Monday, January 2, 2012

செவக்காட்டுச் சித்திரங்க்கள்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், 8 மைல் தூரத்தில் கழுகுமலை செல்லும் வழியில் உள்ளது மலையான்குளம்..

தீக்கொளுத்தி ராமசாமி வகையறா மலையான்குளத்தில் பெருமையாகக் கூறிக் கொள்ளும் தலைமுறை. இந்தப் பெயர் எப்படி வந்தது என்பதற்குத் தனியானதொரு ஆய்வினைத்தான் மேற்கொள்ளவேண்டும்.

ஆனால், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பது போன்று இந்தப் பரம்பரையில் படைப்பிலக்கியம் தோற்றுவிக்கும் சிந்தனைவாதி தோன்றியிருப்பது வியப்பிற்குரியது.

ஏலேய், கிணத்துக்குள் முளைத்த மருதாணி ஆகிய இரு கவிதை நூல்கள், பூமாரியும் தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும், செவக்காட்டுச் சித்திரங்க்கள் ஆகிய இருபடைப்புச் சித்திரங்க்களும் வே.ராமசாமியால் எழுத்தாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கரிசல்காட்டுக்காரர் கி.இராஜநாராயணனுக்குப் போட்டியாக செவக்காட்டு வே.இராமசாமி எண்ணிறந்த நூல்களைத் தமிழுலகத்திற்குத் தருவார் என்று நம்பிக்கை எழுகின்றது.

படைப்பிலக்கியங்க்களின் தலைப்புக்களில் கிராமிய மணம் மலர்வது ரசிக்கத்தக்கது.

ரெட்டைச்சுழி, வாகை சூடவா திரைப்பட்ங்களில் பாடல்களும் எழுதியுள்ளார்.

கலப்பை, 9/10 இரண்டாம் தளம், இரண்டாம் தெரு, திருநகர், வட பழனி, 600 026
94448 838389. மின்னஞ்ச்சல் kalappai.in@gmail.com www.kalappai.in


1 comments:

  1. நல்ல பதிவு.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

Kindly post a comment.