Thursday, January 26, 2012

பேசும் வார்த்தகளையே வாழ்ந்து காட்டிய மானுட விசுவாசி!

Bharathi With Chellammal

"சொன்னது போல் செயல் முயன்றார் இவரைப் போல இல்லை எனும் மோகனதாஸ் கரம் சந்த் காந்தி, இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்" என்பார் கவிமணி.

வட இந்தியத் தலைவர்களை நாம் பாராட்டும் அளவிற்குத் தென்னிந்தியத் தலைவ்ர்களுக்கு வடநாட்டில் முக்கியத்துவம் இல்லை. பாராளுமன்றத்தில் படங்க்கள் சில திறந்ததோடு சரி. அதுவும் எத்தனை இந்தியர்களுக்கு யார் யார் ஃபோட்டோ இருக்கிறதெண்று தெரியும்? எத்தனை தென்னியந்த்த் தலைவர்களின் பெயர்களை வைத்துள்ளனர். ஹரித்வாரில் வக்கப்பட்ட தேசிய்த் தலைவர்களின் இந்தியத் திருக்கோவிலில் ஒரு தென்னிந்தியத் தலைவர் கூட கிடையாது.

நமது கவிமணி போன்றோர்கூட சொன்னதச் செய்தவர் காந்தி மட்டும்தான் என்றுதானே பாடுகின்றார். பாரதியைப் பாடவில்லையே. ஏன்?

ஒரு சம்பவம். மதியம் ஒரு மணி. சாப்பிடுவதறுகுப் பாரதி இன்னும் வரவில்லை.
என்னவென்று போய்ப் பார்த்தால் பாரதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. " இனி மிஞ்ச விடலாமோ" என்று அவர் உதடுகள் முணு முணுத்துக் கொண்டிருந்தன.

ஏதோ மகத்தான துயரத்திற்குள்ளாயிருக்கிறார் என்று அச்சம்தானே ஏற்படும்?
மனைவி செல்லம்மாவை அழைத்தார். தன் குழந்தைகளையும் அழைத்தார்." "இந்திய மாதர் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்" கரும்ம்புத் தோட்டத்திலே என்று ஆரம்பித்தார். அடுத்து என்ன பாடுவது என்று உணர்ச்சிப்பெருக்கில் "ஆ" என்றார். இதனைக் கவிஞ்ர் ஜீவபாரதி சொல்லிக் கேட்கும்பொழுது நாம் கண்ணீர் விட்டு அழுவதைத் தவிர வேறு வழி இருக்காது.

இது போன்று எண்ணிறந்த உண்மை நிகழ்வுகள்- பேசிடும் வார்த்தைகளையே வாழ்க்கயாக வாழ்ந்து காட்டிய பாரதியாரின் பெயரில் வடநாட்டில் எங்காவது ஒரு தெருப்பெயர் உண்டா? ஆந்திரத்தில் பாரதி நட,மாடுகின்றது. வேறுவகையில்.

இனியேனும் நமது தென்னிந்தியத் தலைவர்கள் இது போன்றவற்றிலும் கவனம் செலுத்தட்டும்.

திராவிடக்கட்சிகள் தமிழ் நாட்டைத்தவிர பிற தென்பகுதிகளில் தலை காடவில்லை என்பதிலிருந்து தமிழ்நாட்டவர் திராவிடத்தின் பெயரால் எப்படி ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை இனிமேலாவது சிந்திப்போம்.

திராவிடப் பல்கலைக் கழகம் என ஒன்று குப்பத்தில் (ஆந்திரம்) செயல்பட்டு வருவதால் யாருக்கு என்ன லாபம் என்பதையும் யோசிப்போம்.

இனியேனும் திராவிடத்தின் பெயரால் ஏமாறாமல் இருப்போம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.