Monday, January 23, 2012

நானோ டெக்னாலஜி மூலமாகப் பல சாதனைகளைச் சொல்ல முடியும்




நானோ டெக்னாலஜி என்பது ஒரு பொருளின் அணுக்கள் மற்றும் மூலக் கூறுகளின் அளவை கட்டுப்படுத்துவது குறித்து படிப்பதாகும். ஒரு திண்மப் பொருளை, நானோ மீட்டர் (மிகச்சிறிய) அளவிற்கு கொண்டு செல்லும் போது, அந்த பொருள் அபரிமிதமான ஆற்றலையும், சக்தியையும் பெறுகிறது. அதன்படி, உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களும் மிகுந்த ஆற்றலை உடையதாக இருக்கிறது.

நானோ தொழில்நுட்பம் மூலமாக உயிரியல் மண்டலங்களைக் கூட செயற்கையான முறையில் உருவாக்கலாம். நானோ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் சாதனங்கள் அனைத்தும் எதிர் காலத்தில் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதே உண்மை. இத்தொழில்நுட்பம் மருத்துவம், வேதியியல் மற்றும் சுற்றுப்புறச்சூழல், ஆற்றலை அளித்தல், தகவல் தொடர்பு, கனரக தொழிற்சாலைகள் மற்றும் உணவியல் என சகல துறைகளிலும் பயன்படுகிறது. இதன் அடிப்படையில்தான் தற்போது ஆராய்ச்சியும், புதிய புதிய படிப்புகளும் வந்து கொண்டேயிருக்கிறது.

மருத்துவ துறையில் நானோ: நுண்ணிய அளவிலான ரோபோ, சென்சார்கள், கேமரா மற் றும் இதர பல சாதனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து மருத்துவத்துறையில் பயன் படுத்துவது, உடலை துளையிடாமல் சிகிச்சை அளிப்பது, நோயாளி உடலின் உட்புறத்தை பாதுகாத்து சிகிச்சை அளிப்பது மற்றும் தனிப்பட்ட செல்களை மட் டும் பாதுகாத்து சிகிச்சை அளிப்பது என பல்வேறு வகையான வருங்கால தொழில்நுட்பம் குறித்து இப்படிப்பில் (மெடிக்கல் நானோ டெக்னாலஜி) ஆய்வு செய்யப்படுகிறது.

மெடிக்கல் நானோ டெக்னாலஜி மூலமாக பல சாதனைகளை சொல்ல முடியும். உதாரணமாக நோயாளியின் உடலில், குறிப்பிட்ட பகுதியில் நானோ அளவுடைய துகள் மூலமாக மருந்து பொருட்களை செலுத்தி குணமடையச் செய்யலாம். உயிரியல் மண்டலங்களில் உள்ள மூலக்கூறுகளை கண்காணித்தல், புதிதாக உருவாக்குதல், சரி செய்தல், கட்டுப்படுத்துதல் என அனைத்து செயல் முறைக ளையும் மெடிக்கல் நானோ டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளலாம்.

எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி படிப்பானது, 5 வருட ஒருங்கிணைந்த படிப்பாக தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகிறது. கல்வித் தகுதி: பிளஸ் 2. மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக்கட்டணம் உள் ளிட்ட பிற விவரங்களை www.sastra.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். உதவி: -தினமணி

1 comments:

  1. அருமையான பதிவு நண்பரே!!வாழ்த்துகள்.

    ReplyDelete

Kindly post a comment.