Monday, January 23, 2012

நேதாஜிக்குப் பாரத ரத்னா விருது 115 வய்திலாவது தரப்படுமா?சிங்கப்பூரில் இந்திய தேசியப் படை வீரர்களின் அணிவகுப்பில் நேதாஜி!

துணிச்சல், தியாகம், தன்மானம், கூர்மையான அறிவாற்றல், எடுத்துக் கொண்ட லட்சியத்தில் அசைக்க முடியாத உறுதி, மலை பிளந்தாலும் நிலை குலையாத மன உறுதி, வெளிப்படையாகப் பேசுதல் ஆகியன் நேதாஜியின் பிறவிக் குணங்கள் என்றே சொல்லலாம்.

ஒரே ஓர் உதாரணம்:-
லஸ்ண்டனில் 1921ல் ஐ.சி.எஸ். தேர்வில் சிறப்பான இடம் பெற்றுத் தேறினார். மாவட்ட ஆட்சித் தலைவருக்கான நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. டன்பர்க் என்பவர் வகுப்பாசிரியர்.

40 மாணவர்கள் இருந்த அந்த வகுப்பில் 11 பேர் இந்தியர்கள். "அரசுக் குதிரைகளை இந்திய வேலைக்காரர்களே பராம்ரித்து வருகின்றனர். அவர்களைக் கண்காணிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்புக்களில் ஒன்று. பொதுவாக இந்தியர்கள் திருடர்கள். குதிரைகளுக்குக் கொள்ளு வைப்பதில், புல் வாங்க்கிப் போடுவதில் பொய்க் கணக்கு எழுதி அரசுப் பணத்தைக் கையாடல் செய்யும் மோசமான புத்தியுள்ளவர்கள். அவர்களிடம் நீங்க்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று பேராசிரியர் பேசிக்கொண்டே போனார்.

ஆத்திரம் தலைக்கேறிய நேதாஜி, எழுந்து நின்று, நிறுத்துங்கள். உங்க்கள் உளறல் பேச்சை எங்க்கள் நாட்டு வேலக்காரர்களைத் திருடர்கள் என்று பேசுவதற்கு உங்க்களுக்கு என்ன அஸ்ருகதை இருக்கிறது." எங்க்கள் நாட்டை அடிமைப்படுத்தி , எங்க்கள் செல்வ வளங்க்களை எல்லாம் சுரண்டிக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் நீங்க்கள்தான் கொள்ளைக்காரர்கள். அதற்க்காக வெட்கப்பட வேண்டியவர்கள் நீங்க்கள்தான். என்று ஆவேசமாகப் பேய்னார்.

அதிர்ந்துபோன அந்தப் பேராசிரியர் அந்த இடத்திலேயே நேதாஜியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இது போன்று எண்ணிறந்த உதாரணங்களைக் கூற முடியும்.

இந்தச் சமூகத்தில் சிலருக்கு விருதுகளால் மட்டுமே பெருமை. ஆனால் தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளால் மட்டுமே விருதுகளுக்குப் பெருமை. இந்த ஆண்டு நேதாஜிக்கு 115 வது பிறந்த நாள். தகுதி வாய்ந்த ஒருவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து, அந்த விருதுக்கு மேலும் பெருமையையும் ஏற்படுத்தி தன்னை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும் பாரத அரசு.


கே.சுப்பிரமணியன், இந்திய வழக்கறிஞர் சங்க்க தேசீய செயற்குழு உறுப்பினர், 94862 80307

நன்றி-ஜனசக்தி.


23-01-2012- இன்று நேதாஜி பிறந்த நாள்1 comments:

 1. செல்வன் holyape@gmail.com
  08:26 (2 hours ago)

  to mintamil

  Images are not displayed. Display images below - Always display images from holyape@gmail.com
  வர வர நம் நாட்டில் விருதுகள் என்பது இறந்தவர்களுக்கு சூட்டபடும் மலர்வளையமாகவும், ஓட்டுக்களை குறிவைத்து ஆடும் நாடகமாகவும், எனக்கு கொடுத்தாய், உனக்கு தரலை என்ற ஈகோ கேமாகவும் ஆகி வருகிறது.இத்தனை பத்மஸ்ரிக்கள், பத்ம பூஷன்கள், பாரத ரத்னாக்கள், கலைமாமணிகள் இருந்தும் நாடு என்னவோ முன்னேறின மாதிரி தெரியலை.டெண்டுல்கருக்கு பாரதரத்னா கொடுக்க சொல்லி ஒரு க்ரூப் லாபி செய்ய, விளையாட்டு வீரர்களுக்கு கொடுப்பதனால் தயான் சந்துக்கு தான் தரணும் என உள்ளூர் வயித்தெரிச்சல் கோஷ்டி மறுலாபி செய்ய..ஏன் விருதுகளில் இத்தனை அரசியல், பாலிடிக்ஸ்?

  ReplyDelete

Kindly post a comment.