Wednesday, January 25, 2012

கவர்னர் ரோசய்யா மீது ரூ. 200 கோடி வரை நில இழப்பீடு வழக்கு! தினமலர்.


தமிழக கவர்னர் ரோசய்யா மீது நில மோசடி புகார் ; ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோர்ட்டில் சாட்சியம்







தமிழகத்தில் அரசியல்வாதிகள் மீதுதான் நில மோசடி வழக்கு இருக்கிறதென்றால் நம்ம கவர்னர் ரோசய்யா மீதும் அரசு நிலத்ததை வேறு ஒரு தனியார் பார்ட்டிக்கு தாரை வார்த்து அரசுக்கு ரூ. 200 கோடி வரை இழப்பீடு செய்ததாக ஆந்திர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐ.ஏ,எஸ்., அதிகாரிகள் இருவர் சாட்சியம் அளித்தனர்.


ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி விமானவிபத்தில் இறந்து போனார். இதனையடுத்து அமைச்சராக இருந்த ரோசய்யா முதல்வராக காங்., மேலிடம் அமர்த்தியது. இவர் முதல்வராக இருந்த சொற்ப காலத்தில் அவர் மீது காங்கிரஸ் கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. இவர் முதல்வராக நீடிக்க எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனையடுத்து நவ., 2010ல் தனது பதவியை ராஜினாமா செய்தார், இவரது காலக்கட்டத்தில் அரசு கையகப்படுத்திய நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஐதராபாத்தை சேர்ந்த வக்கீல் ரங்காராவ் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுகொண்ட கோர்ட் இது தொடர்பான ஆவணஙகள் மற்றும் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியம் அளிக்குமாறு ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் அப்பாராவ் ( முனிசிபல் நிர்வாக தலைமை செயலர் ) ஆச்சார்யா (நகர் மேம்பாடு கமிஷனர்) ஆகியோருக்கு சம்மனம் அனுப்பி வைக்கப்பட்டது. இருவரும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்கள் தங்களுடைய சாட்சியத்தில் ; முதல்வர் ரோசய்யா நாங்கள் கூறியதை ஏற்கவில்லை. நிலத்தை திருப்பி ஒப்படைக்க கூடாது. இதனால் அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். வளர்ச்சி பணிகளுக்கு தடையாக அமைந்தவிடும் என்று சொனானோம் ஆனால் இதனை அவர் சட்டை செய்யாமல் நிலத்தை உரிமையாளர்ரிடம் கொடுத்து விட்டார். இவ்வாறு கூறியுள்ளனர்.


ரோசய்யா செய்த தவறு என்ன? ஐதராபாத் நகரின் மையப்பகுதியான அமீர்பேட் என்ற இடத்தில், தனியாருக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தை, பல ஆண்டுகளுக்கு முன், வர்த்தக வளாகம் கட்டுவதற்காகவும், நகர்புற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்று வதற்காகவும், ஆந்திர அரசு கையகப்படுத்தியது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு வெளியான பின், பிரபல தொழிலதிபர் ஜி.என்.நாயுடு என்பவர், கடந்த 1997ல் அந்த நிலத்தை, நிலத்தின் உரிமையாளர்களிடம் இருந்த வாங்கினார். தொழிலதிபர் நாயுடுவின் வற்புறுத்தலின் பேரில், நிலம் கையகப்படுத்தப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக, ஆந்திர மாநில அரசு அறிவித்தது. சட்ட விரோதமான முறையில், அந்த நிலம், அவற்றின் உரிமையாளரிடம் திருப்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தின்படி, ஒரு நிலத்தை கையகப்படுத்தி விட்டால், அதை திரும்ப ஒப்படைப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு முதல்வர் எடுத்த முடிவினால் ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலம் தனியாருக்கு போய்ச்சேர்ந்தது. இதற்கான முடிவை எடுத்ததுதான் கவர்னர் செய்த குற்றம்.


இது தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. அதிகாரிகள் அளித்த சாட்சியத்தினால் தற்போது தமிழக கவர்னராக இருக்கும் ரோசய்யாவுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.


0 comments:

Post a Comment

Kindly post a comment.