http://www.thinakkural.com/news/all-news/india/9976-42---------.html

புல்மோட்டை கடற்பரப்பிற்கு வடக்காக இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தமது படகுகள், மீன்களுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
முதல்கட்ட விசாரணைகளின் பின் இவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதேவேளை கடற்படையினரால் 42 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 42 மீனவர்கள் ஆறு படகுகளில் கடந்த 22 ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாகவும் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Kindly post a comment.