Saturday, December 17, 2011

தாய்ப்பாலில் தங்கம்! -தமிழ் இலெமுரியா

தாய்ப்பாலிலிருந்து நெக்லஸ், பிரஸ்லெட் போன்ற ஆபரணங்களை உருவாக்கிட இயலும் என்று இலண்டனில் ஒரு குழு செய்து காண்பித்துள்ளது.

இலண்டனில் முதன் முதலில் பால் நெக்லஸ்களை உருவாக்கியுள்ளனர். பிரஸ்லெட் மற்றும் பிறவகைகளையும் உருவாக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

தாய்ப்பாலுடன் அசிட்டிக் அமிலத்தை நன்கு கொதிக்க வைப்பதன் மூலம் தாய்ப்பாலில் உள்ள கேசின் என்னும் புரதம் இந்தக் கலவையை பிளாஸ்டிக் போன்று மாற்றி விடுகின்றது. பின்னர் அதில் வண்ணம் பூசி நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுக்களில் ஊற்றி ஆபரணங்க்களாக மாற்றப்படுகின்றதாம்.

இதுபோன்ற நகை வடிவமைப்பை பால்முத்து என்று அழைக்கின்றனர். வணிகரீதீயில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் தகவல்.

மகாராட்டியா மாநிலத்திலிருந்து வருகின்ற தமிழ் இலெமுரியா என்ற மாத இதழில் தை2011ல் இடம் பெற்றிருந்த தகவல் இது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.