரு, திரிசிரபுரம் 2012.41 எனப் பதிப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது.

"நூலாசிரியர் "ஆராய்ச்சித் திறன் வாய்ந்தவரும் மொழி நூற் பண்புணர்ந்தாரும்" எனப் பாராட்டப் படுகிறார் பதிப்புரையில். & 39;கைம்மாறு கருதாது& 39; இளைஞர் மன்றத்திற்காக எழுதித் தந்தமையையும் சுட்டுகிறார். இதுவே மன்றத்தின் முதல் வெளியீடு.

நூற் பெயரில் சரித்திரம் இருப்பினும் சங்கப் பெயர் கழகம் என்றே ஆளப்பட்டுள்ளது. குமரிக் கண்டத்தில் இருந்தே தமிழர் வரலாற்றைத் தொடங்கி வரலாற்றை மீட்டெடுப்புச் செய்கிறார்.

கழகத்திற்கு முற்காலம், கழகக் காலம், இடைக்காலம், தற்காலம், தமிழரசர் மரபுகள், திரவிடப் பிரிவு, இந்தியமக்கள் நாகரிகப் பகுப்பு என்னும் பகுப்புகளைக் கொண்டது இச்சுவடி.

தமிழர், ஆரியர் துருக்கியர் போல் அயல்நாட்டில் இருந்து வந்தவர் அல்லர். குமரிக் கண்டமே தமிழரின் பிறப்பிடம் என்று சொல்லி நூலைத் தொடங்குகிறார். இந்தியா, ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா என்னும் முக்கண்டங்களையும் ஒன்றாய் இணைத்துக் கொண்டு இந்துமாக்கடலில் இருந்த பெருநிலப்பரப்பே குமரிக்கண்டம் என்பதைச் சுட்டுகிறார்.

குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களையும், ஐந்நாகரிக நிலைகளையும் இப்பகுதிலேயே விளக்குகிறார்.

கழகக் காலம் என்பதில் இலங்கை இந்தியாவோடு இணைந்திருந்ததையும் பொருநை, இந்தியா இலங்கை ஊடு சென்றது என்பதையும் கூறுகிறார்.

கடைக்கழகக் காலத்திலேயே ஆரியர் தமிழில் நூல் இயற்றவும் வடசொற்களைத் தமிழில் புகுத்தவும் தொடங்க்கிவிட்டனர் என்கிறார்.

இடைக்காலம் என்னும் மூன்றாம் தலைப்பில், தமிழர் ஆரியர்க்கு முற்றிலும் அடிமையாயினர் என்றும், கல்வியை இழந்தனர் என்றும், பல்லவர் தெலுங்கர் மராட்டியர் முதலியோர் தமிழ்நாட்டைக் கைப்பற்றினர் என்றும் குறிக்கிறார்.

தமிழர் வரலாற்றில் மிகமிக இருண்டகாலம் 15ஆம் நூற்றாண்டென்று சொல்லலாம் என்கிறார்.

தற்காலம் என்பதைக் கி.பி.1600 முதல் எனக் கொள்கிறார் பாவாணர். ஆங்கிலர் வரவால் புத்தூழி தோன்றியது என்று கூறும் அவர், அனைவர்க்கும் கல்வி, அலுவல், நீதி ஒப்ப வழங்கப்பட்டதையும், தமிழ் தனிமொழி, தமிழ்நாகரிகம் தனி நாகரிகம்; தமிழரிடமிருந்தே ஆரியர் நாகரிகம் பெற்றனர் என்பவை வெளிப்பட்டதையும் சுருக்கமாகச் சொல்கிறார்.

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவர் பிற்பட்டவர் என மூவேந்தரையும் இறையனார் களவியல், அடியார்க்கு ந்ல்லார் உரை என்பவற்றை மேற்கொண்டு எழுதுகிறார், த்ரவிடப் பிரிவு என்பது ஆறாம் பகுதி. அதில் தெலுங்கு கன்னடம் மலையாளம் எனத் தமிழ் திரிந்த வகையையும், தமிழம் என்னும் பெயரே ஆரியரால் திரமிளம் > திரமிடம் > திரவிடம் எனத் திரிக்கப்பட்ட வகையையும் தெளிவிக்கிறார்.

இந்தியமக்கள் நாகரிகப் பகுப்பில், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாவகையிலும் ஆரிய திரவிடத்தை நீரும் நெய்யும் போலப் பகுக்கலாம் என்றும், பிராமணர் வருமுன் தமிழ்நாட்டில் முனிவர் அந்தணர் எனவும், நூல்தொழிலுள்ள இல்லறத்தார் பார்ப்பனர் எனவும் வழங்கப்பட்டனர் என்றும் சுட்டும் பாவாணர், "ஆரியரால் தமிழர்க்கு யாதொரு நன்மையுமில்லை. பிராமணர்தான் எல்லா வகையிலும் தமிழரிடம் நாகரிகமும் நன்மையும் பெற்றுக்கொண்டு இன்று தலைமாறாகக் காட்டுகின்றனர். இதன் விரிவை ஒப்பியன் மொழிநூலில் கண்டு கொள்க" எனச் சுவடியை முடிக்கிறார்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றாமிழர்!

வாழ்க நிரந்தரம் வாழிய

தமிழ்த் திருநாடு!

என்பது வாழ்த்து.

இச்சுவடியை நோக்கி, பாவாணர் பின்னே இயற்றிய தமிழ் வரலாறு, தமிழர் வரலாறுகளைக் காணும்போதுதான் பாவாணர் வளர்நிலை தெள்ளத் தெளிவாக விளங்கும்.

வலைப்பூ பதிவு அன்பர்கள் நாள்தோறும் ஒரு தமிழ் அறிஞர் குறித்து இயங்கும் தளத்தைத் தேடிபிடித்துத் தெரிந்து கொள்ளல் வேண்டும். அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் படிப்பது இயலாத செயல். அவற்றின் பெயர்களையேனும் தெரிந்து கொண்டு நினைவிற் கொள்ளவேண்டும். அவ்வகையில் தேவநேயப் பாவாணர் குறித்த இந்தத் தளம் பல்வேறு தகவல்களைத் தொகுத்துத் தருகின்றது.

ரஜினி கோச்சடையான் (கோச்சடையன் என்பதே சரி ) படத்தில் நடிக்கப் போகின்றார் என்றவுடன் விக்கிபீடியாவில் கோச்சடையனைத் தேடி எழுதிய பலருள் நானும் ஒருவன். கோச்சடையனைத் தேடலாம். ஆனால், ரஜினிக்காக ஏன் தேட வேண்டும்?.தமிழரை நம்பி தமிழருக்காக தமிழர் வரலாற்றை திரைக் காவியமான "பாலை" போன இடம் தெரியவில்லை. என்னே! நம் தமிழ்ப் பற்று!

1941-ல் வெளியான இந்நூலின் விலை ஒரு அணா. திரிசிராப்பள்ளி என்பதே சரியான பெயர். இந்தியா, ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய முக்கண்டங்களூம் இணைந்த பெருநிலப்பரப்பே குமரிக்கண்டம் என்பதை விளக்குகின்றது இலங்கை. இந்தியாவுடன் இணந்திருந்தது. ஆங்கே பொருநை தவழ்ந்தோடியது என்பன போன்ற வியப்பான தகவல்களை எல்லாம் தருகின்றது.

இத் தொகுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சிங்கப்பூர்வாழ்த் தமிழர்கள் என்பதும் வியப்பிற்குரிய தகவல்।!

2 comments:

  1. நம்பர் சோதிடத்தை நம்பும் கூட்டம் ! கோச்சடையான் - கோச்சடையன் ஆகாது ! நன்றி Sir !

    ReplyDelete
  2. நன்றி நண்பரே! கோச்சடையன் என்பதே சரி என்பதே என் கருத்து. ஆனால் திரைப்படத்தின் பெயர் கோச்சடையான் என்றே வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பபட்ட பின்னரே ”கோகச்சடையான்” என்னும் தலைப்பில் விக்கிபிடியாவில் கட்டுரை இடம்பெறச் செய்யப்பட்டது. ஒற்றுப்பிழைகளுடன் வைக்கப்படும் தமிழ்ப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுத மாட்டேன் என்று எந்தத் தமிழன்பர்களும் மறுக்கவில்லையே, ஏன்?

    ReplyDelete

Kindly post a comment.