Thursday, January 26, 2012

மூர்க்கமான சூரியப் புயல் பூமியைத் தாக்கியது விமானங்கள் திசை திரும்பின

http://www.thinakkural.com/index.php

மூர்க்கமான சூரியப் புயலிலிருந்து வெளிக்கிளம் பியிருக்கும் கதிர்வீச்சானது சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் பூமியின் வளி மண்டலத்துடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மோதியதையடுத்து விமான சேவை நிறுவனங்கள் தமது சேவை மார்க்கத்தை திசைமாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அனல் புயலினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக ஆசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விமானப் பயணப் பாதைகளை மறுசீரமைத்திருப்பதாக அமெரிக்க விமான சேவை நிறுவனமான டெல்ரா எயார் லைன்ஸ் கூறியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் (ஜி.எம்.ரி.15.00) பூமியின் காந்தப்புலத்துடன் சூரியப் புயலின் அனல் கதிர்வீச்சு மோத ஆரம்பித்ததை நாசா உறுதிப்படுத்தியது. 2003 அக்டோபருக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மூர்க்கமான சூரியப்புயல் இதுவெனக் கருதப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சூரியப் புயலால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லையெனவும் ஆயினும் செய்மதி இயக்கங்கள் மற்றும் வானொலிகளின் சிற்றலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நாசா கூறுகிறது. அனல் கதிர்கள் நேற்று புதன்கிழமையும் பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கும் எனவும் இதனால் செய்மதித் தொடர்பாடல்கள் துருவப் பகுதி பிராந்தியங்களில் விமான சேவைகளை திசை திருப்பும் நிலைமை ஏற்பட்டதாக விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். ஹொங்கொங், ஷங்காய், சியாவுல் ஆகிய இடங்களிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் விமானங்களின் பாதைகள் ஞாயிற்றுக்கிழமை சூரிய அனல் வெளிக்கிளம்பியதையடுத்து திசை மாற்றப்பட்டுள்ளது. பூமியின் மீதான வழமைக்கு மாறான ஒளிச் செறிவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கண்கவர் காட்சிகளை அவதானிப்போரின் ஆர்வம் அதிகரித்திருந்தது. வழமையாக வருடத்தின் இந்தக் காலத்தில் ஆட்டிக் துருவப்பகுதிக்கு சமீபமாக இந்த"வடக்கு ஒளியை' பார்க்க முடியும். ஆனால், இந்தத் தடவை வழமைக்கு மாறான வெளிச்சத்தை ஸ்கொட்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதி மற்றும் அமெரிக்க மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. மணித்தியாலத்தக்கு 40 இலட்சம் மைல் வேகத்தில் இந்த அனல் கதிர்கள் பயணம் செய்வதாக தேசிய சமுத்திர வளிமண்டல, விண்வெளி காலநிலை எதிர்வு கூறல் நிலையத்தைச் சேர்ந்த பௌதீகவியலாளர் டக் பைசேகர் கூறியுள்ளார். ஒளிவட்ட அவதானிகளுக்கு இது களிப்பூட்டும் விடயமெனத் தெரிவிக்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.