Friday, November 11, 2011

திரும்பத் திரும்ப மின்சாரமின்றி எழுதக் கூடிய "i2R e-paper"





தாளில் எழுதியதை அழித்துவிடலாம்; தாளுக்கு எந்தவிதச் சேதமுமின்றி: இவ்வாறு சுமார் 260தடவை அழிக்கலாம். மீண்டும் எழுதலாம். எழுதியதை அழிப்பதற்கு மின்சார உதவி தேவை இல்லை. எழுதிய பேப்பரை “பேக்ஸ்” மெஷின் போன்ற ”தெர்மல்” மெஷினுக்குள் செலுத்தினால் எழுதியவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.

இந்த அறிவியல் தொழில் நுட்பத்தை டிஜிடல் புத்தகங்கள், எலக்ட்ரானிக் புல்லட்டின் போர்ட்ஸ் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தலாம். என்கின்றனர் தைவான் அறிவியலாளர்கள்.

காகிதங்களுக்காக ஆயிரக்கனக்கில் மரங்கள் வெட்டப்படுகின்றன. உலகச் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகின்றது. இதனைத் தடுத்திட தைவான் அறிவியல் தொழில்நுட்பம் நிச்சயமாக உதவும் என்று எதிர்பார்ப்போம்.



0 comments:

Post a Comment

Kindly post a comment.