Saturday, November 12, 2011

உலக நீரிழிவு தினம்: தாஜ்மகால் நாளை நீல நிறத்தில் ஒளிர்கிறது


http://www.thaalamnews.com

நீரிழிவு தினம் வருகிற 14-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோயால் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி விழிப்பு ணர்வை ஏற்படுத்த மத்திய சுகாதார அமைச்சகமும், நீரிழிவு நோய் தடுப்பு அமைப்பும் முடிவு செய்துள்ளன. அதன்படி உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை நீல நிறத்தில் ஒளிரூட்ட முடிவு செய்துள்ளது.

நீரிழிவு நோயின் உலக அடையாள சின்னம் நீலநிற வட்டம் ஆகும். இதனால் நாளை (13-ந்தேதி) மட்டும் ஒளி மூலம் தாஜ்மகாலை நீல நிறத்தில் ஒளிரச் செய்யப்படுகிறது. இதற்கு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக தாஜ்மகால் நீல நிறத்தில் ஒளிரச் செய்யப்படுகிறது. இதேபோல பாரம்பரியமிக்க ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி ஆகியவை நீல நிறத்தில் ஒளியூட்டப்படுகின்றன.

தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்பு பாரம்பரிய மிக்க 3 கட்டிடங்களுக்கு நீல நிறத்தில் ஒளிரச்செய்ய அனுமதித்தது இதுவே முதல் முறையாகும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.