Tuesday, January 17, 2012

தமிழ்நாடு என்று மாற்றுக-ப.ஜீவானந்தம்

தமிழ்நாடு என்றுமுதல் குரல் கொடுத்தவர் ப.ஜீவானந்தம்.




ப.ஜீவானந்தம் சட்ட சபையில் நுழையும்போது இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்க375. ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய நண்பர்கள் சேர்ந்து 420 பேர் இரண்டு சபைகளிலும் இருந்தனர். அதுசமயம் ராஜ்ஜிய புனரமைப்பு மசோதாவை ஜீவா வரவேற்றார். சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், அக்டோபர் முதல் தேதியிலிருந்து தமிழ் உறுப்பினர்கள் மட்டுமே இருந்து சபையை நடத்தும் நிலமை வரும் என்று பார்க்கும் போதுமகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர்கள் மட்டும் இந்த சபையின் நடவடிக்கைகளை நடத்தும் நிலமை வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக ஜீவா குறிப்பிடுகின்றார். இப்படித் தமிழர்கள், மலையாளிகள், கன்னடியர்கள் தனித் தனியாக சபை நடத்துவதால் மேலும் மேலும் ஜனநாயகம் நம் நாட்டில் உயர்வு அடைந்து இன்றியமையாத தேசிய ஒற்றுமை அதிகரிக்கும்.

மொழிவழியாக இராஜ்ஜியங்க்களை அமைப்பதுதான் உண்மையில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்தும் அதுதான் உண்மையில் ஜனநாயக முறையில் நாட்டை நடத்திச் செல்வதற்கு வாய்ப்பும் வசதியும் அளிக்கும். அப்பொழுதான் நம் நாடு ஜனநாயக ரீதியில் முன்ன்னேறும்.

மக்கள் ஒட்டு மொத்தமாக வளருவதற்காக எல்லோரும் இணந்து தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் துணை செய்யும்.

இன்னும் பல உதாரணங்க்களை எடுத்துச் சொல்கின்றார்ர். பின்னர் சென்னை ராஜ்ஜியத்தைத் தமிழ் ராஜ்ஜியமாக்கினால் என்ன? கேரளம் ஆகலாம். ஆந்திரம் ஆகலாம். பம்பாய் என்பது மகாராஷ்டிரமாகலாம்.குஜாராத் ஆகலாம்.சென்னைக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால் நாட்டின் முக்கியத்துவம் நகரின் முக்கியத்துவத்திற்குக் குறையக் கூடாது. மூன்று கோடிப் பேரக் கொண்ட சம்யுக்த கர்னாடகம், ஆந்திரா- தெலிங்கானா இவை அந்தந்த மொழிக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுத்துத்தான் இருக்கின்றது.

ஆகவெ மொழிவழி ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்படும்பொழுதும்பொழுது இந்துய தேசம் சுக்கு நூறாக உடைந்து விடாது.

நமது சென்னைராஜ்ஜியத்தைத் தமிழ்நாடு என்று தாராளமாக அழைக்கலாம்.

இவ்வாறு சென்னை ராஜ்ஜியம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றுக என்று மாநில சீரமைப்புத் தீர்மானத்தின் மீது 28-03-1956லும்,

சென்னை இராஜ்ஜியத்திற்கு தமிழ் நாடு என்று ஏன் பெயரிட வேண்டும் என்று மாநில மற் சீரமைப்புத் தீர்மானத்தின்மீது 29-03-1956லும்,

ப.ஜீவானந்தம் முழக்கமிட்டார்.

அவரது 58 வது நினைவு நள ஒட்டி இந்தக் கட்டுரை சுருக்கமாக வெளியிடப்படுகின்றது
.(18-01-2012)

முதன் முதலில் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியது ஜீவாதான் என்பதற்கு இதுதான் அத்தாட்சி!

இப்பொழுது யர்ர் யாரோ பெருமைபேசித் திரிவது காலத்தின் கோளாறே!

"சட்டப்பேரவையில் ஜீவா"- கே.ஜீவபாரதி.

0 comments:

Post a Comment

Kindly post a comment.