Saturday, December 17, 2011

பாரதியார் சினிமாவை எடுக்கமுடியாமல் ஏழாவதுமனிதன் எடுத்த கதை!



ஏழாவது அறிவின் ஆரவாரம் இல்லாது போயினும், ஏழாவது மனிதன் தமிழ்த் திரையுலகில் வெற்றி முரசு கொட்டிய கதை. சிறந்த இயக்குநருக்கான விருதை 1977ல் கே.ஹரிகரனுக்குப் பெற்றுத் தந்த படம். மாஸ்கோ திரைப்பட விழாவில் பங்கு பெற்ற சிறப்பினைப் பெற்ற படம்.

மும்பையில் பிறந்து வளர்ந்தவர். பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். தமிழில் வாண்டட் தங்கராஜ், ஏழாவது மனிதன் உட்பட மராத்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் எட்டு திரைப்படங்களை இயக்கியவர். 350க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர். வண்ணக் கோலங்கள், திருதிருமாயாண்டி போன்ற தொலைக் காட்சித் தொடர்களை இயக்கியவர்.

பத்து வருடங்க்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், இந்திய சினிமா பற்றிப்பேச சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். தற்போது எல்.வி.பிரசாத் திரைப்படம் மற்றும் தொலக்காட்சி அகடாமியின் இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார்.

முற்போக்குச் சிந்தனையுள்ள வழக்கறிஞ்சர் பாளையங்க்கோட்டை சண்முகம். பாரதியின்பால் ஈடுபாடுகொண்டவர். அவருடன் இணந்து பாரதியார் படம் எடுத்திடத் திட்டமிட்டோம்.

பாரதியைப் பற்றிப் படிக்க, படிக்க, அவரு AUTISTIC கேரக்டர் அதாவது ஒரு
மாதிரி மென்டலி சேலஞ்ச்ட் ந்னு எனக்குள்ள் ஒரு எண்ணம் உருவானது.தாவது அவருக்கு ந்டைமுறை வாழ்க்கை எல்லாம் தெரியாது. திறமையானவரு. குடும்ப வாழ்க்கை எல்லாம் தொலைச்சுட்டாரு.

பாரதியார்ங்க்கிற கேரக்டருக்கு நிறைய வித்தியாசம் இருந்தது. அத எப்படி ஒரு பாத்திரமாக்குறது என்று குழப்பிட்டேன். படமெடுத்தா அவரைப்பற்றிய உண்மையச் சொல்லியாகணும்.ஏன் அவறைப்பற்றிய மக்களின் அபிப்பிராயத்தைக் கெடுக்கணும்னு ரொம்ப யோசித்து, பாரதியார் கதையை விட்டுட்டு வேற கதையை எடுக்க முடிவு செய்தோம்.

பாளை சண்முகம் தாழையூத்து செமிண்ட் பேக்டரி தொழிற்சங்க்கத்தலைவர். அதோட பல விஷ்யங்க்களைச் சேர்த்து ஏழாவது மனிதன் படம் பண்ணி விட்டனர். பாரதி படத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்தையும் ஏழாவது மனிதன் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

இன்றளவும் அத்தகைய பாடல்கள் வெளிவந்ததில்லை என்று அறுதியுட்டுக் கூறலாம்..

இதற்கிணயானதொரு தொழிலாளர் படம் வந்ததில்லை சூளுரைக்கலாம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.