Friday, November 11, 2011

உலக அளவில் கின்னஸ் சாதனை புரிந்த இந்திய பின்னணிப் பாடகி!



அண்மையில் லண்டனில் நிகழ்ந்த ஆசியாவிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்த்தியமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் சாதனை நிகழ்த்தியது இவர்க்கே தெரியாது.

விஷ்வாஸ் நெருர்கர் இவர் குறித்த சரியான தகவல்களை கின்னஸ் நிறுவனத்திற்குக்க் கொடுத்தததன் காரணமாகவே இந்தப் பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ள இவர் ஓர் இந்தியப் பாடகி.

78சிங்கிள் ஸ்டூடியோ பதிவுகளில் உலக அளவில் அதிகப்பாடல்களைப் பாடியதற்காகவே இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தம்மாரேதம், மெஹபூபாமெஹபூபா, பியா தூ ஆப் ஆஜா, சுராலியா ஹை தும்னே ஜோதில் சோ போன்ற பல பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர்.

இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில்11000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றவர்.

இப்பொழுது ஆஷா போன்ஸ்லேதான் அந்தப் பின்னணிப் பாடகி என்று நிச்சயமாக ஏற்பட்டிருக்குமே ? ஆம் உங்கள் நினைவு சரிதான்.

78சிங்கிள் ஸ்டுடியோ பதிவுகளில் உலக அளவில் அதிகப் பாடல்களைப் பாடியமைக்காக கின்னஸ் சாதனைச் சான்றிதழ் பெற்ற இசைக் குயில் ஆஷா போன்ஸ்லேயையை வாழ்த்துவோரோடு நாமும் இணைந்து கொள்வோம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.