Sunday, January 22, 2012

திரிபுரா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்கள் கொண்டாட்டம்!


வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்ற தினத்தைக் கொண்டாடியது.


1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக மொழிவாரி மாநிலமாக ஆந்திரமாநிலம் உருவாக்கப்பட்டது.


தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்துவந்த பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.


1949 -ம் ஆண்டுவரையில் வடகிழக்கு மாநிலங்க‌ளைச் சேர்ந்த திரிபுரா, மணிப்பூர் போன்றவை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.


மேகாலயா, அசாம் மாநிலங்களும் 1970-ம் ஆண்டு வரையில் யூனியன் பி‌ரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.


இந்நிலையில் ஜனவரி 21-1972-ம் ஆண்டு முதல் மேற்கண்ட நான்கு மாநிலங்களுக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.


அது முதல் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி மாநில அந்தஸ்து பெற்ற தினத்தைக் கொண்டாடி வருகிறது.


இந்தாண்டு 41-வது ஆண்டாக வண்ணமயங்களுடன் மாநில மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.