Sunday, January 22, 2012

மாற்றம் ஒன்றே மாறாதது



எம்.ஏ..பழனியப்பன் தொகுத்தளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கைக் கதை

ஞானிகளும் ரிஷிகளும் தங்களது மனவமைதிக்காக மலைகளிலும் வனாந்திரங்க்களிலும் தவம் கிடந்தார்கள் என்பதை எல்லோரும் அறிவர்.
ஆனால், இந்திய மக்களின் ம்ன அமைதிக்காக இந்தியச் சிறைகளில் கம்யூனிஸ்டுகள் தவம் கிடந்தார்கள் என்பதை எத்தனைபேர் அறிவர்?

இந்திய மக்களின் மன அமைதிக்கும் நல்வாழ்விற்கும் வழிகாண- தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க்கியவர்களின் வாழ்க்கைப் பாதையைஎடுத்துக் கூறுகின்றது இந்த நூல்.

கோவைமாவட்டத்தில் மயிலம்பட்டி என்ற ஊரில் பிறந்து, தன் கடின முயற்சியாலும் உழைப்பாலும் முன்னேறி அரசியல் வாழ்வில் தடம் பதித்து இளைஞ்ர் இயக்கம். பொதுவுடைமை இயக்கம்., ஜனசக்தி, தாமரை ஆகியவற்றில் தனக்குரிய பங்க்காற்றியவர் அன்பர் எம்.ஏ.பழனியப்பன்.

இவர் 1972-73-ல் தொழிற் சங்க்கக் கல்விக்காக சோவியத் யூனியனுக்குச் சென்று வந்தவர். குழந்தைகள்,, மாணாக்கர்கள், இளைஞ்ர்கள், உழைப்பாளிகள் ஆகியவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தொடர்ந்து எழுதி எழுத்துலகில் பவனி வருகின்றார்

பிரிந்தவர்கள் இணைகின்றார்களோ இல்லையோ பொதுவுடைமைத் தத்துவம் தமிழகமெங்க்கும் மீண்டும் இளைஞ்ர்கள் மத்தியில் ஆழமாகப் பரவிடல் வேண்டும் என்ற அவாவின் காரணமாகப் புதிய தொழிலாளி பதிப்பகத்தின் மூலமாகச் சிறு சிறு பிரசுரங்கள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்
.
கட்சிகளுக்கும் அப்பாற்பாட்டு எத்தகைய வேறுபாடுகளுமின்றி மார்க்சிய மையங்கள் ஆங்காங்கே செய்லபட்டு வருவதும் இது போன்ற செய்ல்பாடுகளின் தேவையை வலியுறுத்துகின்றன.

1848 முதல் 1964 வரையான நிகழ்வுகள் தேவைக்கேற்ப எதுவும் விட்டுவிடாமல் இரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன அவ்வப்போதையத் தேவைகேற்ப பெரியவர் நாகை முருகேசன் கொணர்ந்த பிரசுரங்க்கள் நினைவிற்கு வருகின்றன.படைப்பாளி வற்புறுத்துவதுபோன்று எழுத்துக்களில் நிகழ்வுகளைக் கண்டாலே போது.ம். புத்துணர்ச்சி பொங்கும்

எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்ற ஆசையும், பொதுவுடைமைத் தத்துவம் வெறும் மேடைகளிலும் புத்தகங்களிலும் இருந்தால் மட்டும் போதாது என்ற ஆவலுமே இதனை எழுதத் தூண்டியது. இதன் முதற்பகுதி பெரியவர் நல்லகண்ணுவின் வார்த்தைகளேயாகும்.

எங்கு சென்றாலும் தனக்குக் கிடைத்த ஒரு கோடி யைக் கட்சிக்குக் கொடுத்தவரா என்று கேட்கும் பொழுது நெஞ்ச்ம் நெகிழ்கின்றது.

அன்பர் எம்.ஏ.பழனியப்பன், கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க்கைக் கதை என்றொரு நூல் எழுதியுள்ளார் என்பதை என் மூலமும் சிலருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக என் வலைப்பூவில் எழுதி வைத்தேன்

மாற்றம் ஒன்றே மாறாதது

0 comments:

Post a Comment

Kindly post a comment.