சீனாவின் புத்தாண்டாகக் கருதப்படும் வரும் ஜனவரி 23-ம் தேதி நிகழ்ச்சிகளுடன் கூடிய ஒளிபரப்பு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கலை சார்ந்த நிகழ்ச்சிகள், விளையாட்டு, திரைப்படம், கார்ட்டூன் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முப்பரிமாண ஒளிபரப்பு, சீனாவின் மாகாண தொலைக்காட்சி மற்றும் 5 தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புடன் இணைந்து இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
முப்பரிமாண வசதி கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய செட் ஆஃப் பாக்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் முப்பரிமாணங்களில் நிகழ்ச்சிகளைக் காணலாம்.
"முப்பரிமாண தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது சீன தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது" என மாகாண தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் தலைவர் கய்புஃகாவ் தெரிவித்தார்.
உதாரணத்துக்கு, 50 கோடி மக்கள் இந்த சேவைகளைப் பார்க்க, தங்களிடமுள்ள தொலைக்காட்சிப் பெட்டியை மாற்றம் செய்வதற்கு மட்டும் சுமார் ரூ.80,000 கோடி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பானிலும், தென் கொரியாவிலும் இந்த சேவை தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.