Monday, November 14, 2011

சர்க்கரை நோயில் நடப்பது என்ன?

http://kadayanallur.org

சர்க்கரை அதிகமாவதற்கு இன்சுலின் குறைபாடு மட்டும் காரணமல்ல. குளுக்கோகான் அதிகமாகச் சுரப்பதும் ஒரு காரணம்.

இயல்பாக, சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 70 முதல் 110 வரையும், சாப்பிட்டபின் 140க்கு அதிகமாகாமலும் இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் குறைப்பது இன்சுலின் என்ற ஹார்மோன்.சர்க்கரையை அதிகமாக்கும் ஹார்மோன் எது தெரியுமா?

அதுதான் குளுக்கோகான். கணையத்திலுள்ள பீட்டா செல்களிலிருந்து இன்சுலின் குளுக்கோகானும்தான் ரத்தத்தில் சர்க்கரையை சீராக வைக்க உதவுகின்றன.

சர்க்கரைநோய் இல்லாதவருக்கு சாப்பிட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள்:


உணவு ஜீரணமாகி ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது.


அதிகமாகும் சர்க்கரை கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கிறது.


இன்சுலின் சுரந்து குளுக்கோஸை செல் களுக்குள் அனுப்புகிறது.


கல்லீரலிலிருந்து குளுக்கோஸ் உற்பத்தியாவதை இன்சுலின் தடுக்கிறது.


இதனால் ரத்தத்தில் சர்க்கரை சீராக வைக்கப் படுகிறது.


(சாப்பிட்டு 2-3 மணி நேரம் கழித்து)


ரத்தத்தில் சர்க்கரை குறைகிறது. இதனால் இன்சுலின் சுரப்பது குறைகிறது.


உடலின் அன்றாட இயக்கத்திற்கும், மூளை செயல்படவும் குளுக்கோஸ் அவசியம். சாப்பிடாத போது குளுக்கோஸ் குறைவதை, கணையத்திலுள்ள ஆல்பா செல்கள் உணர்ந்து குளுக்கோனைச் சுரக்கிறது.


குளுக்கோகான், கல்லீரலிலிருந்து குளுக்கோஸை வெளியேற்றுகிறது.இதனால் ரத்தத்தில் சர்க்கரை குறைந்து விடாமல் சீராக வைக்கப்படுகிறது.


இன்சுலின் அதிகமானால் குளுக்கோகான் குறைகிறது. குளுக்கோகான் அதிகமானால் இன்சுலின் குறைகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு: சாப்பிட்டபின்: சர்க்கரை அளவு அதிகமாகிறது.


இதற்கு ஏற்றவாறு இன்சுலின் சுரப்பதில்லை. குறைவாகச் சுரக்கும் இன்சுலினும் வேலை செய்வதில்லை. காரணம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை.


சாப்பிட்டவுடன் இன்சுலின் அதிகமானால் தான் குளுக்கோகான் குறையும். இன்சுலின் அதிகமாகாததால் தொடர்ந்து குளுக்கோகான் சுரந்து கொண்டேயிருக்கிறது.


இது கல்லீரலைத் தூண்டி குளுக்கோஸை வெளியேற்றுவதால் உடலில் சர்க்கரை மேலும் அதிகரிக்கிறது.

வருமுன் காத்தலே நலம்! வந்தபின் தொடர் சிகிச்சைதான் ஆயுள் வரை. அதிலும் உண்ணும் மருந்துகளின் வீரியத்திற்கேற்ப உடலின் உறுப்புக்கள் பாதிப்பது நிச்சயம்.

அலோபதி தவிர இதர மருத்துவ முறைகள் மூலம் பலன்கள் இருந்தாலும், இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நம்மால் கட்டுப்பாட்டுடன் ஒஇன்பற்ற இயலவில்லை. சர்க்கரையின் அளவு த்டீர் என்று அதிகரித்தோ/குறைந்தோ உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே, வருமுன் காத்தலே நலம்!

1 comments:

  1. உலக நீரிழிவு தினத்துக்கான சிறப்புப் பதிவு.நன்று.

    ReplyDelete

Kindly post a comment.