Tuesday, January 24, 2012

ஜெயிக்கப்போகும் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி

இடைத் தேர்தல் தேதி அறிவிக்குமுன்பே வேட்பாளராகிவிட்டவரின் படம்தான் இது. பெயர் முத்துச் செல்வி. 27 வயதாகும் இவர் பி.இ.பட்டதாரி. தொகுதி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்.

இவரது தந்தை சங்கரலிங்கம் 1964 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.. ஆகத் தொடர்ந்து இருந்தவர். இந்த ஊர்க்கோவிலின் சாமி பெயர் சங்கர லிங்கம் என்பதும் ஒரு சிறப்பு.

இவரது கணவர் முத்து மாரியப்பன் பல்லடத்தில் ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஐந்து வயதிலும், இரண்டரை வயதிலும் இரண்டு மகன்கள்.

ஏற்கனவே இவர் சங்கரன்கோவில் நகராட்சித் தலைவியாக இருக்கின்றார். இடைத் தேர்தல் எம்.எல்.ஏ. வேட்பாளராக இருப்பதால் அந்தப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். எனவே இரண்டு தேர்தல்கள் நிச்சயம். இவரது ஆதரவும் நகராட்சித் தேர்தல் வேட்பாளருக்கு வேண்டும். எனவே அவரும் இணைந்து ஒத்துழைப்பார் சட்டமன்றத் தேர்தலில்.

அ.தி.மு.க. வேட்பாளரை அறிவித்து விட்டதால் வழக்கம் போல் தலைமை அறிவித்த நபரை முழுமையான மனதுடன் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு உற்சாகமாக ஆயத்தப்பணிகளைத் துவக்கிவிட்டனர் கழகக் கண்மணிகள்.இந்தத் தொகுதியில் உள்ள சிறப்பு உட்கட்சிக் குழப்பங்கள் கிடையாது. அதுவும் படித்த பெண் வேட்பாளரை எதிர்த்து எவர் எந்தக் கூட்டணி அமைத்தாலும் வேறு யாரும் வெற்றி பெற முடியாது.

ஊர்காவலன் என்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ அந்தக் காலத்தில் இருந்தார். அதன்பின்பு தி.மு.க/அ.தி.மு.க. தான் மாறி மாறித் தொகுதியைக் கைப்பற்றியிருக்கின்றது. இது ஒரு ரிசர்வ் தொகுதி. வேட்பாளர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர் குணநலன்களைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். ஏனெனில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலும் உறவினர்களாகவே இருப்பர்.

ஜெயிக்கப்போகும் எம்.எல்.ஏ.முத்துச் செல்வி என்பதை யாரும் மறுத்துச் சொல்ல முடியாது.

வெற்றி வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த முதல்வரின் சாமர்த்தியத்திற்கு "ஜே" போடலாம், மறைந்த முன்னாள் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாணியில்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.