Thursday, November 10, 2011

5 இணையதளங்களை இலங்கை முடக்கியது

முக்கிய அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் "இழிவுபடுத்திய' குற்றச்சாட்டின் அடிப்படையில், 5 இணையதளங்களின் செயல்பாட்டை இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் முடக்கிவைத்துள்ளது.

லங்காநியூஸ்.காம், ஸ்ரீலங்காமிரர்.காம், ஸ்ரீலங்காகார்டியன்.காம், பப்பராஸிகாசிப்9.காம், லங்காவேநியூஸ்.காம் ஆகிய 5 இணையதளங்களின் செயல்பாட்டை முடக்கிவைத்துள்ளதாக ஆணையத்தின் தலைவர் அனுஷா பல்பிடா திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று பல்வேறு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பற்றி தனிப்பட்ட முறையில் இந்த இணையதளங்கள் விமர்சித்து வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.