Sunday, January 22, 2012

அன்று சொன்னது அர்த்தமுள்ளது!-வேலூர்!



கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பி.சுப்பிரமணியன் மற்றும் ஆடிட்டர் கவுதம் போன்றோர் கூட்டாகச் சேர்ந்து "வேலூர் சிட்டிசன் வெல்ஃபர் ஃபாரம்" என்ற அமைப்பைத் துவக்கினர்.

பாழாகும் குடிநீரைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் தொடர்ந்த வழக்கில், 'இந்தியாவில் குடி நீர் ஆதாரங்க்கள் அடங்கிய நீர்நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் எந்தத் தொழிற்சாலயும் அமைக்கக் கூடாது. வேலூர் மாவட்டத்தில் மாசு ஏற்படுத்தும் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மூடவேண்டும் என்று தீர்ப்பளித்தது.'

அந்தத் தீர்ப்பை யாருமே கண்டு கொள்ளவில்லை. நீர்நிலைகளின் கரை ஓரத்தில்லேயே தொழிற்சாலைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. அதே போல சுத்திகரிப்பு நிலையங்களை முறைப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலையும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

"ப்ளாக் ஸ்மித்" என்ற ஒரு அமைப்பு தன் ஆய்வில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு இதே நிலைமை நீடித்தால், வேலூர் மாவட்டத்தில் ஒரு சொட்டு நீர் கூடக் கிடைக்காது" என்கிறது. ராணிப்பேட்டை நகரம் ஆசிய அளவில் மிக மோசமாக மாசடைந்திருக்கிறது என்றும் அதன் ஆய்வு சுட்டிக் காட்டியிருக்கிறது.

உலகிலேயே தோல் தொழில் மூலம் 600 கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னரும் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அவலம்!

ம.பா.கெஜராஜ், நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்-26-01-2011

0 comments:

Post a Comment

Kindly post a comment.